பிராங்க் கேப்ரியோ

பிரான்செசுகோ கேப்ரியோ (Francesco Caprio, பிறப்பு நவம்பர் 24, 1936) என்பவர் ஒரு அமெரிக்க நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார், இவர் ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உயர் கல்விக்கான ரோடு தீவு ஆளுநர் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

காட் இன் பிராவிடன்சு என்ற நிகழ்ச்சியில் இவரது நீதித்துறைப் பணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பார்க்கிங் வார்சு என்ற அமெரிக்க போக்குவரத்து விதிமீறல் தொடர்பான உண்மைநிலை நிகழ்ச்சி தொடரிலும் தோன்றினார்.

பிராங்க் கேப்ரியோ
பிராங்க் கேப்ரியோ
2018 இல் பிராங்க் கேப்ரியோ
ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
1985 – சனவரி 2023
பின்னவர்சான் லோம்பார்டி
வார்டு 13 பிராவிடன்சு நகர மன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1968
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரான்செசுகோ கேப்ரியோ

நவம்பர் 24, 1936 (1936-11-24) (அகவை 87)
பெடரல் கில், பிராவிடன்சு, ரோடு தீவு, ஐ.அ
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்சாய்சு இ. கேப்ரியோ
பிள்ளைகள்5
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க இராணுவம்
சேவை ஆண்டுகள்1954–1962
அலகுரோட் தீவு இராணுவ தேசிய காவலர்

2017 ஆம் ஆண்டில், இவரது நீதிமன்ற தீர்ப்பு காணொளிகள் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தன, இதில் 15 மில்லியனுக்கு மேலான பார்வைகளை பெற்றார். 2022 ஆம் ஆண்டில், காட் இன் பிராவிடன்சு நிகழ்ச்சியின் பார்வைகள் 500 மில்லியனை நெருங்கியது.

தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி

ரோடு தீவில் உள்ள பெடரல் கில் பகுதியில் அன்டோனியோ காப்ரியோவுக்கு பிறந்த மூன்று மகன்களில் இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது தந்தை அன்டோனியோ காப்ரியோ இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர், பால் பழ வியாபாரம் செய்து வந்தார்.

இவர் பிராவிடன்சு பொதுப் பள்ளிகளில் தொடக்கக்கல்வியை கற்றார், கல்வி கற்கும் போது பாத்திரம் கழுவுவது, காலணிகளை சுத்தப்படுத்துவது ஆகிய பணிகளை ஒரு பகுதியாக செய்தார். ரோடு தீவிலுள்ள பிராவிடன்சு மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், உயர்நிலைப் பள்ளியில் 1953 ஆம் ஆண்டு மல்யுத்தத்தில் மாநில பட்டத்தை வென்றார். பிராவிடன்சு கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு, பிராவிடன்சில் உள்ள ஒப் உயர்நிலைப் பள்ளியில் கல்வியை கற்பிக்கும் ஆசிரியராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். ஒப் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்பிக்கும் போது, பாசுடனிலுள்ள சப்போல்க் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரவுப் பள்ளியில் சட்டக் கல்விப் பயின்றார். இது இவரை சட்டத்துறையில் பணி செய்ய வழி வகுத்தது. 1954 முதல் 1962 வரை 876 வது போர் பொறியாளர் படையணியில் தேசிய காவலில் பணியாற்றினார். அக்காலத்தில், நரகன்செட்டில் உள்ள கேம்ப் வர்னும், பென்சில்வேனியாவில் உள்ள போர்ட் இண்டியன்டவுன் கேப் ஆகிய இடங்களில் இருந்தார்.

தொழில்

1962 முதல் 1968 வரை பிராவிடன்சு நகர மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1970 இல் ரோட் தீவு சட்டத்துறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டார், குடியரசுக் கட்சியின் இரிச்சர்ட் ஜே. இசுரேலிடம் தேர்தலில் தோல்வியடைந்தார். 1975 இல் ரோட் தீவு அரசியலமைப்பு மாநாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஐந்து சனநாயக தேசிய மாநாடுகளுக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோட் தீவு பல்கலைக்கழகம், ரோட் தீவு கல்லூரி, ரோட் தீவு சமூகக் கல்லூரி ஆகியவற்றிற்கான முக்கிய முடிவுகளைக் மேற்கொள்ளும் உயர் கல்விக்கான ரோட் தீவு ஆளுநர் வாரியத்திற்கு தலைமை தாங்கினார். 1985 முதல், பிராவிடன்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். இவர் ரோட் தீவு, நாரகன்செட்டில் உள்ள கடலோர காவல்படை உணவகத்தில் பங்குதாரராகவும் உள்ளார்.

கேப்ரியோ சனவரி 2023 இல் ஓய்வு பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கேப்ரியோ சாய்சு இ. கேப்ரியோவை மணந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்: பிராங்க் டி. கேப்ரியோ, டேவிட் கேப்ரியோ, மரிசா கேப்ரியோ பெசுசே, சான் கேப்ரியோ மற்றும் பால் கேப்ரியோ. பிராங்க் கேப்ரியோ பாசுடன் ரெட் சாக்சு என்ற பாசுடனில் உள்ள அமெரிக்க தொழில்முறை அடிபந்தாட்ட அணியின் ரசிகர்.

அண்மையில் தனது 87வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு, திசம்பர் 6, 2023 அன்று, முகநூல் மற்றும் யூடியூப்பில் வெளியிட்ட காணொளியில், தனக்கு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்தார். இவருக்கு ஆதரவளிக்க விரும்புபவர்கள், இவரை தங்களின் பிரார்த்தனைகளில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார், இவரை நன்றாக கவனித்துக்கொண்ட மருத்துவர்களைப் பாராட்டினார்.

மேற்கோள்கள்

Tags:

பிராங்க் கேப்ரியோ தொடக்க வாழ்க்கை மற்றும் கல்விபிராங்க் கேப்ரியோ தொழில்பிராங்க் கேப்ரியோ தனிப்பட்ட வாழ்க்கைபிராங்க் கேப்ரியோ மேற்கோள்கள்பிராங்க் கேப்ரியோபிராவிடென்ஸ்றோட் தீவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாண்டியர்வெப்பம் குளிர் மழைஜெயம் ரவிவெப்பநிலைசன்ரைசர்ஸ் ஐதராபாத்ஆபிரகாம்சைவத் திருமுறைகள்திருப்பதிகணையம்பெயர்ச்சொல்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சனீஸ்வரன்பூப்புனித நீராட்டு விழாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமன்னா பாட்டியாஔரங்கசீப்இந்திய தேசிய காங்கிரசுசங்க காலப் புலவர்கள்பாரத ரத்னாபஞ்சாப் கிங்ஸ்விசயகாந்துகொல்லி மலைகம்பராமாயணம்தாவரம்வேதம்போதைப்பொருள்பிரஜ்வல் ரேவண்ணாகர்ணன் (மகாபாரதம்)வினோஜ் பி. செல்வம்அகத்திணைகுக்கு வித் கோமாளிகுதிரைமலைநெல்காச நோய்மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்சிவனின் தமிழ்ப் பெயர்கள்ஆய்த எழுத்து (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஈ. வெ. இராமசாமிதட்டம்மைகேட்டை (பஞ்சாங்கம்)முக்கூடற் பள்ளுவேதநாயகம் சாஸ்திரியார்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நவக்கிரகம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)முல்லைப்பாட்டுஹரி (இயக்குநர்)நந்தா என் நிலாசிவன்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்து சமயம்திருக்குறள்காதலும் கடந்து போகும்வீட்டுக்கு வீடு வாசப்படிமுடியரசன்மத்தி (மீன்)பர்வத மலைஆசாரக்கோவைசடுகுடுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தொழிற்பெயர்வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்நான்மணிக்கடிகைவிராட் கோலிசீரகம்சே குவேராதிரிசாகல்லணைதொழிலாளர் தினம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வடிவேலு (நடிகர்)கிராம நத்தம் (நிலம்)பருத்திவீரன்கர்மாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்🡆 More