சேக் அசீனா வாசித் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) என்பவர் வங்காளதேச அரசியல்வாதியும் 2009ஆம் ஆண்டு முதல் இவர் வங்காளதேசத்தின் பிரதமராக இருப்பவரும் ஆவார்.
இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். மேலும் இவர் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். இவர் வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.
மாண்புமிகு சேக் அசீனா வாசிட் শেখ হাসিনা ওয়াজেদ | |
---|---|
வங்காளதேசத்தின் 10வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 சனவரி 2009 | |
குடியரசுத் தலைவர் | இஜூதின் அகமது சில்லூர் இரகுமான் அப்துல் அமீது |
முன்னையவர் | பக்குருதின் அகமது (இடைக்காலம்) |
பதவியில் ஜூன் 23, 1996 – ஜூலை 15, 2001 | |
குடியரசுத் தலைவர் | சகாபுதீன் அகமது |
முன்னையவர் | ஹபிபுர் ரகுமான் (இடைக்காலம்) |
பின்னவர் | லத்திபுர் ரகுமான் (இடைக்காலம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 28, 1947 கோபால்கஞ்ச், கிழக்கு பாகிஸ்தான் (தற்கால வங்காளதேசம்) |
அரசியல் கட்சி | அவாமி லீக் |
இவர் 2019 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார். முன்னதாக 30 திசம்பர் 2018 இல் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் தலைமையிலான பெருங்கூட்டணி வெற்றி பெற்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article சேக் அசீனா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.