இந்திய உணவுமுறை: இந்திய சமையல் கலாச்சாரம்

இந்திய உணவுமுறை என்பது இந்திய நாட்டின் உணவு பழக்கவழக்கங்கள், சமையல் முறைகள் பற்றிய தொகுப்பாகும்.

ஒரு நாட்டின் உணவு பழக்கவழக்கமானது அந்த நாட்டின் மண்வளம், பருவநிலை மாற்றம், கலாச்சாரம், தொழில்கள், பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள், வாசனைப்பொருட்கள் ஆகியவற்றை பொறுத்து அமையும்.

வரலாறு

இந்திய நாட்டின் உணவு பழக்கவழக்கங்கள் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. பிற நாட்டவர்களின் படையெடுப்பால் இந்திய உணவு கலாச்சாரம் பல நாட்டவர்கள் உணவு கலாச்சாரத்தையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளது.

வட்டார உணவுமுறைகள்

அந்தமான் நிக்கோபர் தீவுகள்

அந்தமான் நிக்கோபர் தீவுகளை பொறுத்தவரை கடல்சார் உணவுகளை பெரிதும் உண்ணுகின்றனர்.

ஆந்திரபிரதேசம்

இந்திய உணவுமுறை: வரலாறு, வட்டார உணவுமுறைகள், கருநாடகம் 
பிரபலமான ஆந்திர உணவான பெசரட்டு தேங்காய் சட்னியுடன் பரிமாறப்பட்டது.

ஆந்திராவை பொறுத்தவரை அரிசி முதன்மை உணவாகும். கடல்சார் உணவுகள் கடலோர மாநில மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. புளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகிறது.காலை உணவாக இட்லி, தோசை ஆகியவை உண்ணப்படுகின்றது.

அருணாச்சலபிரதேசம்

அருணாச்சலபிரதேச மக்கள் அரிசியை மீன், கீரை மற்றும் மாமிச உணவுகளோடு உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இலைக்கோசு முக்கிய தாவர உணவாகும். இது இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் உடன் கொதிக்க வைத்து உண்ணப்படுகிறது. இலைகள் மூடப்பட்டு வேகவைத்த அரிசி கேக்குகள் இங்கு ஒரு பிரபலமான சிற்றுண்டி. அருணாச்சல பழங்குடியினர் தங்கள் உணவை செய்ய மீன், முட்டை, மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி பயன்படுத்துகின்றனர். புளிக்க நெல் அல்லது தினை இருந்து தயாரிக்கப்படும் அபாங் அல்லது அரிசி பீர் அருணாசலப் பிரதேச மக்களால் ஒரு பிரபலமான பானம் மற்றும் ஒரு புத்துணர்ச்சி பானம் என உட்கொள்ளப்படுகிறது.

பீகார்

கரம் மசாலா, உருளைகிழங்குடன் சேர்த்து சமைக்கப்படும் ஆட்டிறைச்சி இங்கு பிரசிதிப்பெற்றது.

சண்டிகர்

சண்டிகர் 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு நகரம் என்றாலும் இங்கு ஒரு நவநாகரிக உணவு பண்பாடு உள்ளது. சோள மாவு (மக்கீ) இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி போன்ற பஞ்சாபி உணவுகள் இங்கு புகழ்பெற்ற உணவு.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மக்களின் முக்கிய உணவு அரிசி. சத்தீஸ்கர் மாநில பஸ்தர் பகுதியில் பழங்குடி மக்கள் காளான்கள், அணில், மூங்கில் ஊறுகாய், மூங்கில் காய்கறிகள் முதலியவற்றை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். மகாவா பூவிலிருந்து கிடைக்கும் சூடான மதுபான வகைகள் இங்கு பிரபலம்.

தமிழ்நாடு

இந்திய உணவுமுறை: வரலாறு, வட்டார உணவுமுறைகள், கருநாடகம் 
தமிழ்நாட்டில் வரத்தகரீதியாக பரிமாறப்படும் சைவ உணவு.

தமிழநாட்டை பொறுத்தவரை அரிசி முதன்மை உணவாகும். இவர்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்கின்றனர். கறிவேப்பிலை, புளி, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சாதிக்காய், தேங்காய் ஆகியவை தமிழர் சமயலில் அன்றாடம் இடம் பிடிப்பவை. மதிய உணவாக சோறுடன், குழம்பு மற்றும் கூட்டு வகையுடன் உண்கின்றனர். குழம்பாக சாம்பார், இரசம், மோர், வெறும் கறி(தேங்காய் குழம்பு) பயன்படுத்தப்படுகின்றன. கூட்டாக அவியல், பொரியல், அப்பளம், ஊறுகாய் போன்றவை உண்ணப்படுகின்றன. காலை உணவாக இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, ரவை, பொங்கல் ஆகியவை உண்ணப்படுகின்றது.

கேரளம்

கேரளா மக்கள் அரிசியை முதன்மை உணவாகக் கொண்டுள்ளனர். மீன் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்கள் கேரள உணவு கலாச்சாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. சாளை, கிளாத்தி, பார்ப்பவர் மீன், கிங் மீன், வாவல், இறால், நெத்திலி, கிளி மீன் முதலிய மீன் வகைகளும், சுரப்பிகள், சிப்பிகள், நண்டுகள், மீன், நத்தை முதலிய கடல்சார் உணவுப் பொருட்களும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. தென்னிந்திய உணவுவகைகளில் முக்கிய இடம் வகிக்கும் கேரள உணவு வகைகளில் தேங்காய் இன்றியமையாததாகும். தேங்காயின் உபப் பொருட்களான எண்ணெய், பால், தேங்காய்த்துருவல், கொப்பரை, இளநீர், போன்றவை சுவைக்கூட்டாக பயன்படுத்தப் படுகின்றன. இட்லி, தோசை, ஆப்பம், புட்டு போன்றவை பிரசிதிப் பெற்ற காலை உணவுகளாகும்.

கருநாடகம்

கர்நாடக உணவுமுறை, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் சமூகங்களிலும் உள்ள பாரம்பரிய உணவு வகைகளைக் குறிப்பதாகும். இதில் வடகர்நாடக உணவு, தென்கர்நாடக உணவு, உடுப்பி சமையல், சரஸ்வத் உணவு, குடகு சமையல், மங்களூர் கத்தோலிக்க உணவு மற்றும் நவயத் உணவுகள் அடங்கும்.

லட்டு

முதன்மைக் கட்டுரை: லட்டு இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது.

ஆதாரங்கள்

Tags:

இந்திய உணவுமுறை வரலாறுஇந்திய உணவுமுறை வட்டார உணவுமுறைகள்இந்திய உணவுமுறை கருநாடகம்இந்திய உணவுமுறை ஆதாரங்கள்இந்திய உணவுமுறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியல் கட்சிகள்முல்லை (திணை)கவிதைசிவபெருமானின் பெயர் பட்டியல்பழனி முருகன் கோவில்திருக்குறள்வானிலைகுறுந்தொகைகேள்விநாழிகைஇந்தியக் குடியரசுத் தலைவர்ஆபுத்திரன்விஜயநகரப் பேரரசுஉயிர்ச்சத்து டிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கிருட்டிணன்செங்குந்தர்தமிழ்ஒளிதிருமந்திரம்மனித உரிமைபாண்டி கோயில்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகுண்டூர் காரம்ரோகிணி (நட்சத்திரம்)அபிராமி பட்டர்அம்மனின் பெயர்களின் பட்டியல்கிரியாட்டினைன்நயினார் நாகேந்திரன்அட்சய திருதியைகல்லீரல் இழைநார் வளர்ச்சிமுடியரசன்நாயன்மார் பட்டியல்தைப்பொங்கல்கார்த்திக் (தமிழ் நடிகர்)தமிழில் சிற்றிலக்கியங்கள்நம்பி அகப்பொருள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இராபர்ட்டு கால்டுவெல்பெரியண்ணாதண்டியலங்காரம்பள்ளிக்கரணைதசாவதாரம் (இந்து சமயம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புபாசிப் பயறுசன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்திய ரிசர்வ் வங்கிசேக்கிழார்தமிழ்வாகைத் திணைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ம. பொ. சிவஞானம்லால் சலாம் (2024 திரைப்படம்)சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்கொடைக்கானல்காச நோய்வாலி (கவிஞர்)தன்யா இரவிச்சந்திரன்தொழிலாளர் தினம்ஆங்கிலம்சிலம்பரசன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்யாதவர்வெந்தயம்நிதிச் சேவைகள்நந்திக் கலம்பகம்மண் பானைகினோவாமருதம் (திணை)திரிசாதிராவிசு கெட்பால கங்காதர திலகர்செக் மொழிபீப்பாய்முதுமலை தேசியப் பூங்காதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்வன்னியர்கம்பர்வெப்பநிலை🡆 More