மாறன், பௌத்தம்

மாறன் அல்லது மாரன் (Mara) (சமக்கிருதம்: मार, பௌத்த சாத்திரங்களில் கூறப்படும் அசுரர் ஆவான்.

தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் மாரன். புத்தரின் தவத்தை கலைக்க முயன்று, மாறன் தோற்ற கதைகள் பௌத்த சாத்திரங்களில் விரிவாக உள்ளது. இந்து சமயத்தில் கூறப்படும் மன்மதனுக்கு நிகரானவன் மாறன்.

மாறன், பௌத்தம்
மாறனின் சிற்பம், சுவத் மாவட்டம், பாகிஸ்தான்
மாறன், பௌத்தம்
யானை மீது அமர்ந்து புத்தரின் தவத்தை கலைக்கும் மாறன், அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா

மாறனை வென்ற கௌதம புத்தர்

சுஜாதை படைத்த பால் அன்னம் உண்ட போதிசத்துவரான கௌதம முனிவர், வைகாசி மாதம் பௌர்ணமி அன்று கயையின் உருவேலா சமவெளியில் அரச மரத்தின் கீழ் கிழக்கு முகமாக பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.

கௌதமரின் தவத்தை கலைக்க அங்கு வந்த மாரன், வெடிப்பான குரலில் அச்சமுண்டாகும்படி பேசினான். போதிசத்துவராகிய கௌதமர் அஞ்சாமல் வீற்றிருந்தார். எனவே மாரன் கௌதமர் மீது பெருமழை பொழியச் செய்தான். இவைகளினாலே போதிசத்துவருக்கு எவ்விதமான துன்பமும் உண்டாகவில்லை. பின்னர் மாறன், கிரிமேகலை என்னும் யானையைப் போதிசத்துவர் மேல் ஏவினான். கௌதமரை நோக்கித் தவத்தை கலைத்து விட்டு இருந்து எழுந்து ஓடிப்போ என்று அதட்டிக் கூவினான். கௌதமர், மாரனைப் பார்த்து, இவ்விடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்.

ரிஷிகள் மற்றும் தேவர்கள்களின் தவ ஆற்றலை கெடுத்த எனக்கு மனிதனாகிய நீ ஏன் என்னிடம் அச்சமின்றி உள்ளாய் என மாரன், கௌதமரைக் கேட்க, அதற்கு கௌதமராகிய போதிசத்துவர், நான் தானம், சீலம், (ஒழுக்கம்), நியமம், (ஆசைகளை அகற்றிப் பிறர் நலத்துக்காக வாழ்தல்), பஞ்ஞா (ஞானம்), வீரியம் (ஆற்றல்), கந்தி (பொறுமை), வாய்மை ( பத்தியம்), அதிட்டானம் (ஒழுக்கம் நேர்மை இவற்றிலிருந்து பிறழாமல் இருத்தல்), மேத்தை (அன்பும் அருளும் உடைமை), உபேட்சை (விருப்பு வெறுப்பு இல்லாதிருத்தல் என பத்து தருமங்களை நிறைவேற்றியவன் ஆகையால் உன்னிடம் எனக்கு அச்சமில்லை என்றார்.

இத்தருமங்களை நிறைவேற்றியதற்கு சான்று உண்டா? என மாரன் கேட்டதற்கு, கௌதமர், துவராடையிலிருந்து கையை வெளியே நீட்டி, பூமியைச் சுட்டிக்காட்டினார். அப்போது கதிரவன் மறையும் வேளையில் பூமியானது ஆறு முறை குலுங்கியதை கண்ட மாரன் தனது படைகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

போதி ஞானம் அடைதல்

வைசாசி மாத பௌர்ணமி அன்று மாலை வசவர்த்தி மாரனை வென்ற போதிசத்துவர், இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களையெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்போதி ஞானம் அடைந்தார்.

அடிக்குறிப்புகள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க


Tags:

மாறன், பௌத்தம் மாறனை வென்ற கௌதம புத்தர்மாறன், பௌத்தம் போதி ஞானம் அடைதல்மாறன், பௌத்தம் அடிக்குறிப்புகள்மாறன், பௌத்தம் ஆதாரங்கள்மாறன், பௌத்தம் வெளி இணைப்புகள்மாறன், பௌத்தம் மேலும் படிக்கமாறன், பௌத்தம்கௌதம புத்தர்சமக்கிருதம் மொழிபௌத்தம்மன்மதன்ரிஷி

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாழ்ரோசுமேரிகிராம சபைக் கூட்டம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்108 வைணவத் திருத்தலங்கள்விண்ணைத்தாண்டி வருவாயாமூலம் (நோய்)கண்டம்தடம் (திரைப்படம்)உன்ன மரம்பஞ்சாப் கிங்ஸ்தேவயானி (நடிகை)முருகன்கலம்பகம் (இலக்கியம்)கொன்றை வேந்தன்அய்யா வைகுண்டர்யுகம்சேரர்மணிமுத்தாறு (ஆறு)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பாரத ரத்னாவினைச்சொல்முத்தொள்ளாயிரம்பிள்ளைத்தமிழ்சினேகாமுல்லை (திணை)ஆனந்தம் (திரைப்படம்)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)பகத் பாசில்பாரதிய ஜனதா கட்சிசென்னையில் போக்குவரத்துதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்சொல்நம்பி அகப்பொருள்கலித்தொகைஏலாதிபாண்டி கோயில்தமிழ்நாடுஇந்தியாவின் பசுமைப் புரட்சிஉடன்கட்டை ஏறல்பழமொழி நானூறுசித்ரா பௌர்ணமிவராகிஜன கண மனஇடமகல் கருப்பை அகப்படலம்கணியன் பூங்குன்றனார்பிரியா பவானி சங்கர்மூகாம்பிகை கோயில்நுரையீரல் அழற்சிபோக்கிரி (திரைப்படம்)திருநெல்வேலிஇமயமலைபிரேமலுபூக்கள் பட்டியல்யானைகிராம ஊராட்சிஇந்தியத் தேர்தல் ஆணையம்ஸ்ரீகருப்பசாமிபிரகாஷ் ராஜ்காம சூத்திரம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்பெருங்கதைஅன்னை தெரேசாஉன்னை நினைத்துகுறவஞ்சிசூரைகௌதம புத்தர்காவிரி ஆறுஇந்தியத் தேர்தல்கள் 2024இந்தியத் தலைமை நீதிபதிஆடை (திரைப்படம்)திராவிட இயக்கம்🡆 More