மார்கழி

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும்.

சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

மார்கழி
மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.

கால நிலை

குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் திசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது.

குளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.

மார்கழியின் சிறப்பு

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விட்டுணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி

Tags:

மார்கழி கால நிலைமார்கழி யின் சிறப்புமார்கழி இவற்றையும் பார்க்கவும்மார்கழி மேற்கோள்கள்மார்கழி வெளியிணைப்புக்கள்மார்கழிசூரியமானம்தனுசு (சோதிடம்)நாடிநாள்மாதம்விநாடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாயன்மார்ரமலான் நோன்புபாண்டவர்பாலை (திணை)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நாடகம்இந்தியாவில் இட ஒதுக்கீடுபேரிடர் மேலாண்மைதிருமூலர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956யானைஇமயமலைபழமொழி நானூறுஆதம் (இசுலாம்)தமிழ் நீதி நூல்கள்நுரையீரல்இந்திய ரூபாய்டங் சியாவுபிங்அக்கி அம்மைதிருமுருகாற்றுப்படைதற்கொலைபுணர்ச்சி (இலக்கணம்)இராமலிங்க அடிகள்நூஹ்ஊராட்சி ஒன்றியம்நெடுஞ்சாலை (திரைப்படம்)இளங்கோ கிருஷ்ணன்இராசேந்திர சோழன்தைப்பொங்கல்நவரத்தினங்கள்விருத்தாச்சலம்அணி இலக்கணம்மீன் சந்தைமருதம் (திணை)அம்பேத்கர்ஐம்பூதங்கள்தமிழ் நாடக வரலாறுதேவநேயப் பாவாணர்இரண்டாம் உலகப் போர்அன்றில்இயற்கைகுறிஞ்சி (திணை)பாண்டியர்வாரிசுசுந்தரமூர்த்தி நாயனார்சினைப்பை நோய்க்குறிஆசாரக்கோவைசிலப்பதிகாரம்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்திருநங்கைஇரைப்பை அழற்சிசமையலறைகண்ணனின் 108 பெயர் பட்டியல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பைரவர்கண்ணதாசன்சாரைப்பாம்புகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்கெல்லி கெல்லிபங்குனி உத்தரம்வெ. இராமலிங்கம் பிள்ளைமொழிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாடு அமைச்சரவைஉ. வே. சாமிநாதையர்இந்திய தேசிய காங்கிரசுபோகர்இராம நவமிபெயர்ச்சொல்அன்னி பெசண்ட்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)மாடுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கார்லசு புச்திமோன்வட்டாட்சியர்குணங்குடி மஸ்தான் சாகிபுமனித வள மேலாண்மை🡆 More