லலித் அத்துலத்முதலி

லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி (நவம்பர் 26, 1936 - ஏப்ரல் 23, 1993) இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் முன்னாள் பாதுகாப்பு, வேளாண்மை, கல்வி அமைச்சரும் பாதுகாப்பு பிரதியமைச்சரும் ஆவார்.

மதிப்பிற்குரிய
லலித் அத்துலத்முதலி
லலித் அத்துலத்முதலி
இலங்கை நாடாளுமன்றம்
for கொழும்பு
பதவியில்
1977–1993
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 26, 1936
கொழும்பு, இலங்கை
இறப்புஏப்ரல் 23, 1993
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிமக்களாட்சி ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்சிறிமணி அனோமா அத்துலத்முதலி
பிள்ளைகள்செரெல்லா அத்துலத்முதலி
முன்னாள் கல்லூரிஇயேசுக் கல்லூரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,
றோயல் கல்லூரி, கொழும்பு
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி, பல்கலை விரிவுரையாளர்

தொடக்க வாழ்க்கை

அத்துலத்முதலி தனது பள்ளிப் படிப்பை கொழும்பு றோயல் கல்லூரியில் முடித்தார். பின்னர் சட்டவியலில் மேற்படிப்புக்காக 1955 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயேசுக் கல்லூரியில் இணைந்து படித்தார். 1958 ஆம் ஆண்டு ஆக்சுபோட் பல்கலையின் மாணவர் ஒன்றியத்தினது தலைவராக தெரிவுச் செய்யப்பட்ட முதல் இலங்கையர் ஆவார் மேலதிகமாக 1956 ஆம் ஆண்டில் செயலாளராகவும், 1957 ஆம் ஆண்டில் பொருளாலராகவும் அதே ஒண்ரியத்தில் பதவி வகித்தார்.

சட்டப்படிப்பை முடித்த லலித் கிரே இண் மூலமாக சட்டத்த்ரணியாக பதிவியேற்றார். அதன் பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழகம், எபிரேய பல்கலைக்கழகம், எடின்புரோ பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் என்பவற்றில் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் நாடு திரும்பி இலங்கை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்தார்.

அரசியல் வாழ்க்கை

1972 ஆம் ஆண்டு முன்னாள் இலங்கை பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் அழைப்பை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அத்துலத்முதலி அகலவத்தை தேர்தல் தொகுத்திக்கான கட்சியின் முதன்மை அமைப்பாளராக ஆக்கப்பட்டார். அத்துலத்முதலி 1977 ஆண்டின் இலங்கை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இரத்மலானை தேர்தல் தொகுதல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை நாடாளுமன்றம் சென்றார். இவருக்கு வர்தக அமைச்சு கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர் துறைமுக அமைச்சும் கொடுக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு அமைச்சும் கொடுக்கப்பட்டது. 1988 ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தனாவின் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு முயன்றார். எனினும் இதில் ரணசிங்க பிரேமதாசா வேட்பாளராக தெரிவுச் செய்யப்பட்டார். பின்னர் பிரேமதாசா அதிபரான போது இவருக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டப் போதும் வேளாண்மை அமைச்சும் பின்னர் கல்வி உயர்கல்வி அமைச்சுமே கொடுக்கப்பட்டது.

பிரேமதாசாவின் தலைமையில் விரக்தியுற்ற அத்துலத்முதலி அவர் மீது நம்பிக்கையில்லா மசோதா ஒன்றை கொண்டுவந்து தோல்வியுற்றார். இதனால் இவரும் இவருக்கு ஆதாரவளித்தவர்களும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர் தனது தலைமையில் மக்களாட்சி ஐக்கிய தேசிய முன்னணி என்றக் கட்சியை தொடங்கினார்.

கொலை

1993 ஏப்ரல் 23 ஆம் நாள் கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்ட மொன்றின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அரசு விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தி அடுத்த நாள் சம்பவ இடத்திற்கு அண்மையில் சயனைட் உண்டு இறந்து காணப்பட்ட தமிழ் இளைஞரே கொலையாளி என்றது. இருப்பினும் அப்போதைய அதிபர் பிரேமதாசா மீதும் சந்தேகம் நிலவிவந்தது.

மேற்கோள்கள்

Tags:

லலித் அத்துலத்முதலி தொடக்க வாழ்க்கைலலித் அத்துலத்முதலி அரசியல் வாழ்க்கைலலித் அத்துலத்முதலி கொலைலலித் அத்துலத்முதலி மேற்கோள்கள்லலித் அத்துலத்முதலி19361993இலங்கைஏப்ரல் 23நவம்பர் 26

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரகத நாணயம் (திரைப்படம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சீமான் (அரசியல்வாதி)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இந்திய தேசிய காங்கிரசுவைணவ சமயம்திருத்தணி முருகன் கோயில்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்வே. செந்தில்பாலாஜிதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்வேதநாயகம் சாஸ்திரியார்இராவண காவியம்குருதிச்சோகைசீரடி சாயி பாபாகுக்கு வித் கோமாளிதசாவதாரம் (இந்து சமயம்)தற்கொலை முறைகள்அருந்ததியர்மண்ணீரல்நாழிகைசுப்பிரமணிய பாரதிசெப்பேடுபெண்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ் விக்கிப்பீடியாவிராட் கோலிநெய்தல் (திணை)தினமலர்விஜய் வர்மாவளையாபதிஉணவுதொல்காப்பியர்மகேந்திரசிங் தோனிசுற்றுச்சூழல் பாதுகாப்புசிவன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தேவநேயப் பாவாணர்தமிழ்ப் பிராமிவசுதைவ குடும்பகம்கலைஉமறுப் புலவர்ஆப்பிள்கிராம நத்தம் (நிலம்)நீதி இலக்கியம்முதற் பக்கம்இலங்கையின் வரலாறுகல்விபழந்தமிழ் இசைஇந்திய நாடாளுமன்றம்ஆனைக்கொய்யாபிலிருபின்மருதமலை முருகன் கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅயோத்தி இராமர் கோயில்திணைபிரசாந்த்விளையாட்டுஜெமினிகணேசனும் சுருளிராஜனும்புரி ஜெகன்நாதர் கோயில்சுரதாஇரசினிகாந்துபத்ம பூசண்சுக்கிரீவன்பறையர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தேசிக விநாயகம் பிள்ளைஆசியாபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சேரர்ரோகித் சர்மாதிருமூலர்பனைதேம்பாவணிமுகம்மது நபிமுலாம் பழம்சூல்பை நீர்க்கட்டிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்அம்மனின் பெயர்களின் பட்டியல்🡆 More