வாழ்தகு வேளாண்மை

வாழ்தகு வேளாண்மை (subsistence agriculture) அல்லது பிழைப்புநிலை வேளாண்மை அல்லது தரிப்புநிலை வேளாண்மை என்பது உழவர்கள் தமக்கும் தம் குடும்பங்களுக்கும் மட்டும் போதுமான உணவுப் பயிரை மேற்கொள்ளும் வேளாண்மையாகும்.

இவ்வகை வேளாண்மையில் வாழ்க்கையைத் தரிக்கவைப்பதற்கு மட்டும் அதாவது களத்தேவைகளுக்கு மட்டுமே பயிரீடு நிகழ்கிறது. விற்பனைக்கு உபரி ஏதும் மிஞ்சாது. இம்முறையில் ஓராண்டில் குடும்பத்துக்கு வேண்டிய உணவுக்கும் உடைக்கும் மட்டுமே பயிரீடும் கால்நடை வளர்ப்பும் மேற்கொள்ளப்படும் . அடுத்த ஆண்டுக்கான தேவையளவுக்கே பயிர்நடவு மேற்கொள்ளப்படும். தோனி வாட்டர்சு எழுதுகிறார்: " வழ்தகுநிலை உழவர்கள் பயிரிட்டு, உண்டு, உடுத்து வீடுகட்டி வாழும் மக்களாவர்; இவர்கள் சந்தைகளுக்க்குச் சென்று அடிக்கடி கொள்வினை செய்வதில்லை."

வாழ்தகு வேளாண்மை
காமரூன் மலைச்சரிவில் தாரோ வயலில் பாக்வேரி உழவர் பணிபுரிதல் (2005).

வாழ்தகு வேளாண்மையில் தன்னிறைவே முதன்மையான நோக்கம் என்றாலும், வாழ்க்கைத் தேவை சார்ந்த பொருள்களுக்காக உழவர்கள் ஓரளவுக்கு வணிகத்திலும் ஈடுபடுகின்றனர். இவற்றில் சருக்கரை, கூரை இரும்பு தகடுகள், மிதிவண்டிகள், ஆடைவகைகள். ஆகியன அட ங்கும். இன்று வளரும் நாடுகளில் வாழும் பெரும்பாலான உழவர்களின் வணிகப் பரிமாற்றப் பணமதிப்பு, வளர்ந்த நாட்டுச் சந்தை உழவர்களைவிட குறைவாகவே இருந்தாலும், இவர்கள் தங்களது சந்தையில் தேவைப்படும் பொருள்வளங்களை வழங்கவல்ல சிறப்பு செய்திறனால் வணிகத் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

வாழ்தகு வேளாண்மை வகைகள்

எரிபுன வேளாண்மை

எரிபுன வேளாண்மை அல்லது பெயர்ச்சிநிலை வேளாண்மையில் குறிப்பிட்ட காட்டின் பகுதி மரங்களை, எரித்து அப்பகுதியில் வேளாண்மை செய்யப்படுகிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மண்வளம் குன்றும். அப்பகுதியைத் துறந்து காட்டின் வேறொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து முன்பு போலவே மரங்களை அகற்ரி எரித்து வேளாண்மை செய்ய புதிய நிலப்பகுதியை உருவாக்குவர். வேளாண்மை செய்வதற்கான இந்தச் செய்ல்முறை தொடர்ந்து நிகழும். துறந்த பகுதியில் தாவரத் தொடர்வால் காடு மீண்டும் வளர்ந்து மண் இழந்த வளத்தை மீட்கும். உயிர்த்திரட்சியும் மீட்கப்படும். அடுத்த பத்தாண்டுகட்குப் பிறகு உழவர்கள் இங்கு வேளாண்மையைத் தொடர மீண்டும் வரலாம். மக்கள்தொகை மிக அருகியுள்ள போதே இவ்வகை வாழ்தகு வேளாண்மையைப் பேணலாம்; ஆனால், மக்கள்தொகை அடர்த்தி பேரளவாக உள்ளபோது காடுகளை அடிக்கடி வெட்டுவதால், மண் வளம் மீள்வது அதே வேகத்தில் இயலாமற் போகிறது. இதனால் பேரளவான காட்டுப் பசுமைக்கவிப்பு அகற்ர வேண்டியதாகிறது. எனவே, காட்டுப் பகுதி மரங்கள் இல்லாத புதர்க்காடாகி, காடழிய நேர்வதால் மண் அரிப்பு கூடிவிடுகிறது. Shifting cultivation is called Dredd in India, Ladang in Indonesia, Milpa in Central America and Mexico and Jhumming in North East India.

முதனிலை வேளாண்மை

புலம்பெயர் நாடோடி வேளாண்மை

கழிவு, எரியுர வேளாண்மை

செறிநிலை வாழ்தகு வேளாண்மை

வறுமை ஒழிப்பு

இந்த வாழ்தகு வேளாண்மையை வறுமையொழிப்பு ஆயுதமாகத் திட்டமிடப் பயன் கொள்ளலாம். குறிப்பாக, விலை உயர்வு அதிர்ச்சிகளைத் தாங்கவல்ல உணவுக்கான காப்புவலையாகவும் உணவுக் காப்புறுதி வழங்கவும் பயன்படுத்தலாம். உயர், நடுத்தர வருவாயுள்ள நாடுகளைப் போலல்லாமல், உள்நாட்டு விலையேற்றத்தினை மேலாண்மை செய்யவும் அதற்காக உதவி செய்யவும் போதுமான நிதிவளமும் நிறுவன ஏற்பாடுகளும் குறைந்த ஏழை நாடுகளில், இதைத் தவிர வேறு வழியில்லை. குறைந்த வருவாயுள்ள நாடுகளில் அமையும் 80% அளவிலான மக்கள்தொகையினர். ஊரகப் பகுதிகளிலேயே உள்ளனர். ஊரகப் பகுதியில் உள்ள வீடுகள் 90% அளவுக்கு நிலத்தை அணுக வாய்ப்புள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ஊரக மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை. எனவே, வாழ்தகு வேளாண்மையைப் பயன்படுத்தி, குறைந்த வருவாயுள்ள நாடுகளில் குறுகிய, இடைநிலை உணவு நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். அதன்வழியாக ஏழை மக்களுக்கான உணவுக் காப்புறுதியையும் வழங்கலாம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Tags:

வாழ்தகு வேளாண்மை வகைகள்வாழ்தகு வேளாண்மை வறுமை ஒழிப்புவாழ்தகு வேளாண்மை மேலும் காண்கவாழ்தகு வேளாண்மை மேற்கோள்கள்வாழ்தகு வேளாண்மை மேலும் படிக்கவாழ்தகு வேளாண்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரோசுமேரிகர்ணன் (மகாபாரதம்)வல்லினம் மிகும் இடங்கள்மீன்நீலகிரி மக்களவைத் தொகுதிகேபிபாராதேவநேயப் பாவாணர்இரண்டாம் உலகப் போர்பல்லவர்பூலித்தேவன்இந்திரா காந்திதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தேவாரம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்குருதி வகைமதயானைக் கூட்டம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024குறுந்தொகைஇயேசுவின் சாவுதேவேந்திரகுல வேளாளர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நீக்ரோநிலக்கடலைதமிழர் பண்பாடுமீனா (நடிகை)சரத்குமார்மணிமேகலை (காப்பியம்)சைலன்ஸ் (2016 திரைப்படம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)தேசிக விநாயகம் பிள்ளைநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபரிவர்த்தனை (திரைப்படம்)வி.ஐ.பி (திரைப்படம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்அகத்தியமலைவாதுமைக் கொட்டைமார்ச்சு 28சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)அபுல் கலாம் ஆசாத்செம்மொழிவேளாண்மைதிருட்டுப்பயலே 2ஔவையார்புனித வெள்ளிகிறிஸ்தவச் சிலுவைகல்விமொரோக்கோவேதம்பிரீதி (யோகம்)அரிப்புத் தோலழற்சிஇந்திய ரிசர்வ் வங்கிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்அறுபடைவீடுகள்இலிங்கம்கமல்ஹாசன்விடுதலை பகுதி 1சத்குருதிருப்புகழ் (அருணகிரிநாதர்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நுரையீரல் அழற்சிபிள்ளையார்ஆனந்தம் விளையாடும் வீடுபிரெஞ்சுப் புரட்சிவயாகராஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)முகம்மது நபியின் இறுதிப் பேருரைஆய்த எழுத்து (திரைப்படம்)ஹாட் ஸ்டார்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிநோட்டா (இந்தியா)டார்வினியவாதம்அக்கி அம்மைமுக்கூடற் பள்ளுஇன்ஸ்ட்டாகிராம்சஞ்சு சாம்சன்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)🡆 More