ரூத் பேடர் கின்ஸ்பர்க்

ஜோன் ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Joan Ruth Bader Ginsburg ; மார்ச் 15, 1933 – செப்டம்பர் 18, 2020) ஒரு அமெரிக்க வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார்.

1993 முதல் 2020 இல் இறக்கும் வரை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதியாக பணியாற்றினார் அப்போது நீதிபதியாக பணியாற்றிய பைரன் ஒயிட்டிற்கு பதிலாக அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அந்த நேரத்தில் பொதுவாக ஒரு மிதமான ஒருமித்த கருத்தை உருவாக்குபவராக கருதப்பட்டார். காலப்போக்கில் நீதிமன்றம் வலது பக்கம் மாறியதால் இவர் இறுதியில் நீதிமன்றத்தின் தாராளவாத பிரிவின் ஒரு பகுதியாக ஆனார். கின்ஸ்பர்க் சாண்ட்ரா டே ஓ'கானருக்குப் பிறகு நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் யூதப் பெண் மற்றும் இரண்டாவது பெண் ஆவார். தனது பதவிக்காலத்தில், கின்ஸ்பர்க் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை எழுதினார்.

ரூத் பேடர் கின்ஸ்பர்க்
ரூத் பேடர் கின்ஸ்பர்க்
2016 இல் ரூத் பேடர் கின்ஸ்பர்க்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதி
பதவியில்
ஆகஸ்ட் 10, 1993 – செப்டம்பர் 18, 2020
பரிந்துரைப்புபில் கிளின்டன்
பதவியில்
ஜூன் 30, 1980 – ஆகஸ்ட் 9, 1993
பரிந்துரைப்புஜிம்மி கார்ட்டர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜோன் ரூத் பேடர்

(1933-03-15)மார்ச்சு 15, 1933
நியூயார்க்கு நகரம்,அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசெப்டம்பர் 18, 2020(2020-09-18) (அகவை 87)
வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
துணைவர்(s)
மார்ட்டின் டி. கின்ஸ்பர்க்
(தி. 1954; இற. 2010)
பிள்ளைகள்
  • ஜேன்]
  • ஜேம்ஸ்
கல்வி
கையெழுத்துரூத் பேடர் கின்ஸ்பர்க்

பணிகள்

ரூத் பேடர், தனது சட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான வழக்கறிஞராக செலவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் முன் பல வாதங்களை வென்றார். அமெரிக்க பொது தாராளவாத ஒன்றியத்தின் தன்னார்வ வழக்கறிஞராக வாதிட்டார். மேலும், அதன் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் 1970 களில் அதன் பொது ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார். 1980 ஆம் ஆண்டில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் இவரை கொலம்பியா சர்க்யூட் மாவட்டத்திற்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமித்தார். 1993 இல் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் வரை அங்கு பணியாற்றினார். 2006 இல் ஓ'கானரின் ஓய்வு மற்றும் 2009 இல் சோனியா சோட்டோமேயர் நியமனத்திற்கு இடையில், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இவர் மட்டுமே இருந்தார். ரூத் பேடர் அமெரிக்க பிரபலமான கலாச்சாரத்தில் கவனத்தைப் பெற்றார். பல நிகழ்வுகளில் இவரது உணர்ச்சிமிக்க கருத்து வேறுபாடுகள், சட்டத்தின் முன்னுதாரணமான தாராளமயக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக பரவலாகக் காணப்பட்டது. இவர் " தி நோட்டரியஸ் ஆர்பிஜி ", என்று அழைக்கப்பட்டார்.

இறப்பு

ரூத் பேடர் கின்ஸ்பர்க் வாசிங்டன். டி. சி.யில் உள்ள தனது வீட்டில் செப்டம்பர் 18, 2020 அன்று, தனது 87 வயதில், கணையப் புற்றுநோய் ( மாற்றிடம் புகல் ) காரணமாக இறந்தார் .

குறிப்புகள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

ரூத் பேடர் கின்ஸ்பர்க் பணிகள்ரூத் பேடர் கின்ஸ்பர்க் இறப்புரூத் பேடர் கின்ஸ்பர்க் குறிப்புகள்ரூத் பேடர் கின்ஸ்பர்க் சான்றுகள்ரூத் பேடர் கின்ஸ்பர்க் வெளி இணைப்புகள்ரூத் பேடர் கின்ஸ்பர்க்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பில் கிளின்டன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரைநடைபொன்னுக்கு வீங்கிவெ. இராமலிங்கம் பிள்ளைநாழிகைஅஸ்ஸலாமு அலைக்கும்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தேர்தல்மெய்ப்பொருள் நாயனார்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)புறப்பொருள்சரண்யா பொன்வண்ணன்கடவுள்குணங்குடி மஸ்தான் சாகிபுமதீச பத்திரனதொல்காப்பியம்திராவிட இயக்கம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சொல்இந்திய தேசிய காங்கிரசுவெ. இறையன்புதிருவண்ணாமலைஇந்திசீனிவாச இராமானுசன்கம்பராமாயணம்ஸ்ரீசினைப்பை நோய்க்குறிஇந்திய அரசியலமைப்புவிசாகம் (பஞ்சாங்கம்)கன்னியாகுமரி மாவட்டம்மொழிபெயர்ப்புபட்டினப் பாலைஅரச மரம்ஏப்ரல் 27தமிழ்சிலம்பம்நவரத்தினங்கள்நெசவுத் தொழில்நுட்பம்தமிழில் சிற்றிலக்கியங்கள்நாயன்மார் பட்டியல்விண்டோசு எக்சு. பி.சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்து சமய அறநிலையத் துறைமுகம்மது நபிஅக்கினி நட்சத்திரம்சீவக சிந்தாமணிகொல்லி மலைபத்துப்பாட்டுகுப்தப் பேரரசுகள்ளுசிலம்பரசன்சீர் (யாப்பிலக்கணம்)பிரபஞ்சன்ம. கோ. இராமச்சந்திரன்மயில்இடமகல் கருப்பை அகப்படலம்சிவாஜி கணேசன்பாண்டியர்இரண்டாம் உலகப் போர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்திரா காந்திமதுரைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)உதகமண்டலம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்தமிழ்ப் புத்தாண்டுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைகண்ணனின் 108 பெயர் பட்டியல்நம்பி அகப்பொருள்தாஜ் மகால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தொல். திருமாவளவன்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மாதம்பட்டி ரங்கராஜ்வேதம்புறப்பொருள் வெண்பாமாலைஅறுசுவைதிட்டக் குழு (இந்தியா)விசயகாந்து🡆 More