மிதவாதி கிருட்டிணன்

சங்கரம்குமாரத்து கிருட்டிணன் வக்கீல் (Changaramkumarath Krishnan Vakkeel ) இவர் ஓர் சமூகத் தலைவரும், வங்கியாளரும், சமூக சீர்திருத்தவாதியும், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆவார்.

சுயசரிதை

ச. கிருட்டிணன் கேரளாவின் திருச்சூரில் 1867 சூன் 11 அன்று பிறந்தார். மூர்கோத்து குமரன் என்பவரிடமிருந்து மிதவாதி (சீர்திருத்தவாதி) என்ற செய்தித்தாளை இவர் கையகப் படுத்திக் கொண்டார். அந்தக் காலங்களில் மலபாரின் சிறந்த சமூக சீர்திருத்தவாதியான மருத்துவர் அய்யத்தான் கோபாலன் என்பவரின் தூண்டுதல், ஆலோசனையின் காரணமாக கிருஷ்ணன் பத்திரிக்கையை எடுத்து நடத்தினார். மிதவாதி பத்திரிக்கை "சமூகத்தில் மனச்சோர்வடைந்தவர்"களின் பைபிளாகவும், "திய்யாக்களின் இதழ்" என்றும் அழைக்கப்பட்டது.

கொச்சி மெட்ரோ என்ற இதழ் கேரள பத்திரிகைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் ச. கிருட்டிணனை 1907க்கு கீழ் முதன்முதலில் பட்டியலிட்டது. அது கூறுகிறது “மிதவாதி- தலச்சேரியில் இருந்து வந்து கேரள பத்திரிகை வரலாற்றில் அடுத்த முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது. இது முதல் உலகப் போரின்போது யுத்த முன்னணியில் இருந்து சமீபத்திய செய்திகளைக் கொண்ட ஒரு தினசரி செய்திகளை வெளியிட்டது. தனித்தனியாக, கேரள அரசு "சமூக சீர்திருத்தங்களுக்கான இயக்கத்திலும், சமூகத்தின் பலவீனமான பிரிவுகளின் முன்னேற்றத்திலும் மிதவாதி முன்னணியில் இருந்தது" என்று கூறுகிறது.

ச. கிருட்டிணன் நாராயண குருவை பின்பற்றுபவராக இருந்தார். நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவராக இருந்த இவர், கேரளாவின் தனது சொந்தப் பகுதியான வடக்கு மலபார் மாவட்டத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக இருந்தார். இவர் பல நாராயண தர்ம பரிபாலன யோக மாநாடுகளில் பங்கேற்றார். மேலும் சிவகிரியில் நடந்த அதன் 9ஆவது ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். இவர் நாராயண தர்ம பரிபாலன யோகத்திற்கு ஒரு சிறந்த அமைப்பாளராகவும் நிதி திரட்டுபவராகவும் இருந்தார். இவர் அனைத்து ஆசிரம சொத்துக்களுக்கும் தர்மகார்த்தாவாக நியமிக்கப்பட்டார். இவர் வைக்கம் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1907 ஆம் ஆண்டில் கிருட்டிணன் (புகழ்பெற்ற கல்லிங்கல் மாடத்தின் இராரிச்சன் மூப்பன்) நாராயண குருவை மலபாருக்கு அழைத்தார். குருவும் இவரது அழைப்பை ஏற்று மலபாரில் பல இடங்களுக்கு வந்து சென்றார்.

ச. கிருட்டிணன் சுதந்திர இயக்கத்தை ஆதரிக்கவில்லை. இந்திய தேசிய காங்கிரசு மற்றும் மகாத்மா காந்திக்கு எதிராக இருந்தார். இவர் பிரிட்டிசு ஆட்சியை ஆதரித்தார். ஏனென்றால் சுதந்திரம் இல்லாமல் ஆட்சிக்கான சுதந்திரம் அர்த்தமற்றது என்று இவர் நம்பினார். மலபார் கிளர்ச்சியைத் தடுக்க தவறியதற்கு காந்திஜியை குற்றம் சாட்டினார். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் வெல்லப்படும் தேசிய சுதந்திரம் குறித்து இவர் சந்தேகப்பட்டார். தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சுதந்திரம் அடையப்பட வேண்டும் என்று இவர் விரும்பினார்.

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

மிதவாதி கிருட்டிணன் சுயசரிதைமிதவாதி கிருட்டிணன் மேலும் காண்கமிதவாதி கிருட்டிணன் குறிப்புகள்மிதவாதி கிருட்டிணன் வெளி இணைப்புகள்மிதவாதி கிருட்டிணன்கேரளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சொல்வேலு நாச்சியார்திருநாவுக்கரசு நாயனார்சைமன் குழுதிதி, பஞ்சாங்கம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பெண்திருவிளையாடல் புராணம்1949 திருவள்ளுவர் குறள் மாநாடுஉயிர் உள்ளவரை காதல்தமிழர் அளவை முறைகள்ஸ்ரீலீலாராகவா லாரன்ஸ்ஈரோடு தமிழன்பன்அமீதா பானு பேகம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மரகத நாணயம் (திரைப்படம்)புறநானூறுஅறநெறிச்சாரம்மாமல்லபுரம்சுற்றுச்சூழல்நன்னூல்தாவரம்கன்னத்தில் முத்தமிட்டால்இன்னா நாற்பதுசிற்றிலக்கிய வகைதக்கயாகப் பரணிகாவிரி ஆறுவினையெச்சம்காதல் (திரைப்படம்)சுரதாவீரமாமுனிவர்நாஞ்சில் வள்ளுவன்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்வைரமுத்துஓ காதல் கண்மணிகேட்டை (பஞ்சாங்கம்)யானைகங்கைகொண்ட சோழபுரம்பாரதிய ஜனதா கட்சிமருதமலைமனித எலும்புகளின் பட்டியல்இராணி மங்கம்மாள்ரயத்துவாரி நிலவரி முறைநீக்ரோஜன கண மனகம்பராமாயணத்தின் அமைப்புநாளந்தா பல்கலைக்கழகம்இந்தியப் பிரதமர்சிலப்பதிகாரம்காற்று வெளியிடைஇந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பள்ளுஐக்கிய நாடுகள் அவைநீர்குறிஞ்சி (திணை)பௌத்தம்தமிழ் படம் 2 (திரைப்படம்)அண்ணாமலை குப்புசாமிலோக்பால் மசோதாநந்திக் கலம்பகம்கரகாட்டக்காரன் (திரைப்படம்)பரிதிமாற் கலைஞர்யூடியூப்ஒன்றியப் பகுதி (இந்தியா)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)1929 சுயமரியாதை மாநாடுநவரத்தினங்கள்வேர்க்குருசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்து சமய அறநிலையத் துறைபெங்களூர்இந்திய தேசிய சின்னங்கள்கஜினி (திரைப்படம்)யாவரும் நலம்மீன் வகைகள் பட்டியல்🡆 More