ஊர் பேரிகை

பேரிகை (Berigai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.

பேரிகை
சிற்றூர்
நாடுஊர் பேரிகை இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

வரலாறு

இப்பகுதி கி.பி 14ஆம் நூற்றாண்டில் வேர்காயம் என்ற பெயரிலும் கட்ட சமுத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். இது மாசாந்தி நாட்டில் அமைந்த ஊர் ஆகும்.

பேரிகையும், சூளகிரியும் அங்குசகிரி பாளையத்துடன் இணைந்தவையாக இருந்தன. இப்பகுதியை ஆண்ட வீரராமநாதன், கோட்டை கட்டவேண்டும் என்று தீர்மானித்தான். கோட்டைக்கான இடத்தை தேர்ந்தெடுக்க வந்தபோது பேரவ்வோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவருடன் வந்தனர். அவர்களின் ஆலோசனையின்படி கோட்டை கட்டுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து கோட்டையைக் கட்டினான். அந்தக் கோட்டைதான் இங்கிருக்கும் சிவன் கோயில் அருகே அமைந்துள்ள கோட்டை எனப்படுகிறது. வேரவோர் செட்டியாரின் ஆலோசனைப்படி கோட்டை கட்டியதால் இந்த ஊருக்கு பேரிகை என்ற பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.

அமைவிடம்

இந்த ஊரானது பெங்களுர், சர்ஜாபுரத்திலிருந்து 18 கி.மீ. (11 மைல்) தொலைவிலும், ஆந்திர பிரதேசத்தின், குப்பத்திலிருந்து 34 கி.மீ (21 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள மிதமான தட்ப வெப்ப நிலை காரணமாக வேளாண்மை சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டில் அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் எல்லையில் இது அமைந்துள்ளது. மேலும் ஓசூர் மற்றும் வேப்பனப்பள்ளி வட்டத்தையும் ஒன்றிணைக்கிறது.

மக்கள் வகைப்பாடு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 1807 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 7884, இதில் 3970 பேர் ஆண்கள், 3914 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 78.79% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

கோயில்கள்

இங்கு வெங்கட்ரமண சுவாமி கோவில், சிவ பார்வதி கோவில், வீர பரவேஸ்வரா கோவில், இராம பஜனை கோயில் (குமபர பஜனை கோயில், பந்மசாலி பஜனை கோயில்), ஆஞ்சிநேயர் கோவில், கங்கம்மா கோவில் மற்றும் மகேஸ் பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் இங்கு உள்ளன. இந்த கிராமத்தின் அருகே முனீஸ்வர சுவாமி கோவில், நரசிம்மசாமி கோவில், புட்டப்பா சுவாமி கோவில், பரவேஸ்வரா சுவாமி கோவிலும் ஆகியவை அமைந்துள்ளன.

விழாக்கள்

இங்கு இந்து மற்றும் முஸ்லீம் பண்டிகைகளான ஸ்ரீ ராம நவமி, உகாதி, தீபாவளி, பொங்கல், ரம்ஜான் போன்ற பண்டிகைகள் கொண்டாடுகின்றன. ஸ்ரீ ராம நவமி பண்டிகை இரண்டு நாட்களுக்கு மேலாக விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை காலத்தில் கிராமத்தில் உள்ள மக்கள் சீதா ராமனை வழிபட்டு, பஜனை செய்து பிராத்திக்கிறனர்.

மேலும் இங்கு மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மற்றொரு விழாவான ”அகண்ட ராமநாமா சபதம்” உகாதி பண்டிகையில் தொடங்கி 7 நாட்களில், 24 மணி நேரமும் ராம நாமம் ஜெபிக்கப்படுகிறது. இவ்விழாவை ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஸ்ரீ ராம பஜனா மந்திர் அறக்கட்டளை தலைவர் 1987 முதல் தொடங்கி தொடர்ந்து நிர்வகித்து வருகிறார். “புட்டப்பா சுவாமி” ஆராதனா என்னும் புகழ்பெற்ற விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறுகிறது.

கல்வி நிலையங்கள்

இங்கு அரசு மேல் நிலைப் பள்ளி, வானபிரஸ்தா இன்டர் நேசனல் பள்ளி, ஸ்ரீ வித்யா பாரதி ஆங்கிலவழிப் பள்ளியும், அரசு பள்ளியில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் உருது மொழி வழியாக கற்பிக்கப்படுகிறது. மேற்படிப்பு பயில அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதியமான் பொறியியற் கல்லூரி, பொறி. பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் பெண்கள் கலை கல்லூரி, சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செல்கின்றனர். இங்கு வாழும் மக்கள் பெரும்பான்மையோர் தெலுங்கு பேசுவதால், தெலுங்கு வழி பள்ளிகள் மேலும் வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வசதிகள்

அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மின்சார வாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், மாணவர்கள் தங்க அரசு விடுதி போன்றவையும், அரசு பள்ளியில் விளையாட மைதானமும், காலை 4.30 முதல் இரவு 11.00 மணி வரை பெங்களுர் மற்றும் ஓசூருக்கு சென்று வர பேருந்து வசதியும் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

ஊர் பேரிகை வரலாறுஊர் பேரிகை அமைவிடம்ஊர் பேரிகை மக்கள் வகைப்பாடுஊர் பேரிகை கோயில்கள்ஊர் பேரிகை விழாக்கள்ஊர் பேரிகை கல்வி நிலையங்கள்ஊர் பேரிகை வசதிகள்ஊர் பேரிகை மேற்கோள்கள்ஊர் பேரிகைஇந்தியாகிருஷ்ணகிரி மாவட்டம்சூளகிரி வட்டம்தமிழ்நாடுவருவாய் கிராமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராம் சரண்நாட்டுப்புறக் கலைஇந்திய நாடாளுமன்றம்தொகைச்சொல்செயற்கை அறிவுத்திறன்கோயம்புத்தூர் மாவட்டம்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)பாம்பாட்டி சித்தர்அபூபக்கர்மக்களாட்சிஎஸ். சத்தியமூர்த்திஆந்திரப் பிரதேசம்தேசிக விநாயகம் பிள்ளைகாதல் மன்னன் (திரைப்படம்)காதலன் (திரைப்படம்)இந்திய விடுதலை இயக்கம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நாளிதழ்செவ்வாய் (கோள்)கருப்பு நிலாஅர்ஜூன் தாஸ்வரலாறுபாரதிதாசன்மனித எலும்புகளின் பட்டியல்செஞ்சிக் கோட்டைபுதினம் (இலக்கியம்)தொல். திருமாவளவன்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஇந்தியத் துணைக்கண்டம்இன்னொசென்ட்காளமேகம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அருந்ததியர்திருநங்கைஅனைத்துலக நாட்கள்இரண்டாம் உலகப் போர்போதைப்பொருள்சடங்குஈரோடு மாவட்டம்பொன்னியின் செல்வன் 1பஞ்சாங்கம்ரமலான்தமிழ்ப் புத்தாண்டுபோக்குவரத்துஇணையம்நற்றிணைஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்மதராசபட்டினம் (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்மீனா (நடிகை)சூர்யா (நடிகர்)பாக்டீரியாதமிழ் ராக்கர்ஸ்முதலாம் உலகப் போர்சுடலை மாடன்யோகக் கலைரோசாப்பூ ரவிக்கைக்காரிகுண்டலகேசிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கருத்தரிப்புகொல்லி மலைசிவாஜி (பேரரசர்)குப்தப் பேரரசுநீர் மாசுபாடுகட்டுவிரியன்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)அஸ்ஸலாமு அலைக்கும்ஔவையார்பிரம்மம்கணையம்கர்மாஇந்திய தேசிய காங்கிரசுபௌத்தம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)விநாயக் தாமோதர் சாவர்க்கர்முடக்கு வாதம்சுந்தரமூர்த்தி நாயனார்திருவள்ளுவர்மதுரகவி ஆழ்வார்🡆 More