யுகத்தா

யுகத்தா (浴衣) எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.

இது ஒருவகையான கிமோனோவே. ஆனால், கிமோனோ பட்டுத் துணியால் செய்யப்படுகிறது. இது பருத்தித் துணி, அல்லது செயற்கைக் துணி வகைகளால், உட்புறம் துணி வைக்காமல் தைக்கப்படுகின்றன. யுகத்தாக்களை ஆண்களும் பெண்களும் அணிகின்றனர். ஏனைய சப்பானிய உடைகளைப் போலவே யுகத்தாக்களும் நேர்ப் பொருத்துக்களும், அகன்ற கைகளும் கொண்டவை. ஆண்களின் யுகத்தாக்களின் கை நீட்சி, பெண்களின் யுகத்தாக்களின் கை நீட்சியை விடக் குறைவாக இருப்பது ஒரு வேறுபாடு. ஆண்கள் அணியும் யுகத்தாக்களின் கை நீட்சி 10 சதம மீட்டர் வரையும், பெண்கள் அணியும் யுக்தாக்களின் கைநீட்சி 20 சதம மீட்டர் வரையும் இருக்கும். ஒரு முழுமையான யுகத்தா ஆடைத் தொகுதி, ஒரு பருத்தி உள்ளாடை, யுகத்தா, ஒபி, வெறுங்கால் அல்லது கேதா (காலணி), மடிக்கத்தக்க அல்லது நிலைத்த விசிறி, கிஞ்சாக்கு எனப்படும் கைப்பை என்பவற்றை உள்ளடக்கியது. பல வகைத் தனிப்பட்ட சிறிய பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, கிஞ்சாக்கை ஆண்களும் பெண்களும் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் சில வேளைகளில் வெய்யிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவகைத் தொப்பியை அணிவதுண்டு. யுகத்தா என்னும் சொல்லின் நேரடிப் பொருள் "குளியல் ஆடை" என்பதாகும். ஆனாலும், நடைமுறையில் இது குளித்தபின் உடுப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. வெப்பமான கோடையில் யுகத்தாக்கள் சப்பானில் மிகப் பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள உடை.

யுகத்தா
ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் யுகத்தாக்கள்
பெண்களின் யுகத்தாவை அணிவது எப்படி?

மரபுவழியாக யுகத்தாக்கள் கருநீலச் சாயமிடப்பட்ட பருத்தித் துணியிலேயே தைக்கப்பட்டன. ஆனால், தற்காலத்தில் பல வகையான நிறங்களுடனும், அலங்காரங்களுடனும் கூடிய யுகத்தாக்கள் கிடைக்கின்றன. கிமோனாக்களைப் போலவே யுகத்தாக்கள் தொடர்பிலும் பொதுவான சில விதிகள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இளம் பெண்களும் ஆண்களும் பிரகாசமான நிறங்களிலும், தெளிவான அலங்காரங்களுடனும் யுக்தாக்களை அணிகின்றனர். சற்று வயது கூடியவர்கள் கடுமையான நிறங்களையும், மங்கலான அலங்காரங்களையும் பயன்படுத்துகின்றனர். சிறுவர்கள் பல நிறத் துணிகளையும் இளம் பெண்கள் பூக்கோலத் துணிகளையும் பயன்படுத்தக்கூடும். சற்று வயதான பெண்கள் மரபுவழியான கடும் நீல நிறத்தையும், வடிவவியல் கோலத் துணிகளையும் தெரிவு செய்வர். ஆண்கள் பொதுவாகத் தனிக் கடும் நிறத்தை விரும்புவர். 1990களில் இருந்து யுகத்தா உடை மறுமலர்ச்சி கண்டுள்ளது.

அனபி எனப்படும் வாணவேடிக்கை, பொன்-ஒடோரி விழா போன்ற வெளியில் நடைபெறும் கோடை நிகழ்வுகளில் யுகத்தாவை அணிவது வழக்கம். ரையோக்கான் எனப்படும் சப்பானிய விடுதிகளில் குளித்ததன் பின்னர் யுகத்தாவை அணிகின்றனர்.

வழக்கங்கள்

யுகத்தா 
யுகத்தா அணிந்த ஒரு பெண். ஒபி, விசிறி ஆகியவற்றைக் காட்டும் பின்புறப் படம்.

யுகத்தாவைக் கைகளூடாக மாட்டிய பின்னர், அதன் இடது பக்கத்தை வலது பக்கத்தின் மேலாக எடுத்துச் சுற்றுவர். இறப்பு வீட்டில் இறந்தவருக்கு உடை அணிவிக்கும்போது மட்டுமே இது மறுபுறமாக அணிவிக்கப்படுகிறது. சுற்றப்படும் யுகத்தா, வயிற்றுப் பகுதியைச் சுற்றி அணியப்படும் ஒபி எனப்படும் அகலமான நாடா மூலம் கட்டப்படும். இந்த நாடாவின் முனைகள் ஒரு பூ வடிவில் முடிச்சிடப்படும். மரபு வழியாக இந்த முடிச்சு முதுகுப் பக்கத்திலேயே இருக்கும். இந்த முடிச்சு முன்புறத்தில் இருந்தால் அது விபச்சாரியைக் குறிக்கும். தனியாக இருக்கும்போது, எடுத்துக்காட்டாக குளியலின் பின்னர் யுகத்தா வெறுமனே நாடாவால் கட்டப்படுவது உண்டு. யுகத்தாவைக் கேதா எனப்படும் மரத்தாலான காலணியுடன் அணிவது வழக்கம். ஆனால், பெரும்பாலும் காலுறை அணியும் வழக்கம் இல்லை.

வரலாற்றில் யுகத்தா

ஈயான் காலத்தில் (794-1185) அரசவைப் பிரபுக்கள் குளித்ததின் பின்னர் சுற்றிக்கொள்வதற்கு யுகத்தாவைப் பயன்படுத்தினர். இதைப் பின்னர் சப்பானியப் போர்வீரர்களும் அணிந்தனர். ஏடோ காலத்தில் (1600–1868) சப்பானில் பொதுக் குளியல் நிலையங்கள் பொழுதுபோக்கு இடங்களாகப் பிரபலமானபோது யுகத்தாவைப் பொது மக்களும் அணியத் தொடங்கினர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

யுகத்தா வழக்கங்கள்யுகத்தா வரலாற்றில் யுகத்தா மேற்கோள்கள்யுகத்தா வெளி இணைப்புகள்யுகத்தாஉள்ளாடைகோடைபருத்திவிசிறி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரிகடுகம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபாரதிய ஜனதா கட்சிபுரோஜெஸ்டிரோன்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைஉத்தரகோசமங்கைமு. க. முத்துநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்வெ. இராமலிங்கம் பிள்ளைநற்றிணைதொல்காப்பியர்குஷி (திரைப்படம்)தேனீபுறநானூறுகஞ்சாரச்சித்தா மகாலட்சுமிகல்விக்கோட்பாடுகிழவனும் கடலும்தினமலர்சூரியக் குடும்பம்கொடுக்காய்ப்புளிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கூத்தாண்டவர் திருவிழாபுறப்பொருள்புவிஇந்தியாவில் இட ஒதுக்கீடுசேக்கிழார்பி. காளியம்மாள்கட்டுவிரியன்விடுதலை பகுதி 1ஐங்குறுநூறுபோக்கிரி (திரைப்படம்)ராதிகா சரத்குமார்செண்டிமீட்டர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அங்குலம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழர் விளையாட்டுகள்உலகம் சுற்றும் வாலிபன்செங்குந்தர்அஜித் குமார்பல்லவர்மெய்யெழுத்துமே நாள்சிற்பி பாலசுப்ரமணியம்வரலாறுவேதநாயகம் பிள்ளைகொங்கு வேளாளர்இந்திய நாடாளுமன்றம்செஞ்சிக் கோட்டைகண்ணதாசன்புங்கைமொழிபெயர்ப்புமுல்லைக்கலிசங்கம் மருவிய காலம்பாண்டியர்ஐம்பூதங்கள்பிள்ளைத்தமிழ்குதிரைமலை (இலங்கை)திருநாவுக்கரசு நாயனார்ராஜா ராணி (1956 திரைப்படம்)நான்மணிக்கடிகைகுற்றியலுகரம்ஆற்றுப்படைஒற்றைத் தலைவலிகுலசேகர ஆழ்வார்தேர்தல்கருப்பசாமிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நந்திக் கலம்பகம்மீன் வகைகள் பட்டியல்ஐந்திணைகளும் உரிப்பொருளும்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்இலட்சம்🡆 More