2015 பாகாப் படுகொலை

2015 பாகாப் படுகொலை (2015 Baga massacre) நைசீரியாவின் போர்னோ மாநிலத்தில் பாகா நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சனவரி 3,2015 முதல் சனவரி 7 வரை போகோ அராம் நடத்திய, சில அறிக்கைகளின்படி இன்னமும் நடத்துகின்ற, திரள் கொலைகளும் தாக்குதல்களும் ஆகும்.

சனவரி 3 அன்று இந்த நகரில் சாட், நைஜர், மற்றும் நைஜீரியாத் துருப்புக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த பன்னாட்டு கூட்டு செயல் படைப்பிரிவு தலைமையகத்தை போகோ அராம் தாக்கினர்; தொடர்ந்து ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களை போகோ அராம் போராளிகள் கடத்திச் சென்றனர்; இவர்கள் சனவரி 7 அன்று திரளாகக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது.

2015 பாகாப் படுகொலை
Baga is located in Nigeria
Baga
Baga
நைஜீரியாவில் பாகாவின் அமைவிடம்
இடம்பாகா, போர்னோ மாநிலம், நைஜீரியா
ஆள்கூறுகள்13°7′7.7″N 13°51′23.7″E / 13.118806°N 13.856583°E / 13.118806; 13.856583
நாள்3 - 7 சனவரி 2015 (2015-01-07)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
உள்ளூர் மக்கள், நகரிலுள்ள நைசீரியப் படைத் தளம்
தாக்குதல்
வகை
திரள் கொலைகள், கட்டுப்பாடற்ற கொலைகள், பெட்றோல் குண்டுவீச்சு, மற்றவை
இறப்பு(கள்)குறைந்தது 100, 2,000க்கும் மேலாக "கணக்கில் இல்லாது"
தாக்கியோர்போகோ அராம்

இறந்தவர்கள் எண்ணிக்கை "கூடுதலாக" இருக்குமென்று கூறப்பட்டாலும் உண்மையான மதிப்பீடு கிட்டவில்லை; தப்பி ஓடிய உள்ளூர் அதிகாரிகளும் மக்களும் "2,000க்கும்" கூடுதலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது "காணப்படவில்லை" என்றும் கூறுகின்றனர்; ஆனால் சில அறிக்கைகளின்படி "குறைந்தது நூறு" உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றன. பல அரசு அலுவலர்கள் இவற்றை மறுத்துள்ளனர்; சிலர் எந்தப் படுகொலையும் நடக்கவில்லை என்றும் நைசீரியப் படைகள் போராளிகளை எதிர்த்து துரத்தி விட்டதாகவும் கூறுகின்றனர். இதனை உள்ளூர் அலுவலர்களும் மக்களும் தப்பிவந்தவர்களும் பன்னாட்டு ஊடகங்களும் மறுக்கின்றனர்.

பாகாவும் குறைந்தது 16 மற்ற ஊர்களும் எரியூட்டி அழிக்கப்பட்டதாகவும் 35,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சாட் ஏரியை கடக்கையில் பலர் மூழ்கி இறந்ததாகவும் இந்த ஏரியின் தீவுகளில் பலர் அடைபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதல்கள் மூலம் போகோ அராம் போர்னோ மாநிலத்தில் 70% பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

மேற்சான்றுகள்

Tags:

சாட்நைஜர்நைஜீரியாபோகோ அராம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பனிக்குட நீர்ஆதம் (இசுலாம்)மகாபாரதம்ரமலான் நோன்புவேதநாயகம் பிள்ளைதமிழர் பண்பாடுயானைசிங்கப்பூர்வே. செந்தில்பாலாஜிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருப்பூர் மக்களவைத் தொகுதிகள்ளுபரிவுதுரைமுருகன்தேசிக விநாயகம் பிள்ளைசிலப்பதிகாரம்108 வைணவத் திருத்தலங்கள்விநாயகர் அகவல்வெண்குருதியணுமார்ச்சு 29காதல் கொண்டேன்சீரடி சாயி பாபாதிருவாசகம்பறையர்தமிழக வரலாறுமுதுமொழிக்காஞ்சி (நூல்)முகம்மது நபிபல்லவர்கருக்கலைப்புபசுபதி பாண்டியன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இந்திய ரூபாய்நாட்டார் பாடல்போயர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியக் குடியரசுத் தலைவர்புங்கைபுணர்ச்சி (இலக்கணம்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அரக்கோணம் மக்களவைத் தொகுதிநிணநீர்க்கணுஆடு ஜீவிதம்ம. பொ. சிவஞானம்சு. வெங்கடேசன்கர்ணன் (மகாபாரதம்)வி. சேதுராமன்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்ஆய்த எழுத்து (திரைப்படம்)மார்பகப் புற்றுநோய்சிறுநீரகம்மூசாசெக் மொழிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஅன்புமணி ராமதாஸ்அ. கணேசமூர்த்திஹர்திக் பாண்டியாகிரிமியா தன்னாட்சிக் குடியரசுசப்ஜா விதைவரலாறுபந்தலூர் வட்டம்ஹோலிபெங்களூர்மக்காமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்ஜெயகாந்தன்கடையெழு வள்ளல்கள்கண்ணப்ப நாயனார்இராபர்ட்டு கால்டுவெல்உயர் இரத்த அழுத்தம்பகத் சிங்நியூயார்க்கு நகரம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)கலம்பகம் (இலக்கியம்)புறநானூறுபொறியியல்எனை நோக்கி பாயும் தோட்டாமுக்குலத்தோர்மணிமேகலை (காப்பியம்)🡆 More