பணியமர்த்தல் சர்ச்சை

பணியமர்த்தல் சர்ச்சை அல்லது பணியமர்த்தல் போட்டி என்பது நடுக் கால ஐரோப்பாவில் சுமார் 11ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டுவரை திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே நிகழ்ந்த சச்சரவினைக்குறிக்கும்.

திருச்சபையின் உயர் அதிகாரிகளான ஆயர்களையும், ஆதீனத்தலைவர்களையும் பணியமர்த்தும் அதிகாரம் திருத்தந்தைக்கா அல்லது நாட்டின் அரசருக்கா என்பது குறித்தே இச்சிக்கல் நடந்தது. 1122இல் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் ஹென்றி மற்றும் திருத்தந்தை இரண்டாம் கலிஸ்டஸுக்கும் இடையே நடந்த உடன்பாட்டினால் (Concordat of Worms) இச்சிக்கல் முடிவுக்கு வந்தது. இவ்வுடன்பாடு உலகுசார் அதிகாரத்தையும், ஆன்மீக அதிகாரத்தையும் பிரித்துக்காட்டி ஆயர்களை நியமிப்பதில் அரசருக்கு மிகவும் குறுகிய அதிகாரமே உள்ளது எனவும் திருத்தந்தைக்கே அவ்வதிகாரம் கடவுளின் பதில் ஆள் என்னும் முறையில் உள்ளது எனவும் நிலைநாட்டியது.

இச்சிக்கலானது முதலில் திருத்தந்தை ஏழாம் கிரகோரி (1072–85) மற்றும் புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஹென்றிக்கு (1056–1106) இடையே நிகழ்ந்தாலும், திருத்தந்தை இரண்டாம் பாஸ்கால் மற்றும் இங்கிலாந்தின் முதலாம் ஹென்றிக்கும் இடயே 1103 முதல் 1107 வரையிலும் நிகழ்ந்தது. இதன் தாக்கம் பிரான்சிலும் காணப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

நடுக் காலம் (ஐரோப்பா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலை பகுதி 1ஜவகர்லால் நேருநவதானியம்உமாபதி சிவாசாரியர்சூரைஅழகர் கோவில்இயற்கை வளம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வேளாண்மைகுமரி அனந்தன்விஜயநகரப் பேரரசுநயன்தாராவிருதுநகர் மக்களவைத் தொகுதிவிவேகானந்தர்உருசியாபந்தலூர் வட்டம்தமிழர் விளையாட்டுகள்இயேசு காவியம்2022 உலகக்கோப்பை காற்பந்துதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கலிங்கத்துப்பரணிஹாட் ஸ்டார்முத்துலட்சுமி ரெட்டிபதினெண் கீழ்க்கணக்குஆறுமுக நாவலர்மருத்துவம்குடும்பம்சிலுவைப் பாதைசவூதி அரேபியாபாடுவாய் என் நாவேசோழர்வட சென்னை மக்களவைத் தொகுதிநியூயார்க்கு நகரம்அருந்ததியர்வேலூர் மக்களவைத் தொகுதிசுப்பிரமணிய பாரதிபட்டினப் பாலைகண்டம்நெடுநல்வாடைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்குருதி வகைநற்கருணை ஆராதனைமு. க. ஸ்டாலின்பிரேசில்நாடார்எட்டுத்தொகைவிஜய் ஆண்டனிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மதுராந்தகம் தொடருந்து நிலையம்திருவிளையாடல் புராணம்சிலிக்கான் கார்பைடுசவ்வாது மலைமஞ்சள் காமாலைவிநாயகர் அகவல்உத்தரகோசமங்கைபுனித வெள்ளிமருதமலை முருகன் கோயில்பேரிடர் மேலாண்மைஇலட்சம்தமிழ்நாடு காவல்துறைசுற்றுச்சூழல் பாதுகாப்புமூவேந்தர்சப்தகன்னியர்குறிஞ்சி (திணை)இந்திய தேசியக் கொடிஅரிப்புத் தோலழற்சிவெள்ளியங்கிரி மலைதென்னாப்பிரிக்காகல்லீரல்தமிழ் இலக்கியம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மலைபடுகடாம்குண்டலகேசிகீர்த்தி சுரேஷ்சுக்ராச்சாரியார்பூப்புனித நீராட்டு விழாஇயேசுவின் இறுதி இராவுணவுமூலம் (நோய்)🡆 More