மைக்கோலைவ் நகரம்: உக்ரேனில் உள்ள நகரம்

மைக்கோலைவ் ( ஆங்கிலம் : Mykolaiv) என்பது உக்ரைனனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மைக்கோலைவ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

இது கருங்கடலின் முக்கிய கப்பல் கட்டும் மையமாகும். நகரத்திற்குள் மூன்று கப்பல் கட்டும் தளங்களைத் தவிர, கப்பல் கட்டுமானத்தில் நிபுணத்துவம் வாய்ந்த பல ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. அதாவது மாநில ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு கப்பல் கட்டும் மையம், சோரியா-மஷ்ப்ரோக்ட் மற்றும் பிற. நகரத்தின் மக்கள் தொகை 2015 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 494,763  பேர் ஆகும்

இந்த நகரம் உக்ரைனின் கடல் துறைமுகம், வணிக துறைமுகம், நதி துறைமுகம், நெடுஞ்சாலை மற்றும் ரயில் சந்தி, விமான நிலையம் ஆகியவற்றிக்கான முக்கியமான போக்குவரத்து மையமாகும் .

மைக்கோலைவின் ஒழுங்கான தளவமைப்பு அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது . அதன் பிரதான வீதிகள், மூன்று முக்கிய கிழக்கு-மேற்கு அவென்யூக்கள் உட்பட, மிகவும் அகலமாகவும், மரங்களால் வரிசையாகவும் உள்ளன. மைக்கோலைவின் நிலப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி அழகான பூங்காக்களைக் கொண்டுள்ளது. பெரெமோஹி பூங்கா(வெற்றி) என்பது தீபகற்பத்தில் மைக்கோலைவ் நகர மையத்திற்கு வடக்கே, இன்ஹுல் ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பூங்காவாகும்.

நிர்வாகம்

மைக்கோலைவ் விட்டொவ்கா மாநிலம் மற்றும் மைக்கோலைவ் மாநிலம் ஆகிய இரு மாகாணங்களின் நிர்வாக மையமாக உள்ளது. இது நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

புவியியல் பண்புகள்

மைக்கோலைவ் உக்ரேனின் புல்வெளி பகுதியில் 65 கிலோமீட்டர்கள் (40 mi) பரப்பளவில் ஒரு தீபகற்பத்தில் அமைந்துள்ளது கருங்கடலில் இருந்து தெற்கு பிழை ஆற்றின் கரையோரத்தில் (அது இன்ஹுல் நதியை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது).

சூழலியல்

மைக்கோலைவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உக்ரைனில் உள்ள பல நகரங்களுக்கு பொதுவானவை: நீர், காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபாடு; குடிநீரின் தரம், சத்தம், கழிவு மேலாண்மை மற்றும் நகரத்தில் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் போன்றவை. மைக்கோலைவின் மிக அவசரமான பிரச்சினைகளில் ஒன்று திடக் கழிவுகளை அகற்றுவதாகும். நகரத்தில் 12 கிலோமீட்டர்கள் கொண்ட 18 பாதுகாக்கப்பட்ட தளங்கள் உள்ளன

காலநிலை

இந்நகரம் லேசான குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைகாலங்களுடன் மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. மைக்கோலைவின் சராசரி வெப்பநிலை 10 °C (50 °F) . மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை ஜனவரி −3.1 °C (26 °F) , ஜூலை 22.3 °C (72 °F) அதிகபட்சம் .

புள்ளி விவரங்கள்

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, 63% மக்கள் வீட்டில் உருசிய மொழியையும், 7% மக்கள் உக்ரேனிய மொழியையும், 28% மக்கள் உக்ரேனிய மற்றும் உருசிய மொழியையும் சமமாகப் பேசினர்.

பொருளாதாரம்

இன்று மைக்கோலைவ் உக்ரைனின் ஒரு முக்கிய கப்பல் கட்டும் மையம் (முன்பு, முழு சோவியத் யூனியனின் ) மற்றும் ஒரு முக்கியமான நதி துறைமுகமாகும் . நகரத்தில் மூன்று பெரிய கப்பல் கட்ட்டும் தளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பெரிய கடற்படைக் கப்பல்களைக் கட்டும் திறன் கொண்டது. மற்ற முக்கியமான தொழில்கள் இயந்திர பொறியியல், மின் பொறியியல், உலோகம் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் உணவுத் தொழில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விருதுகள்

சோவியத் அரசாங்கம், சோவியத் ஒன்றியத்தின் ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தில், தொழில்துறை உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அதன் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, டிசம்பர் 31, 1970 அன்று மைக்கோலைவ் தி ரெட் பேனர் ஆஃப் லேபர் என்ற விருதினை வழங்கியது.

குறிப்புகள்

Tags:

மைக்கோலைவ் நகரம் நிர்வாகம்மைக்கோலைவ் நகரம் புவியியல் பண்புகள்மைக்கோலைவ் நகரம் புள்ளி விவரங்கள்மைக்கோலைவ் நகரம் பொருளாதாரம்மைக்கோலைவ் நகரம் விருதுகள்மைக்கோலைவ் நகரம் குறிப்புகள்மைக்கோலைவ் நகரம்உக்ரைன்கருங்கடல்மைக்கோலைவ் மாநிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருதமலை முருகன் கோயில்சரத்குமார்இலிங்கம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அன்புமணி ராமதாஸ்போதி தருமன்கருப்பசாமி108 வைணவத் திருத்தலங்கள்முதுமொழிக்காஞ்சி (நூல்)அபூபக்கர்ரஜினி முருகன்தமிழ் மாதங்கள்இனியவை நாற்பதுசூர்யா (நடிகர்)செண்டிமீட்டர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்ஆற்றுப்படைஇந்திய வரலாறுசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)ஆசியாமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இஸ்ரேல்தருமபுரி மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிபிரீதி (யோகம்)புவிவெப்பச் சக்திமக்களவை (இந்தியா)2014 உலகக்கோப்பை காற்பந்துதெலுங்கு மொழிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்திருவாரூர் தியாகராஜர் கோயில்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சென்னைவிராட் கோலிவிவேக் (நடிகர்)பி. காளியம்மாள்அளபெடைபிரெஞ்சுப் புரட்சிஅன்னி பெசண்ட்பசுமைப் புரட்சிதமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய ரூபாய்அ. கணேசமூர்த்திமுத்துராஜாநெடுநல்வாடைகொல்லி மலைகுலுக்கல் பரிசுச் சீட்டுமுத்துலட்சுமி ரெட்டிதி டோர்ஸ்பெங்களூர்கண்ணதாசன்வன்னியர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குற்றாலக் குறவஞ்சிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சப்தகன்னியர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஆய்த எழுத்து (திரைப்படம்)பாக்கித்தான்உன்னாலே உன்னாலேநாமக்கல் மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைவிநாயகர் அகவல்பண்ணாரி மாரியம்மன் கோயில்கான்கோர்டுஇலக்கியம்செக் மொழிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பதினெண்மேற்கணக்குஅயோத்தி இராமர் கோயில்லொள்ளு சபா சேசுஎங்கேயும் காதல்தமிழ்த்தாய் வாழ்த்துசூல்பை நீர்க்கட்டிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிகுமரி அனந்தன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019🡆 More