யெகுடா அமிசாய்

யெகுடா அமிசாய் ( Yehuda Amichai 3 மே 1924–22 செப்டம்பர் 2000) என்பவர் இசுரேலியக் கவிஞர்.

இவர் இசுரேலிலும் உலக அளவிலும் பேசப் படுகிற நவீனக் கவிஞர் ஆவார். கவிதைகள், கதைகள், புதினங்கள், நாடகங்கள் ஆகியவற்றை எபிரேய மொழியில் படைத்தார்.

யெகுடா அமிசாய்
யெகுடா அமிசாய் (1994)

பிறப்பும் வளர்ப்பும்

யெகுடா அமிசாய் ஒரு யூதர் குடும்பத்தில் செருமானியில் வூர்சுபர்க் என்னும் ஊரில் பிறந்தார். தமது 11 அகவை வரை செருமானியில் வாழ்ந்தார். தொடக்கக் கல்வியை அங்கே முடித்தார். பின்னர் இவருடைய பெற்றோர் செருசலேமுக்குக் குடிபெயர்ந்து சென்றதால் இவரும் அங்கு போனார். எபிரேய மற்றும் செருமனி மொழிகளைக் கற்றும் பேசியும் வந்தார். இவரது செருமானியப் பெயர் லுத்விக் பூப்பர் ஆகும். இவரது படைப்புகளும் எபிரேய மொழியில் அமைந்தன.

பிரிட்டிசு இராணுவத்தில் சேர்ந்து பணி செய்து இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டார். 1946 இல் படைப் பணியிலிருந்து வெளியேறினார். சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.

படைப்புகள்

போர் முடிந்ததும் அமிசாய் விவிலியத்தையும் எபிரேய இலக்கியங்களையும் செருசலேம் எபிரேய பல்கலைக் கழகத்தில் கற்றார். 1955 இல் தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை எழுதி வெளியிட்டார். இவரது கவிதைகளில் யூத இன மக்களின் வரலாறு பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் பாடப்பட்டன. இவரது கவிதைகள் 40 மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலக் கவிஞர் டேட் ஹியூஸ் என்பவர் அமிசாய் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

பேராசிரியராக

பெர்கிலி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருந்தார். 1987இல் நியுயார்க்கு பல்கலைக் கழகத்தில் கவிஞராக இருந்தார். இசுரேலியா கருத்தரங்கில் ஆசிரியர்களுக்கு இலக்கியம் கற்பித்தார். எபிரேய பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு இலக்கியம் கற்றுக் கொடுத்தார்.

பெற்ற பரிசுகளும் விருதுகளும்

  • சியோன்ஸ்கி பரிசு (1957)
  • பிரென்னர் பரிசு (1960)
  • பியாலிக் பரிசு (1976)
  • இசுரேல் பரிசு (1982)
  • மால்ராக்ஸ். பன்னாட்டு புத்தகக் கண்காட்சி-பிரான்சு (1994)
  • மெசிடோனியா தங்கம் ரீத் விருது பன்னாட்டுக் கவிதை விழா (1995)

மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அமைதி ஏற்படுத்தியமைக்காக யாசர் அராபத், சிமோன் பெரெஸ், இட்சாக் ரபீன் ஆகிய மூவருக்கும் ஓஸ்லோவில் நடந்த நோபல் பரிசு வழங்கிய விழாவில் எகுடா அமிசாயின் கவிதை ஒன்றைப் படித்துக் காட்டினார் இட்சாக் ரபீன். அப்பொழுது அவ்விழாவில் அமிசாய் கலந்து கொண்டார்.

மேற்கோள்

Tags:

யெகுடா அமிசாய் பிறப்பும் வளர்ப்பும்யெகுடா அமிசாய் படைப்புகள்யெகுடா அமிசாய் பேராசிரியராகயெகுடா அமிசாய் பெற்ற பரிசுகளும் விருதுகளும்யெகுடா அமிசாய் மேற்கோள்யெகுடா அமிசாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மாமல்லபுரம்அபூபக்கர்கொன்றைஅண்டர் தி டோம்திருவள்ளுவர் ஆண்டுமாநிலங்களவைகலைசிலப்பதிகாரம்உவமையணிஎடுத்துக்காட்டு உவமையணிஐஞ்சிறு காப்பியங்கள்நேச நாயனார்முக்குலத்தோர்சங்கர் குருபுதன் (கோள்)பூப்புனித நீராட்டு விழாகோயம்புத்தூர்இயற்கைதமிழ் ராக்கர்ஸ்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மாதவிடாய்இந்திய ரிசர்வ் வங்கிமுதற் பக்கம்குடும்பம்தெருக்கூத்துஇயோசிநாடிஇரா. பிரியா (அரசியலர்)இந்திய நாடாளுமன்றம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்திய புவிசார் குறியீடுரேஷ்மா பசுபுலேட்டிபுதுச்சேரிதனுஷ் (நடிகர்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மழைநீர் சேகரிப்புநான்மணிக்கடிகைநந்திக் கலம்பகம்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்புறாசீறாப் புராணம்கடையெழு வள்ளல்கள்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)அக்கி அம்மைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மரபுச்சொற்கள்பாத்திமாவிநாயகர் (பக்தித் தொடர்)தமிழ் மாதங்கள்மாடுஹஜ்நெடுஞ்சாலை (திரைப்படம்)இராமர்பட்டினத்தார் (புலவர்)அழகிய தமிழ்மகன்விஜயநகரப் பேரரசுதிருக்கோயிலூர்காரைக்கால் அம்மையார்புனர்பூசம் (நட்சத்திரம்)குமரகுருபரர்இராவணன்அறுசுவைலக்ன பொருத்தம்சுருட்டைவிரியன்புதிய ஏழு உலக அதிசயங்கள்கே. அண்ணாமலைநாலடியார்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மலேரியாவிளையாட்டுகீழடி அகழாய்வு மையம்கௌதம புத்தர்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்நாயக்கர்திராவிட மொழிக் குடும்பம்சிங்கம்திரௌபதி முர்முநாயன்மார்🡆 More