வாடகையுந்து

வாடகையுந்து அல்லது வாடகையூர்தி (ஆங்கிலத்தில் TAXICAB (அ) TAXI, CAB,) என்பது ஒற்றைப் பயணியோ அல்லது சிறுகுழுவோ தங்கள் விருப்பபடி பயணம் செய்ய ஒரு வாகனஒட்டியுடன் அமர்த்திக்கொள்ளும் ஒரு வகை வாகனம் ஆகும்.

வாடகையுந்து பயணிகளின் விருப்பத்தின்படி அவர் விரும்பும் இடங்களுக்கு எடுத்துச் செல்கிறது. ஆனால் ஏனைய பொதுப் போக்குவரத்துகளில் பயண ஆரம்பிக்கும் இடம் மற்றும் சேருமிடம் பயணிகளால் அன்றி சேவை வழங்குனர்களாலேயே தீர்மானிக்கப்படும். மேலும் தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து மற்றும் பகிர்வு வாடகையுந்து (share taxi) ஆனது பேருந்து/டாக்சி எனப் பலவிதமான போக்குவரத்து முறைகளை வழங்குகிறது.

வாடகையுந்து
வாடகையுந்துவின் மேலுள்ள ஒளிரும் சுட்டி
வாடகையுந்து
இந்தியாவின் மேங்கோ ஆரஞ்சு கிராமத்தில் தானி
வாடகையுந்து
கொல்கத்தாவில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் வாடகையுந்து
வாடகையுந்து
மும்பையிலுள்ள ரீட்ரோ பிரீமியர் பத்மினி வாடகையுந்து
வாடகையுந்து
சிங்கப்பூரிலுள்ள ஹீண்டாய் i40 வாடகையுந்து

சொற்பிறப்பியல்

மார்ச் 9 1898ல் பாரிசில் முதன்முதலாக வாடகை அளவீடுமானி பொருத்தப்பட்ட டாக்சிகேப்கள் அறிமுகமாயின, அவை டாக்சாமீட்டர்கள் (taxamètres) என்றழைக்கப்பட்டன, பின்பு அக்டோபர் 17 1904, அவை டாக்சிமீட்டர்கள் (taximètres) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

ஹாரி நதானியேல் ஆலன் என்பவருடைய நியூயார்க் நகரம் டாக்சிகேப் நிறுவனம், 1907ல் பிரான்சிலிருந்து எரிவாயுவினால் இயங்கும் 600 டாக்சிகேப்களை இறக்குமதி செய்தது. அப்பொழுது "taximeter cabriolet"(டாக்சிமீட்டர் காப்ரியோலட்) என்ற வார்த்தையானது "taxicab" (டாக்சிகாப்) எனச் சுருக்கப்பட்டது.

டாக்சிமீட்டர் என்பது பிரெஞ்சு வார்த்தையான "taximètre" என்பதின் தழுவலாகும். முதல்பகுதியான டாக்சி, மத்தியகால லத்தீன் வார்த்தையான "taxa" விலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் வரி அல்லது கட்டணம் ஆகும். இதனுடன் அளவீடுதல் எனப்பொருள் தரும் கிரேக்க வார்த்தையான metron (μέτρον) என்பதிலிருந்து மீட்டர் என்ற வார்த்தைப் பெறப்பட்டு சேர்க்கப்பட்டது.

காப்ரியோலட் என்பது, குதிரையால் இழுக்கப்படும் ஒரு வகை வண்டியாகும், இது தாண்டு (leap), துள்ளு (caper) எனப்பொருள் தரும் பிரெஞ்சு வார்த்தையான "காப்ரியோலர் (cabrioler)", குதிக்க(to jumb) எனப் பொருள்படும் இத்தாலி வார்த்தையான "capriolare", காட்டு ஆடு(wild goat), ஆண் மான்(roebuck) எனப்பொருளப்டும் லத்தீன் வார்த்தையான "capreolus" என்பதிலிருந்தும் பெறப்பட்டது.

சான்றுகள்

Tags:

தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதிற்றுப்பத்துசிவாஜி கணேசன்பால் (இலக்கணம்)பூலித்தேவன்குறுந்தொகைடி. எம். சௌந்தரராஜன்பொது ஊழிகா. ந. அண்ணாதுரைசமணம்தமிழ் விக்கிப்பீடியாதமிழர் சிற்பக்கலைஓமியோபதிமருதமலை முருகன் கோயில்கல்விவீரப்பன்கௌதம புத்தர்யானைசென்னைஇடலை எண்ணெய்ஓவியக் கலைஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்இளங்கோ கிருஷ்ணன்காதலன் (திரைப்படம்)இசுலாம்பார்த்திபன் கனவு (புதினம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கற்பித்தல் முறைடொயோட்டாராம் சரண்வளையாபதிசிறுநீர்ப்பாதைத் தொற்றுவெ. இராமலிங்கம் பிள்ளைஆதி திராவிடர்திருமுருகாற்றுப்படைநாலடியார்இந்திய உச்ச நீதிமன்றம்விலங்குஇரவுக்கு ஆயிரம் கண்கள்சுப்பிரமணிய பாரதிஅபூபக்கர்பட்டினத்தார் (புலவர்)கள்ளர் (இனக் குழுமம்)விநாயகர் (பக்தித் தொடர்)இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குவில்லங்க சான்றிதழ்விடுதலை பகுதி 1காமராசர்மக்களவை (இந்தியா)வாலி (கவிஞர்)உ. சகாயம்கருக்கலைப்புதிருநாவுக்கரசு நாயனார்இன்று நேற்று நாளையாவரும் நலம்குறிஞ்சி (திணை)மக்காகார்த்திக் ராஜாவெந்து தணிந்தது காடுதமிழ் மாதங்கள்நரேந்திர மோதிமுதல் மரியாதைதமிழ் இலக்கணம்உயிர்ச்சத்து டிபட்டினப் பாலைஇந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்ஓரங்க நாடகம்குடிப்பழக்கம்பௌத்தம்ஜெயம் ரவிதேங்காய் சீனிவாசன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கேரளம்கற்றாழைஅஸ்ஸலாமு அலைக்கும்சேவல் சண்டைஅன்னி பெசண்ட்சப்ஜா விதைஇசைசென்னை சூப்பர் கிங்ஸ்🡆 More