நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி

நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி, இந்தியாவின் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் மாநில மற்றும் நடுவண் அரசிற்கு எதிராக நக்சலைட்டு–மாவோயிஸ்ட் போராளிகளின் தொடரும் பிணக்குகளைக் குறிக்கிறது.

நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி
நக்சலைட்டு- மவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் (2013) (அடர் சிவப்பு நிறம் - கடுமையாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்கள்-(மெரூன் நிறம்- மிதமாக பாதிக்கப்ப்பட்ட 16 மாவட்டங்கள்)- (மஞ்சள் நிறம்-குறைந்த அளவு பாதிக்கப்பட்ட 92 மாவட்டங்கள்)
நாள் 18 மே 1967 (1967-05-18)தற்போது வரை
(56 ஆண்டு-கள், 11 மாதம்-கள், 1 வாரம் and 2 நாள்-கள்)
இடம் சிவப்பு தாழ்வாரம் - இந்தியா
முடிவு தற்போது வரையிலும்
பிரிவினர்
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி India

மத்திய சேமக் காவல் படை


வலதுசாரி ஆயுதக் குழுக்கள்:
சால்வா ஜுடும்
ரன்வீர் சேனா
பஜ்ரங் தள்

நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி நக்சலைட்டு-மாவோயிஸ்ட்கள்:

ஆதரவளிப்பவர்கள்:
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)

புதிய மக்கள் படை 

நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி இந்திய பொதுவுடைமைவாதிகளின் மையம் (1977 வரை)

தளபதிகள், தலைவர்கள்
இந்தியா பிரணாய் சகாய்
(காவல் துறை தலைவர்)
இந்தியா கி. விஜயகுமார்
(சிறப்பு அதிரடிப் படைத் தலைவர்); 1975–2012)

மகேந்திர கர்மா 
(தலைவர், சால்வா ஜுடும்)
பிரம்மேஷ்வர் சிங்  
(தலைவர்,ரன்வீர் சேனா)

நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிமுப்பல்ல இலட்சுமண ராவ் எனும் கணபதி
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி ஆனந்த்
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி கோஷா
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி அங்கித் பாண்டே
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி கிஷண்ஜி 
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி சவ்வியசாசி பாண்டே (பிடிபட்டார்)
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிபிரசாந்த் போஸ் (பிடிபடார்)
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சியாலவர்த்தி நவீன் பாபு 
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி நர்மதா அக்கா 
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி சாம்சேர் சிங் சேரி 
பலம்
மத்திய சேமக் காவல் படை 80,000 10,000–20,000 போராளிகள் (2009–2010 மதிப்பீடு)
10,000–40,000 உறுப்பினர்கள் & 50,000–100,000 போராளிகள் (2010 மதிப்பீடு)
6,500–9,500 போராளிகள் (2013 மதிப்பீடு)
இழப்புகள்
1999 முதல்: 2,672 கொல்லப்பட்டனர் 1999 முதல்: 3,253 கொல்லப்பட்டனர்
1999 முதல்:
7,839 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
மொத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் 13,920

நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சியாக, 2004ல் பிளவு பட்ட மாவோயிஸ்ட் போராளிக் குழுக்கள், மக்கள் யுத்தக் குழு மற்றும் மாவோயிஸ்ட் பொதுவுடமை மையம் என்ற பெயர்களில் ஒன்றிணைந்தனர்.

மாவோயிஸ்ட் கைதிகளை சிறையிலிருந்து விடுவிப்பதற்கும், வேளாண் நிலங்களை மறு விநியோகம் செய்வது தொடர்பாக, சனவரி, 2005ல் ஆந்திரப் பிரதேச அரசிற்கும் - மாவோயிஸ்ட் போராளிகளின் குழுவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 2005 முதல் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் இயக்கம் இந்தியாவின் 29 மாநிலங்களில் பரவியது. போராளிகளை ஒடுக்க காவல்துறைக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த மோதல்களில் ஆண்டுதோறும் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டது.

நக்சலைட்டு-மாவோயிஸ்ட் இயக்கத்தின் 6,500 முதல் 9,500 முடிய இருந்த ஆயுதம் தாங்கிய போராளிகள், தங்களை மக்கள் விடுதலை கொரில்லாப் படை என அழைத்துக் கொண்டனர்.

நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் அதிகம் நடமாடும் பகுதிகள் சிவப்பு தாழ்வாரம் என அழைக்கப்பட்டது. பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின், குறிப்பாக பழங்குடி மக்கள் அதிகம் வாழும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளில் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் பரவியிருந்தனர்மேலும் ஏழ்மை நிலையில் இங்கு வாழும் பழங்குடி மக்களின், வாழ்வாதாரங்களை சுரண்டும் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை எதிர்ப்பதாக கூறிக்கொள்கின்றனர்.

ஒன்றிணைந்த ஆந்திரப்பிரதேசத்தின் 58% பொதுமக்களின் கருத்துக் கணிப்புப் படி, 18% பொதுமக்கள் மட்டுமே மாவோயிஸ்ட் ஆயுதந் தாங்கிய போராளிகளுக்கு எதிராக இருந்தனர். விவசாய கூலித்தொழிலாளர்களின் நில உரிமைகளுக்காகவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் நக்சலைட்டுகள் அடிக்கடி, அரசு ஊழியர்கள் மீதும், காவல் துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர். அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கிய கிராமப்புற மக்கள், தங்களின் எழுச்சிக்காக கடைபிடிக்கும் மூலோபாயத்தை பின்பற்றுகிறார்கள் என நக்சலைட்டுகள் கூறுகின்றனர்.

பிப்ரவரி 2009ல் இந்திய அரசு, சிவப்பு தாழ்வாரப் பகுதிகள் செயல்படும் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகளை ஒடுக்க, தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் விவசாயக் கூலிகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டங்களையும், நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகளின் ஆதிக்கத்தை குறைக்க, இப்பகுதியில் சிறப்பு காவல் படைகளுக்கு அதிக நிதியுதவி ஒதுக்கி வழங்கியது.

ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்டத்தால், ஆகஸ்டு 2010க்குப் பிறகு கர்நாடகா மாநிலத்தை சிவப்பு தாழ்வாரப் பகுதிகளிலிருந்து நீக்கப்பட்டது சூலை 2011இல் ஒன்பது இந்திய மாநிலங்களில் 83 மாவட்டங்கள் மட்டும் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டது டிசம்பர் 2011இல், நக்சலைட்டு-மாவோயிஸ்ட் தாக்குதல்களால் இறந்தவர்கள் மற்றும் காயப்பட்டோர் எண்ணிக்கை ஏறக்குறைய 50% ஆக குறைந்தது அரசு அறிவித்துள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்திய அரசுஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)இந்தியாசிவப்பு தாழ்வாரம்நக்சலைட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெரியபுராணம்ஸ்ரீலீலாமனித உரிமைகினோவாஉலகம் சுற்றும் வாலிபன்திராவிசு கெட்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அட்சய திருதியைபஞ்சாப் கிங்ஸ்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019யாழ்சின்னம்மைமுன்மார்பு குத்தல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பழனி முருகன் கோவில்சா. ஜே. வே. செல்வநாயகம்பணவீக்கம்சரண்யா பொன்வண்ணன்இந்திரா காந்திதேம்பாவணிஓ காதல் கண்மணிஐந்திணைகளும் உரிப்பொருளும்இடமகல் கருப்பை அகப்படலம்உரைநடைஜவகர்லால் நேருதிருமங்கையாழ்வார்ஸ்ரீபழமுதிர்சோலை முருகன் கோயில்சொல்தன்யா இரவிச்சந்திரன்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்கோத்திரம்அனைத்துலக நாட்கள்தேர்தல்முத்துராஜாஅரிப்புத் தோலழற்சிவாட்சப்யாதவர்நிதிச் சேவைகள்வேற்றுமையுருபுபழமொழி நானூறுகம்பராமாயணத்தின் அமைப்புஇலங்கை தேசிய காங்கிரஸ்கன்னியாகுமரி மாவட்டம்பாரிமுலாம் பழம்கல்லீரல்பெருங்கதைஅன்னை தெரேசாமுல்லை (திணை)வெண்பாநாலடியார்இங்கிலீஷ் பிரீமியர் லீக்யுகம்நாழிகைபரிபாடல்ஆர். சுதர்சனம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்ஒளிகாச நோய்வேதம்தரணிபால கங்காதர திலகர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ம. கோ. இராமச்சந்திரன்வெங்கடேஷ் ஐயர்லால் சலாம் (2024 திரைப்படம்)இராவணன்தமிழக வரலாறுவெந்து தணிந்தது காடுமண்ணீரல்தமன்னா பாட்டியாபுவிமகரம்சிறுநீர்ப்பாதைத் தொற்று🡆 More