சியான் செமீன்

சியான் செமீன் (Jiāng Zémín; 17 ஆகத்து 1926 – 30 நவம்பர் 2022) ஒரு சீன அரசியல்வாதி ஆவார்.

இவர் 1989 முதல் 2002 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், 1993 முதல் 2003 வரை சீனாவின் அரசுத்தலைவராகவும் பணியாற்றினார். மா சே துங், டங் சியாவுபிங், சீ சின்பிங் என்ற வரிசையில் சியான் சீனத் தலைமையின் மூன்றாம் தலைமுறையின் முக்கியத் தலைவராக இருந்தார்.

சியான் செமீன்
Jiang Zemin
江泽民
சியான் செமீன்
2002இல் சியாங்
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
24 சூன் 1989 – 15 நவம்பர் 2002
முன்னையவர்சாவோ சியாங்
பின்னவர்கூ சிங்தாவ்
மக்கள் சீனக் குடியரசின் 5-ஆவது அரசுத்தலைவர்
பதவியில்
27 மார்ச் 1993 – 15 மார்ச் 2003
பிரதமர்
Vice President
முன்னையவர்யாங் சாங்குன்
பின்னவர்கூ சிங்தாவ்
மத்திய ராணுவ ஆணையத் தலைவர்
பதவியில்
  • கட்சி ஆணையம்: 9 நவம்பர் 198919 செப்டம்பர் 2004
  • அரசு ஆணையம்: 19 மார்ச் 19908 மார்ச் 2005
முன்னையவர்டங் சியாவுபிங்
பின்னவர்கூ சிங்தாவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-08-17)17 ஆகத்து 1926
கியாங்து, கியாங்சு, சீனக் குடியரசு
இறப்பு30 நவம்பர் 2022(2022-11-30) (அகவை 96)
சிங்கான் மாகாணம், சாங்காய், சீனா
அரசியல் கட்சிசீனப் பொதுவுடமைக் கட்சி
துணைவர்
வாங் யெப்பிங் (தி. 1949)
பிள்ளைகள்சியாங் மியான்கெங்
பெற்றோர்s
  • சியாங் சிசுன் (father)
  • வு யெப்பிங் (mother)
முன்னாள் கல்லூரி
  • நாஞ்சிங் பல்கலைக்கழகம்
  • சங்காய் சியாவோ துங் பல்கலைக்கழகம் (இளங்கலை)
தொழில்மின்பொறியியல்
கையெழுத்துசியான் செமீன்
மத்திய குழு உறுப்புரிமை
  • 1989–2002: 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது அரசியற்குழு நிலைக்குழு
  • 1989–2005: 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது, 16-ஆவது மத்த்கிய இராணுவ ஆணையம்
  • 1987–2002: 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது அரசியற்குழு
  • 1983–2002: 12-ஆவது, 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது மத்திய குழு
  • 1988–2008: 7-ஆவது, 8-ஆவது, 9-ஆவது, 10-ஆவது, 11-ஆவது தேசிய மக்கள் பேரவை

ஏனைய அரசியல் பொறுப்புகள்
  • 1987–89: பொதுவுடமைக் கட்சிக் குழுச் செயலாளர், சாங்காய்
  • 1984–87: நகர முதல்வர், சங்காய்
  • 1983–85: மின்னணுத் தொழில் அமைச்சர்

மக்கள் சீன குடியரசின்
பெருந்தலைவர்

1989 தியனன்மென் சதுக்க எதிர்ப்புகள், படுகொலைகளைத் தொடர்ந்து சமரச வேட்பாளராக சியான் எதிர்பாராதவிதமாக ஆட்சிக்கு வந்தார். மாணவர் இயக்கத்திற்கான ஆதரவிற்காக சாவோ சியாங் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக சியான் செமீன் நியமிக்கப்பட்டார். அப்போது, சாங்காய் நகரின் கட்சித் தலைவராக சியான் இருந்தார். சீன அரசியலில் "எட்டு முதியவர்களின்" ஈடுபாடு படிப்படியாகக் குறைந்ததால், சியான் 1990களின் போது நாட்டில் "முக்கிய தலைவராக" ஆவதற்கு தனது அதிகாரத்தை ஒருங்கிணைத்துக்கொண்டார். 1992 இல் டங் சியாவுபிங்கின் தெற்கு சுற்றுப்பயணத்தால் வலியுறுத்தப்பட்டதன் படி, அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற 14வது கட்சி தேசியப் பேரவையின் போது சியான் தனது உரையில் "சோசலிச சந்தைப் பொருளாதாரம்" என்ற சொல்லை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார், இது "சீர்திருத்தத்தைத் திறந்த நிலையில்" வைத்திருக்கத் துரிதப்படுத்தியது.

சியானின் தலைமையின் கீழ், சந்தைச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியுடன் சீனா கணிசமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. 1997 இல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆங்காங்கைத் திரும்பப் பெற்றமை, 1999 இல் போர்த்துகலில் இருந்து மக்காவைத் திரும்பப் பெற்றமை, மற்றும் வெளி உலகத்துடன் அதன் உறவுகளை மேம்படுத்தியமை இவரது காலத்தில் நடந்தேறியது, அதே வேளை பொதுவுடமைக் கட்சி நாட்டின் மீதான அதன் இறுக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டது. பாலுன் காங் இயக்கத்தின் ஒடுக்குமுறை உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சியான் விமர்சனங்களை எதிர்கொண்டார். "மூன்று பிரதிநிதிகள்" என்று அழைக்கப்படும் கட்சிக் கோட்பாட்டிற்கான அவரது பங்களிப்புகள் 2002 இல் பொதுவுடமைக் கட்சியின் அரசியலமைப்பில் எழுதப்பட்டன. சியான் 2002 முதல் 2005 வரை தனது அதிகாரப்பூர்வ தலைமைப் பதவிகளில் இருந்து படிப்படியாக விலகி வந்தார். இப்பதவிகளுக்கு கூ சிங்தாவ் நியமிக்கப்பட்டார், இருப்பினும் இவர் பின்னாள் வரை பல விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தினார். சியான் செமீன் 2022 நவம்பர் 30 அன்று, இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சீ சின்பிங்சீனப் பொதுவுடமைக் கட்சிடங் சியாவுபிங்மா சே துங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுலாதமிழச்சி தங்கப்பாண்டியன்பரிதிமாற் கலைஞர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)புதுமைப்பித்தன்சப்ஜா விதைகரூர் மக்களவைத் தொகுதிஎட்டுத்தொகைபட்டினப் பாலைமுத்துலட்சுமி ரெட்டிகள்ளுசிலுவைப் பாதைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிலொள்ளு சபா சேசுகண்ணாடி விரியன்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்அல் அக்சா பள்ளிவாசல்இட்லர்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஅன்னை தெரேசாநனிசைவம்தேவாரம்திருப்பாவைஐம்பெருங் காப்பியங்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)குறுந்தொகைகலைதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்மனித மூளைஆடுதேர்தல் நடத்தை நெறிகள்கருப்பசாமிகன்னியாகுமரி மாவட்டம்மாதவிடாய்செக் மொழிசப்தகன்னியர்பி. காளியம்மாள்மலையாளம்ஐராவதேசுவரர் கோயில்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மதயானைக் கூட்டம்நாளந்தா பல்கலைக்கழகம்மண்ணீரல்சிறுகதைஅலீநிதி ஆயோக்சரண்யா துராடி சுந்தர்ராஜ்போயர்அபூபக்கர்நவதானியம்இந்திய நிதி ஆணையம்பண்பாடுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசிலப்பதிகாரம்சிதம்பரம் நடராசர் கோயில்இசுலாம்அப்துல் ரகுமான்ராசாத்தி அம்மாள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்புணர்ச்சி (இலக்கணம்)கடலூர் மக்களவைத் தொகுதிபெரும் இன அழிப்புராதாரவிதைராய்டு சுரப்புக் குறைசிவம் துபேதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்மேற்குத் தொடர்ச்சி மலைதமிழ் மன்னர்களின் பட்டியல்தங்கர் பச்சான்உருசியாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கேபிபாராஇயேசுகோயில்டி. எம். செல்வகணபதிசுரதாபாரதிய ஜனதா கட்சி🡆 More