வேளாண்மை அறிவியல்

வேளாண்மை அறிவியல் (Agricultural science) என்பது உயிரியலின் அகல்விரிவான பலதுறை சார்ந்த அறிவி'யல் புலமாகும்.

வேளாண்மையைப் புரிந்துகொள்ளவும் நடைமுறையில் பின்பற்றவும் இயற்கை அறிவியலும் பொருளியலும் சமூக அறிவியலும் சார்ந்த பலதுறை அறிவு வேண்டப்ப்படுகிறது. கால்நடை அறிவியல் மட்டும் இதுறையின் வரையறைக்குளபடங்காது.

வேளாண்மை,'வேளாண்மை அறிவியல், உழவியல்

இந்த மூன்றுமே வெவ்வேறு கருப்பொருள்களைக் கொண்டவை என்றாலும் இவை அடிக்கடி குழம்பிக்கொள்ளப் படுவதும் உண்டு:

  • வேளாண்மை என்பது மாந்தன் பய்ன்பாட்டுக்காக தாவரங்களையும் விலங்குகளையும் உருவாக்க சுற்றுச்சூழலை உருமாற்றும் செயல்பாடுகளின் தொகுப்பாகும். வேளாண்மை உழவியல் ஆய்விலும் அதில் உருவாகிய நுட்பங்களிலும் அக்கறை கொள்கிறது.
  • உழவியல் என்பது தாவரங்கள் சார்ந்த பயிர்களை ஆய்ந்து மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியும் உருவாக்கமும் எனலாம்.

வேளாண்மை அறிவியலில் பின்வரும் புலங்களுக்கான ஆராய்ச்சியும் உருவாக்கமும் மேற்கொள்ளப்படுகிறது: தாவர இனவளர்ப்பும் மரபியலும்

  • தாவர நோயியல்
  • தோட்டக்கலை
  • மண் அறிவியல்
  • பூச்சியியல்
  • விளைச்சல் நுட்பங்கள் ( எ.கா., பாசன மேலாண்மை, பரிந்துரைத்த தழைச்சத்து உள்ளீடுகள்(nitrogen inputs)
  • வேளாண்மை ஆக்கத்திறனை அளவியலாகவும் பண்பியலாகவும் மேம்படுத்தல் (எ.கா., வறட்சிதாங்கும் பயிர்கள், விலங்குகளின் தேர்வு, புதிய தீங்குயிர்கொல்லிகளை உருவாக்கல், விளைச்சல் உணர்தகு தொழில்நுட்பங்கள், பயிர்வளர்ச்சிப் படிமம் உருவாக்கல், ஆய்வக உயிர்க்கல வளர்ப்பு நுட்பங்கள்)
  • பயிர் விளைச்சல், விலங்கு வளர்ப்பு மீதான களைகள், பூச்சிகள், நோயீனிகள், புழுக்கள், தீங்குயிர்கள் ஆகியவற்றின் விளைவுகளைக் குறைத்தல்.
  • முதன்மை விளைபொருள்களை நுகர்பொருள்களாக மாற்றுதல் ( எ.கா., பாற்பொருள்களை உருவக்கிப் பேணி பொட்டலங் கட்டுதல்)
  • தீங்குதரும் சுற்றுச்சூழல் விளைவுகளைத் தவிர்த்தலும் திருத்தலும் ( எ.கா., மண்வளம் தரங்குறைதல், கழிவு மேலாண்மை, உயிரியல் மறுசீராக்கம்]])
  • பயிர்விளைச்சல் படிமம் சார்ந்த கோட்பாட்டுநிலை விளைச்சல் சூழலியல்
  • உலக ஏழைகளுக்கு உணவளிக்கும்தரிப்பு வேளாண்மை எனப்படும் மரபான வேளாண்மை அமைப்புகள். இந்த அமைப்பு தொழிலக வேளாண்மையை விட இயற் கைச் சூழல் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை நன்கு பேணுவதால் முதன்மை பெறுகிறது. மேலும், இது பல புதிய வேளாண்முறைகளைவிட நீடிப்புதிறம் வாய்ந்ததாகவும் அமைகிறது.
  • சீனா, இந்தியா, பிரேசில், ஐக்கிய அமெரிக்கா, ஐபோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளைச் சிறப்பான கவனத்தில் எடுத்துகொண்டு உலகளாவிய அடிப்படையில் உணவு விளைச்சலையும் தேவையையும் திட்டமிடல்.
  • வேளாண்வளங்களையும் சுற்றுச்சூழலையும் சார்ந்த்ஹ பல்வேறு அறிவியல் புலங்கள் ( எ.கா. மண் அறிவியல், வேளாண் காலநிலையியல்); வேளான்பயிர்கள், கால்நடைகளின் உயிரியல் ( எ.கா. பயிரீட்டு அறிவியல், விலங்கியல், இவை சார்ந்ததும் இவற்றை உள்ளடக்கியதுமான அறிவியல் புலங்கள், எ.கா. அசைபோடும் ஊட்டவியல், பண்ணை விலங்கு நலவாழ்வு); வேளான் பொருளியல் ஊரகச் சமூகவியல் போன்ற புலங்கள்; வேளாண் பொறியியல் சார்ந்த பிற அறிவியல் புலங்கள்.

=வேளாண்ம உயீரித் தொழில்நுட்பம்

வேளாண்ம உயீரித் தொழில்நுட்பம் என்பது தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகிய உயிரிகளை மாற்ற, அறிவியல் கருவிகளையும் நுட்பங்களையும் பயன்படுத்தும் சிறப்பு வேளாண்மைப் புலமாகும். இதற்கு மரபன் பொறியியல், மூலக்கூற்றுக் குறிப்பான்கள், பாலூசிகள், திசு வளர்ப்பு ஆகிய நுட்பங்கள் பயன்கொள்ளப்படுகின்றன.

உரம்

மண் ஒட்டுமொத்தக் கரிமப் பொருள் வளத்தை மீட்க எடுக்கும் பெயர்நிலையின் போது, உரத்தைச் சற்றே கூடுதலாகப் பயன்படுத்தாவிட்டால் விளைச்சல் குறையும். இந்த விளைச்சல் குறைவுக்குக் காரணம் பயிரிட்ட பின் நிலவும் மண் எசத்தில் இருந்து பயிர் தனக்கு வேண்டு தழைச்சத்தைப் பெறமுயத நிலைமையே ஆகும். இப்பெயர் நிலைக் காலம் சில மாதங்களில் இருந்து பல்லாண்டுகள் வரைகூட நீடிக்கலாம். இது களச் சுற்றுச்சூழலைப் பொறுத்தும் பயிரின் கரிமப் பொருளில் அமையும் கரிமத் தனிமத்துக்கும் காலகத் தனிமத்துக்கும் இடையில் உள்ல விகிதத்தைப் பொறுத்தும் அமையும்.

வரலாறு

பதினெட்டாம் நூற்றாண்டில் யோகான் பிரெடரிக் மேயர் எனும் வேளான்மை அறிஞர் துத்தநாக நீரேற்ற கால்சியச் சல்பேட்டை உரமாகப் பயன்படுத்துவது சார்ந்த செய்முறைகளைச் செய்து பார்த்தார்.

ஜான் இலாவேசும் ஜோசப் என்றி கில்பர்ட்டும் 1843 இல் நீண்ட காலக் களச் செய்முறைகளை இங்கிலாந்தில் அமைந்த உரோதாசுடெடு ஆராய்ச்சி நிலையத்தில் செய்யத் தொடங்கினர். இவற்றில் சில செய்முறைகள் இன்னமும் கூடத் தொடர்கின்றன.

ஐக்கிய அமெரிக்காவில், 1887 ஆம் ஆண்டைய ஏட்சு சட்டத்திற்குப் பிறகு வேளாண்மையில் ஓர் அறிவியல் புரட்சி தோன்றியது. இச்சட்டத்தில் வேளாண்மை அறிவியல் எனும் சொல் ஆளப்பட்டது. இச்சட்டம் உழவர்களின் செயற்கை உரங்களின் உள்ளியைபுகளை அறியும் ஆர்வத்தால் விளைந்தது. ஆனால் 1917 ஆம் ஆண்டைய சுமித்-அகுசு சட்டம் வேளாண்மைச் சட்டம் வேளண்மைக் கல்வியை முதைய மரபான முறைகளுக்கே மாற்றியது. என்றாலும் அறிவியல்முறையிலான வேளண்மைக் கல்வி கட்டமைக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவில் 1906 ஆண்டுக்குப் பிறகு, 44 ஆண்டுகலுக்குத் தனியார் முத்லீட்டைவிட பொது அரசு முதலீடு வேளாண்மை ஆராய்ச்சிக்கு ஒதுக்கபட்டு வந்தது.:xxi

வளரும் நாடுகளில் 1960 களுக்குப் பின்னரே பசுமைப் புரட்சி எனப்பட்ட செறிநிலை வேளாண்மை உருவாக்கப்பட்டது; இது உயர்விளைச்சலுக்காக பயிர்களையும் விலங்குகளையும் தேர்ந்தெடுத்து வளர்ப்பதில் ஏற்பட்ட முன்னேற்றங்களோடும் செயற்கை உரங்களையும்தீங்குயிர்கொல்லிகளைக் கூடுதலாகப் பயன்படுத்துவதோடும் நெருக்கமான உறவு பூண்டிருந்தது.

இயற்கையை இடைமறித்த மிகப் பழழையதும் பேரளவிலானதுமான வேளாண்மைத் தொழில் இருப்பதால், வேளாண்மை சுற்றுச்சூழலைப் பெரிதும் தாக்கமுறச் செய்துள்ளது. குறிப்பாக அண்மைக் கால செறிநிலை வேளாண்மையும் பொதுவான தொழில் வளர்ச்சியும் மக்கள்தொகை வளர்ச்சியும் வேளாண்மை அறிஞரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலை பல புதிய அறிவியல் புலங்கள் தோன்ற காரணமாகிவிட்டது. இவற்றில் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, நிலக் கிடப்பியல், மரபன்தொகையியல், வேளாண்மை மெய்யியல், பொருளியல் விளைபொருளாக அமையாத உணவாக்கத் தொழில் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவை உள்ளடங்கும். உண்மையில், சுற்றுச்சூழல் தாக்கத்துக்கும்வேளாண்மை வளர்ச்சிக்கும் இடையிலான ஊடாட்டங்கள் வேளாண்மை அறிவியலை மேலும் ஆழமாக புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத் தேவையை உருவாக்கியுள்ளது.

உயிரித் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தகவல் கையாளலும் தேக்குதலும் போன்ற புதிய தொழிநுட்பங்களும் இக்காலத் தொழிநுட்ப முன்னேற்றங்களும் மரபணுப் பொறியியல், வேளாண் இயற்பியல், மேனிலைப் புள்ளியியல் துல்லியமான வேளாண்மை போன்ற புதிய ஆராய்ச்சிப் புலங்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன . வேளானமையில் மாந்தன் இயற்கை ஊடாட்டம் சார்ந்த இயற்கை, சமூக அறிவியல் புலங்களும் வேளாண்மை வரலாறு, மரபு வேளாண்மை, வேளாண்மை-சமயம் வேளாண் விளைச்சல் அமைப்புகளின் பொருள்சாரா கூறுகள் ஆகியவற்றின் புரிதலை மேம்படுத்தியுள்ளன .

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வேளாண்மை அறிவியல் வேளாண்மை,, உழவியல்வேளாண்மை அறிவியல் =வேளாண்ம உயீரித் தொழில்நுட்பம்வேளாண்மை அறிவியல் உரம்வேளாண்மை அறிவியல் வரலாறுவேளாண்மை அறிவியல் மேலும் படிக்கவேளாண்மை அறிவியல் மேற்கோள்கள்வேளாண்மை அறிவியல் வெளி இணைப்புகள்வேளாண்மை அறிவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழில் கணிதச் சொற்கள்உரிச்சொல்திராவிட மொழிக் குடும்பம்புணர்ச்சி (இலக்கணம்)இமயமலைசோழர்வரலாறுஇடலை எண்ணெய்கிராம ஊராட்சிஇலக்கியம்சப்தகன்னியர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்திருப்பாவைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஆனைக்கொய்யாநயன்தாராமாத்திரை (தமிழ் இலக்கணம்)சீமையகத்திதிவ்யா துரைசாமிதமன்னா பாட்டியாஉடுமலைப்பேட்டைஏப்ரல் 24ஒற்றைத் தலைவலிதனுஷ்கோடிஇல்லுமினாட்டிசீமான் (அரசியல்வாதி)பெண் தமிழ்ப் பெயர்கள்ஆசியாகொல்லி மலைமயில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தினமலர்திரிசாகடல்மோகன்தாசு கரம்சந்த் காந்திஅரவான்இந்திய தேசிய சின்னங்கள்உலா (இலக்கியம்)செவ்வாய் (கோள்)மகரம்பாலை (திணை)கா. ந. அண்ணாதுரைராஜேஸ் தாஸ்சுற்றுச்சூழல் மாசுபாடுவேளாளர்நீர் மாசுபாடுவளையாபதிபிரியங்கா காந்திபிலிருபின்இராமாயணம்முக்குலத்தோர்பிரதமைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கார்ல் மார்க்சுவிஷ்ணுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சச்சின் டெண்டுல்கர்கருக்கலைப்புபுற்றுநோய்ரயத்துவாரி நிலவரி முறைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பாரத ஸ்டேட் வங்கிவித்துதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்நற்றிணைவிஜயநகரப் பேரரசுசாகித்திய அகாதமி விருதுதமிழ் இணைய மாநாடுகள்தமிழ் எண் கணித சோதிடம்திராவிசு கெட்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஜிமெயில்சிற்பி பாலசுப்ரமணியம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்தமிழ்நாட்டின் அடையாளங்கள்பெண்ணியம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)விஸ்வகர்மா (சாதி)🡆 More