துடுப்பாட்டக்காரர் சாருக் கான்

சாருக் கான் (Shahrukh Khan (cricketer)) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்டக்காரர் ஆவார்.

1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் பஞ்சாப் கிங்சு அணிக்காகவும் இவர் விளையாடுகிறார்.

சாருக்கான்
Shahrukh Khan (cricketer)
துடுப்பாட்டக்காரர் சாருக் கான்
209-20 விஜய் அசாரே கிண்ணத் தொடரில் கான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மசூத் சாருக் கான்
பிறப்பு27 மே 1995 (1995-05-27) (அகவை 28)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைமட்டையாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை சுழற்பந்து
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014–தற்போது வரைதமிழ்நாடு துடுப்பாட்ட அணி
2021பஞ்சாப் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 5
ஓட்டங்கள் 231
மட்டையாட்ட சராசரி 33.00
100கள்/50கள் 0/2
அதியுயர் ஓட்டம் 92*
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/–
மூலம்: Cricinfo, சனவரி 30, 2022

தொழில்

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று சாருக் கான் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இப்போட்டி 2013-14 ஆண்டுக்கான விஜய் அசாரே கிண்ணப் போட்டியாகும். தமிழ்நாட்டிற்காக இவர் இப்போட்டியில் விளையாடினார். 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று 2018-19 ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற இரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ்நாட்டு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார் .

2021 ஆண்டு நடைபெற்ற சையது முசுட்டாக் அலி கிண்ணத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கிண்ணத்தினை வென்ற தமிழ்நாடு அணியில் சாருக் கான் இடம் பெற்றிருந்தார். இமாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் கான் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்கள் எடுத்தார்.

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 2021 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக நடந்த ஐபிஎல் ஏலத்தில் கான் பஞ்சாப் கிங்சு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று இராசத்தான் ராயல்சுக்கு எதிராக அறிமுகமாகி 4 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்கள் எடுத்தார். இவருக்கான முதல் ஐபிஎல் தொப்பியை கிறிசு கெயில் வழங்கினார்.

2022 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டிக்கான அணியில் இரண்டு காத்திருப்பு வீரர்களில் ஒருவராக கானின் பெயர் சேர்க்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்காக பஞ்சாப் கிங்சு அணி இவரை ஏலத்தில் வாங்கியது. பின்னர் நடைபெற்ற இரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய சாருக் கான் தில்லி அணிக்கு எதிரான போட்டியில் 194 ஓட்டங்கள் எடுத்தார்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

இந்தியன் பிரீமியர் லீக்இந்தியாதமிழ்நாடுதுடுப்பாட்டம்பஞ்சாப் கிங்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருத்தரிப்புதிருவாசகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇயற்கை வளம்பதுருப் போர்ஸ்ரீலீலாவிருதுநகர் மக்களவைத் தொகுதிபுதுச்சேரிபாட்டாளி மக்கள் கட்சிதமிழர் பருவ காலங்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சைவ சமயம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இராவணன்சிறுகதைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்ஆற்றுப்படைமருது பாண்டியர்சித்த மருத்துவம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிகுமரி அனந்தன்முதுமொழிக்காஞ்சி (நூல்)கலைச்சொல்ஐம்பூதங்கள்கன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பத்துப்பாட்டுகாவிரி ஆறுதங்கர் பச்சான்இராவண காவியம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்புணர்ச்சி (இலக்கணம்)ஹர்திக் பாண்டியாசினைப்பை நோய்க்குறிமதுரை108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்ரமலான் நோன்புசப்ஜா விதைதொழுகை (இசுலாம்)இந்திய அரசியல் கட்சிகள்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்செம்மொழிபிரேமலதா விஜயகாந்த்பீப்பாய்மறைமலை அடிகள்நீதிக் கட்சிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சிவவாக்கியர்தமிழ்ப் புத்தாண்டுதமிழ்ஜோதிமணிசூரியன்உமறுப் புலவர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ந. பிச்சமூர்த்திதிதி, பஞ்சாங்கம்நீர் மாசுபாடுகணியன் பூங்குன்றனார்இந்திய தேசிய காங்கிரசுதிராவிடர்திவ்யா துரைசாமிவிடுதலை பகுதி 1நற்றிணைசிலப்பதிகாரம்கொங்கு நாடுமுருகன்சிவனின் 108 திருநாமங்கள்சுரதாஅமேசான்.காம்நோட்டா (இந்தியா)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கம்பர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இயற்பியல்🡆 More