மகி

மகி என்பது மகரச் சங்கராந்திக்கான பஞ்சாபி மொழிப் பெயராகும்.

இது குளிர்கால அறுவடைப் பண்டிகையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது .மகி மக முதல் நாளில் பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், அரியானா பகுதிகளில் பஞ்சாபியர் கால அட்டவணைப்படி கொண்டாடப்படுகிறது. இது பண்பாட்டுப் பண்டிகையாக மட்டுமன்றி பருவக்கால, சமயப் பண்டிகையாகவும் விளங்குகிறது. இது வேளாண்மைப் புத்தாண்டு தொடங்கும் பகல்வெளிச்ச மிக்க நாட்களில் விளையாட்டுகள் நிகழும் பண்டிகையாகவும் திகழ்கிறது.

மகி
கீர் எனும் பாற்கஞ்சி, நியூயார்க்
மகி
கரும்பு வயல்
மகி
கிச்சடி
மகி
எள் விதைகள்
மகி
(1)வெல்ல உருண்டை,இந்தியப் பஞ்சாபில்

பண்பாட்டுத் திருவிழா

பருவக் காலத் திருவிழா

மகி பகல் வெளிச்சம் மிகுவதைக் குறிப்பிடுகிறது . இது குளிர்காலக் கதிர்த்திரும்பலில் ஏற்படும். இது பெருநாள் எனும் பொருள் உள்ள பாரா தின் என வழங்கும். இது பின்பனிக்காலத் (சிசிர்பருவத்)தொடக்கமும் ஆகும் . சிசிர் பருவம் குளிர்காலத்தின் இரண்டாம் பகுதியான பின்பனிக்காலம் ஆகும். எனவே மகி பருவக்காலப் பண்டிகையும் ஆகும்.

மரபுகள்

உணவு

இந்தியாவின் மற்ற பகுதிகளைப்போல குளிர்காலத்தில் பஞ்சாபிலும் இமாச்சலப் பிரதேசத்திலும் ஃஆர்யானாவிலும் நெல் அறுவடை நிகழ்வதில்லை. என்றாலும் நெல் அறுவடை இலையுதிர் காலத்தில் நடைபெறுகிறது. இந்த அறுவடை மகியன்று கொண்டாடப்படுகிறது. எனவே இன்று பாற்கஞ்சி காய்ச்சிப் பருகப்படுகிறது . குளிர்கால விளைச்சலான கரும்புச் சாறு அருந்தப்படுகிறது. இது கீர் என வழங்குகிறது. "Poh ridhi, Magh khadi" என்றொரு பஞ்சாபிப் பழமொழி உண்டு. இதன் பொருள் போ மாதப் பாற்கஞ்சி அடுத்த மகி மாத முதல் நாளில் பருகப்படுகிறது என்பதாகும். பஞ்சாபின் சில பகுதிகளில் கிச்சடி வெல்லமும் கரும்புத் துண்டும் கலந்து உண்ணப்படும்.இவை எல்லாமே குளிர்கால அறுவடைப் பொருள்களாகும். எள்கலந்த தின்பண்டங்களும் மரபாக உண்ணப்படுவதுண்டு. இவற்றோடு, வசந்தப் பட்டப் பண்டிகையின்போது கவிநிற அரிசியுணவு மரபாக ஆர்வத்தோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மகி விருந்து (மோகு-மகி)

பஞ்சாபின் சில பகுதிகளில் இளம்பெண்கள் மூத்த பெண்டிரிடம் விருந்து கேட்பர். இது மகி விருந்து (மோகு-மகி) எனப்படும். இந்நிகழ்வு மகியன்று காலையின் நிகழும். The only song sung on this occasion is:

moh-mahi de ke jaa - de ke ja
darhi phul puaa ke ja - pua ke ja
darhi teri hari bhari - hari bhari
phula de naal jarhi bhari - jarhi bhari
je na moh-mahi ditti su
duhatharh darhi puttu su

மொழிபெயர்ப்பு

போகுமுன் விருந்து தா
முகத்தில் பூச்சூட்டு
உன் தாடி (முகம்) எப்படி பொலியுது,
பூக்கள் தவழ
நீ எனக்கு விருந்து தராவீட்டால்
உன் தாடி இழுப்பேன் (உன் கன்னம் கிள்ளுவேன்)

(இங்கு பஞ்சாபிச் சொல்லான தாடி விருந்தளிக்கும் எதிர்பெண்ணின் முகம், கன்னம் குறிக்கும்).

மகி விழாக் காட்சிகள்

மரபாக மகியன்று பல பண்பாட்டுக் காட்சிகள் நிகழும்.மக்கள் குழுமிப் பார்க்க பலவிழாக் காட்சிகளாக, கபட்டி, மற்போர், பஞ்சாப் பகுதி விளையாட்டுகள், இந்திய விளையாட்டுகள் போன்றவை நிகழும்.


முக்த்சார் போர்ப் பெருவிழா

மகி 
Gurudwara Muktsar Sahib

மகியன்று முக்த்சார் நகரில் மிகப்பெரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். இது மகி மேளா எனப்படுகிறது. இதில் சாளி முக்தேவின் போர்க்காட்சி அரங்கேறும். இது வரலாற்றுக் கால முக்த்சார் போர்க் காட்சி ஆகும். இந்நகரிலுள்ள குளத்தில் குளிப்பவர்களுக்கு விடிவு கிட்டுமென நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

மகி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Festivals of Punjab
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

மகி பண்பாட்டுத் திருவிழாமகி முக்த்சார் போர்ப் பெருவிழாமகி மேற்கோள்கள்மகிஅரியானாஇமாச்சலப் பிரதேசம்பஞ்சாபி மொழிபஞ்சாப்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசங்குமாத்திரை (தமிழ் இலக்கணம்)சீவக சிந்தாமணிஅருந்ததியர்இந்திய தேசிய காங்கிரசுவிருமாண்டிஆய கலைகள் அறுபத்து நான்குதஞ்சைப் பெருவுடையார் கோயில்மதராசபட்டினம் (திரைப்படம்)மக்களவை (இந்தியா)மஞ்சள் காமாலைமருதம் (திணை)சூல்பை நீர்க்கட்டிகங்கைகொண்ட சோழபுரம்பிரேமலுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்கட்டுவிரியன்கார்லசு புச்திமோன்இந்திய அரசியல் கட்சிகள்பெரியபுராணம்மாதேசுவரன் மலைசார்பெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)குருதி வகைபிரீதி (யோகம்)சீனாமாதம்பட்டி ரங்கராஜ்விருத்தாச்சலம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குறிஞ்சி (திணை)திதி, பஞ்சாங்கம்சேலம்அரச மரம்கௌதம புத்தர்சூரியக் குடும்பம்சேரன் செங்குட்டுவன்வாணிதாசன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்து சமயம்இட்லர்இரசினிகாந்துசித்த மருத்துவம்வராகிஉதகமண்டலம்தமிழ்நாடு அமைச்சரவைநெல்குஷி (திரைப்படம்)சே குவேராசிவனின் 108 திருநாமங்கள்பசுமைப் புரட்சிவட்டாட்சியர்சதுரங்க விதிமுறைகள்சின்ன வீடுவணிகம்வன்னியர்விஜய் (நடிகர்)சிறுநீரகம்கண்ணாடி விரியன்சாகித்திய அகாதமி விருதுஅபிராமி பட்டர்வீரப்பன்திருவள்ளுவர்வாகைத் திணைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ம. பொ. சிவஞானம்சிவவாக்கியர்முத்தொள்ளாயிரம்இந்திய நாடாளுமன்றம்உயிர்ச்சத்து டிதொழிலாளர் தினம்திருவோணம் (பஞ்சாங்கம்)இலட்சம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்அளபெடைஅம்பேத்கர்🡆 More