விடுமுறை நாள்

விடுமுறை நாட்கள் என்பன தனிப்பட்ட மனிதர், அரசுகள் அல்லது சமய அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் சிறப்பு நாட்கள் ஆகும்.

”விடுமுறை நாள்” என்னும் தொடருக்கு உலகின் பல நாடுகளில் பல பொருள் கொள்ளப்படுகிறது. ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் விடுமுறை என்றால் வழக்கமான பணி அல்லது கல்வி கற்கையில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும் நாளாகும். ஐக்கிய அமெரிக்காவில் “விடுமுறை” என்பது ஏதேனும் பண்டிகை அல்லது விழாவைக் கொண்டாடக் குறிக்கும் நாள் எனக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் விடுமுறை என்பது நிறுவனங்கள் பண்பாடு, அரசியல், சமூக, சமய காரணங்களால் மூடப்பட்டிருக்கும் நாட்களைக் குறிக்கிறது.

சிறப்பு நாட்களில் பணியிலிருந்து விடுப்பு தரப்படுவது மட்டுமன்றி பணி/கல்வி அட்டவணையின் ஒரு இயல்பு அங்கமாகவும் விடுப்பு அளிக்கப்படலாம். வாரத்தின் ஆறு நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு, ஒரு நாள் ஓய்வெடுப்பதற்காகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வார விடுமுறை நாள்

பல சமயங்களில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள் கட்டாய ஓய்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக யூதத்தில் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஷபாத் என்னும் கட்டாய ஒய்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கிறித்தவத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பல இசுலாமிய நாடுகள் வெள்ளிக்கிழமையும் இவ்வாறு வார விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் (கிறித்தவ நாடுகள் இல்லையெனினும்) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் தொழிலாளர்களுக்கான விடுமுறை

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, ஆண்டு விடுமுறை, தேசிய விடுமுறை, மாநில விடுமுறை, தற்செயல் விடுமுறை, மருத்துவ விடுமுறை போன்றவைகளை அளிக்க வேண்டும் என இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 இல் கூறப்பட்டுள்ளது. இதுபோல் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய பேறு கால நலச் சட்டம் 1961இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை

இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 52இன் கீழ் வார விடுமுறை குறித்த விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை,

  1. வாரத்தின் முதல் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை சாதாரணமாக விடுமுறை நாளாகும்.
  2. தொழிற்சாலை நிர்வாகி, ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக அதற்கு முன்னுள்ள அல்லது பின்னுள்ள மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளை விடுமுறை நாளாக அறிவிக்கலாம்.
  3. ஒருவரது வார விடுமுறை நாள் என்பது அவரது மாற்றுமுறை வேலை நேரம் முடிந்த நிமிடத்திலிருந்து தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தைக் குறிக்கும்.
  4. வார விடுமுறை நாள் இல்லாமல் ஒருவர் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது.
  5. வார விடுமுறை வழங்க மறுத்து தொடர்ந்து வேலை செய்யுமாறு வற்புறுத்தப்படும்போது தொழிலாளி இழப்பீடு கோரிப் பெற உரிமையுடையவராகிறார்.

தேசிய விடுமுறை

தேசிய விடுமுறை நாட்களாக மூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  1. குடியரசு நாள் - சனவரி 26
  2. இந்திய விடுதலை நாள் - ஆகத்து 15
  3. காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2

இந்நாட்களில் அனைத்து அமைப்புககளும் கட்டாயமாக விடுமுறை வழங்குமாறு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசின் பல்வேறு அமைச்சகங்களும், அரசுடைமை நிறுவனங்களும் அவை அமைந்துள்ள மாநில அரசு விடுமுறைகளைத் தழுவியும் அம்மாநில ஊழியர் சம்மேளனங்களின் பரிந்துரையின்படியும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குரிய விடுமுறைகளை அறிவிக்கின்றன.

மாநில விடுமுறை

தமிழ்நாட்டில் உள்ள விடுமுறை நாட்கள்

  • புத்தாண்டு தினம் (ஜனவரி 1)
  • பொங்கல்
  • திருவள்ளுவர் தினம்
  • உழவர் திருநாள்
  • குடியரசு தினம் (ஜனவரி 15)
  • மிலாடி நபி
  • தெலுங்கு வருட பிறப்பு
  • வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு
  • மகாவீர் ஜெயந்தி
  • புனித வெள்ளி
  • புத்தாண்டு தினம்
  • டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்
  • மே தினம் (மே 1)
  • சுதந்திர தினம் (ஆகஸ்டு 15)
  • ரம்ஜான் ஆகஸ்டு
  • கிருஷ்ண ஜெயந்தி
  • விநாயகர் சதுர்த்தி
  • வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு
  • காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)
  • ஆயுத பூஜை
  • விஜய தசமி
  • பக்ரீத்
  • தீபாவளி
  • மொகரம்
  • கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25)

பணி விடுப்புகள்

இந்த விடுமுறை நாட்களைத் தவிர பணியாளர்களின் தனிப்பட்டத் தேவைகளுக்காக "பணி விடுப்புக்கள்" கொடுக்கப்படுகின்றன. இவை தற்செயல் நிகழ்வுகள், பேறு காலத் தேவைகள், உடல்நலக்குறைவுகள் போன்றவற்றிற்காக ஆண்டுக்கு இவ்வளவு நாட்கள் என ஒவ்வொரு அமைப்பாலும் வரையறுக்கப்பட்டு ஊழியர் நியமன உத்தரவில் குறிப்பிடப்படுகின்றன. தவிர நடுவண் மற்றும் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பதினோரு வேலை நாட்களுக்கு ஒருநாள் என ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.

இலங்கையில் பொது விடுமுறை நாட்கள்

  • முழுமதி நாட்கள் (மாதம் தோறும்)
  • தைப்பொங்கல்
  • தேசிய தினம் பெப்ரவரி 4
  • மகா சிவராத்திரி
  • பெரிய வெள்ளி
  • புத்தாண்டு தினத்திற்கு முந்திய நாள்
  • புத்தாண்டு தினம்
  • மே தினம் மே1
  • ரம்ஜான் ஆகஸ்டு
  • தீபாவளி
  • கிறிஸ்துமஸ்

வெளியிணைப்புகள்

Tags:

விடுமுறை நாள் வார விடுமுறை நாள் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான விடுமுறைவிடுமுறை நாள் பணி விடுப்புகள்விடுமுறை நாள் இலங்கையில் பொது விடுமுறை நாட்கள்விடுமுறை நாள் வெளியிணைப்புகள்விடுமுறை நாள்பண்டிகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தஞ்சைப் பெருவுடையார் கோயில்கொங்கு வேளாளர்அவுரி (தாவரம்)சிறுநீரகம்பொருநராற்றுப்படைதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்அக்கிஇதயம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திராவிடர்சீனாஇந்தியத் தேர்தல்கள் 2024கா. ந. அண்ணாதுரைசென்னையில் போக்குவரத்துசுற்றுச்சூழல் மாசுபாடுவெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமக்களவை (இந்தியா)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஏப்ரல் 27அக்கி அம்மைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஐங்குறுநூறுசிவவாக்கியர்காதல் கொண்டேன்புறப்பொருள் வெண்பாமாலைபுலிதிரவ நைட்ரஜன்செஞ்சிக் கோட்டைகூர்ம அவதாரம்தொல். திருமாவளவன்காமராசர்திருவள்ளுவர் ஆண்டுவிண்டோசு எக்சு. பி.சுகன்யா (நடிகை)சன்ரைசர்ஸ் ஐதராபாத்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அரிப்புத் தோலழற்சிமெய்ப்பொருள் நாயனார்சங்க இலக்கியம்ஆற்றுப்படைஅருணகிரிநாதர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருவையாறுசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்தொல்காப்பியம்தமிழ்த்தாய் வாழ்த்துவட்டாட்சியர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திரிகடுகம்அருந்ததியர்வீரமாமுனிவர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஜன கண மனமுரசொலி மாறன்சார்பெழுத்துகணியன் பூங்குன்றனார்வேலு நாச்சியார்இராமர்மண் பானைஅம்மனின் பெயர்களின் பட்டியல்சமந்தா ருத் பிரபுஒன்றியப் பகுதி (இந்தியா)ஆண்டு வட்டம் அட்டவணைதமிழ் இலக்கணம்புறப்பொருள்சிலப்பதிகாரம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பெரியபுராணம்செக் மொழிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்காடுவெட்டி குரு🡆 More