பட்னா பல்கலைக்கழகம்

பட்னா பல்கலைக்கழகம் (Patna University)என்பது இந்தியாவின் பீகார் மாநில தலைநகர் பட்னாவில் உள்ள பொது பல்கலைக்கழகம் ஆகும்.

இது பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் 1 அக்டோபர் 1917இல் நிறுவப்பட்டது. இது பீகாரின் முதல் பல்கலைக்கழகமும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஏழாவது பழமையான பல்கலைக்கழகம் ஆகும். இது பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிப்புகளை வழங்குகிறது.

பட்னா பல்கலைக்கழகம்
Patna University
पटना विश्वविद्यालय
இலத்தீன்: Universitas Patna
குறிக்கோளுரைThe Desire To Seek The Truth Should Be Your Defined Quest
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1 அக்டோபர் 1917
(106 ஆண்டுகள் முன்னர்)
 (1917-10-01)
வேந்தர்பீகார் ஆளுஞர்
துணை வேந்தர்பேரா. சிரிசு குமார் சவுத்ரி
அமைவிடம், ,
இந்தியா

25°36′28.77″N 85°10′03.06″E / 25.6079917°N 85.1675167°E / 25.6079917; 85.1675167
வளாகம்நகரம்
நிறங்கள்சிவப்பு & வெள்ளை         
விளையாட்டுகள்துடுப்பாட்டம், மேசைப்பந்தாட்டம், சதுரங்கம், கைப்பந்து, மட்டைப்பந்து
சுருக்கப் பெயர்PU
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.patnauniversity.ac.in

வரலாறு

பட்னா பல்கலைக்கழகம் 
பாட்னா பல்கலைக்கழகம் 2017 முத்திரையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பட்னா பல்கலைக்கழகம் செப்டம்பர் 1917இல் நிறைவேற்றப்பட்ட ஏகாதிபத்திய சட்ட மன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்டது. அக்டோபர் 1917இல் ஜெஜி ஜென்னிங்ஸ் இந்த பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றபோது கல்லூரிகளுடன் இணைந்த ஆய்வு அமைப்பாகப் பயணத்தைத் தொடங்கியது. இந்தியாவின் நவீன யுகத்தில், இந்த பிராந்தியத்தில் உள்ள பழமையான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். பின்னர் 1919இல், பல்கலைக்கழகத்தின் நிர்வாக அமைப்புகள்-பல்கலைக்கழக பேரவை மற்றும் ஆட்சிக்குழு உருவாக்கப்பட்டன. பட்னா பல்கலைக்கழகத்தின் சின்னமான வீலர் செனட் இல்லம் 1926இல் கட்டப்பட்டது. இதற்காகப் பணத்தினை முங்கரின் ராஜா தேவகி நந்தன் பிரசாத் நன்கொடையாக வழங்கினார். பல்கலைக்கழகம் முதலில் நிறுவப்பட்டபோது பீகார், ஒடிசா மற்றும் நேபாள இராச்சியத்தின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இணைக்கப்பட்டிருந்தன. பள்ளி இறுதி முதல் முதுகலை வரை கல்வி நிறுவனங்களுக்கான தேர்வுகளை மேற்பார்வையிட்டது. இந்த நிலைமை கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக தொடர்ந்தது. திரிபுவன் பல்கலைக்கழகம், காட்மாண்டு மற்றும் உத்கல் பல்கலைக்கழகம், புவனேசுவரம் நிறுவப்பட்டபோது கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இணைக்கப்பட்டன. 2 ஜனவரி 1952இல், இது பட்னா பெருநகரத்தின் மீது மட்டுமே பிராந்திய அதிகார வரம்பைக் கொண்ட முற்றிலும் கற்பித்தல் மற்றும் இணைவுக் கல்லூரி இல்லாதப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. பல்கலைக்கழக கட்டிடங்கள் பெரும்பாலும் கங்கை நதிக்கரையிலும் சைதாப்பூர் வளாகத்திலும் அமைந்துள்ளன.

அமைப்பு மற்றும் நிர்வாகம்

நிர்வாகம்

பட்னா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பீகார் மாநில ஆளுநர் ஆவார். பட்னா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் நிர்வாக தலைமை அதிகாரி ஆவார். கிரிசு குமார் சவுத்ரி பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஆவார்.

பள்ளிகள் மற்றும் துறைகள்

பாட்னா பல்கலைக்கழகத்தில் அறிவியல், மானுடவியல், வணிகம், சமூக அறிவியல், கல்வி, சட்டம், நுண்கலை மற்றும் மருத்துவம் ஆகிய எட்டு பள்ளிகளின் கீழ் 30 துறைகள் செயல்படுகின்றன.

  • அறிவியல் பள்ளி

இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல் மற்றும் புவியியல் துறைகள் அறிவியல் பள்ளியின் கீழ் வருகின்றன.

  • மானுடவியல் பள்ளி

இந்த பள்ளியில் ஆங்கிலம், இந்தி, பங்களா, சமசுகிருதம், மைதிலி, பாரசீக, தத்துவம், அரபு மற்றும் உருது ஆகிய துறைகள் உள்ளன.

  • சமூக அறிவியல் பள்ளி

சமூக அறிவியல் பீடத்தில் வரலாறு, புவியியல், உளவியல், பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல், பொருளாதாரம், தனிப்பட்ட மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகள், சமூகவியல், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகள் உள்ளன.

  • சட்டம், கல்வி, வணிகம், நுண்கலை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகள்

சட்டம், கல்வி, வணிகம், நுண்கலை மற்றும் பிடிஎஸ் தனித் தனித் துறைகளாக இவைச் செயல்படுகின்றன.

இணைவு

பட்னா பல்கலைக்கழகம் கல்லூரிகளுடன் இணைந்த நிறுவனம் ஆகும். பட்னா நகர்ப் பகுதியில் அதிகார வரம்பைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்துடன் பதினொன்ரு கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.  

கல்வியாளர்கள்

தொலைக்கல்வி

பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், ஆசிரியர் பயிற்சி, அறிவியல், கலை, வணிகம், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகின்றன. இந்த படிப்புகளில் சேர்க்கை முக்கியமாக உயர்நிலை (10+2) மற்றும் பட்டப்படிப்பு (10+2+3) நிலை முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆராய்ச்சி பட்டங்களைப் பெற விழைவோர் பல்கலை அளவில் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். 1974இல் இருந்து, பல்கலைக்கழகம் தொலைக் கல்வி இயக்குநகரம் வாயிலாக முதுகலை படிப்பினை வழங்குகிறது.

நூலகங்கள்

பட்னா பல்கலைக்கழகத்தின் மத்திய நூலகம் 1919இல் நிறுவப்பட்டது. மத்திய நூலகத்தைத் தவிர, பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்த நூலகங்களுடன் கூடிய நூலகமும் உள்ளன. பல்கலைக்கழக நூலகத்தில் 4,00,000க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ளன. இதில் புத்தகங்கள், இதழ்கள், கையெழுத்துப் பிரதிகள், காப்புரிமைகள் மற்றும் பிற மதிப்புமிக்க தொகுப்புகள் உள்ளன.

தரவரிசை மற்றும் அங்கீகாரம்

பட்னா பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 12பி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவினால் அங்கீகாரத்தின் முதல் சுழற்சியில் 'B+' தரநிலை வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பட்னா பல்கலைக்கழகம் வரலாறுபட்னா பல்கலைக்கழகம் அமைப்பு மற்றும் நிர்வாகம்பட்னா பல்கலைக்கழகம் கல்வியாளர்கள்பட்னா பல்கலைக்கழகம் மேற்கோள்கள்பட்னா பல்கலைக்கழகம் வெளி இணைப்புகள்பட்னா பல்கலைக்கழகம்இந்தியத் துணைக்கண்டம்பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுபீகார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சாப் கிங்ஸ்கட்டுவிரியன்சிலப்பதிகாரம்இராசேந்திர சோழன்இந்தியத் தலைமை நீதிபதிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கம்பராமாயணத்தின் அமைப்புமனித வள மேலாண்மைதமிழக மக்களவைத் தொகுதிகள்திரிசாதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அகமுடையார்விஷால்நாளந்தா பல்கலைக்கழகம்புதுக்கவிதைவசுதைவ குடும்பகம்பி. காளியம்மாள்பிரசாந்த்தொல். திருமாவளவன்கொன்றைஇயற்கைசிந்துவெளி நாகரிகம்மதுரைக் காஞ்சிகுதிரைமலை (இலங்கை)யானையின் தமிழ்ப்பெயர்கள்முதற் பக்கம்தினைபௌத்தம்பகிர்வுவேலுப்பிள்ளை பிரபாகரன்இன்னா நாற்பதுசித்ரா பௌர்ணமிகோயம்புத்தூர்கழுகுவிருமாண்டிசுபாஷ் சந்திர போஸ்யாதவர்திருமந்திரம்ஏப்ரல் 27ஜே பேபிஆண்டு வட்டம் அட்டவணைதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மாமல்லபுரம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஐம்பூதங்கள்ஐங்குறுநூறுவெட்சித் திணைஅன்னி பெசண்ட்பறம்பு மலைஉன்ன மரம்திருவையாறுபாரிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இங்கிலீஷ் பிரீமியர் லீக்அறுசுவைபிள்ளைத்தமிழ்கல்விதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்மண்ணீரல்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தெலுங்கு மொழிதூது (பாட்டியல்)வெப்பம் குளிர் மழைதமிழர் நிலத்திணைகள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிறுகதைதமிழிசை சௌந்தரராஜன்இந்திய மக்களவைத் தொகுதிகள்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்அங்குலம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சிறுதானியம்யாழ்கஞ்சா🡆 More