நகுசன்: அத்தினாபுரத்தை ஆண்ட ஒரு மன்னன்

நகுசன் (Nahusha, சமக்கிருதம்: नहुष) என்பவன் அத்தினாபுரத்தை தலைநகராகக்கொண்டு குரு நாட்டை ஆண்ட சந்திர குல அரசன்.

இவனின் தந்தை பெயர் ஆயு (ஆயுசு). பாட்டன் பெயர் புரூரவன். மகன் பெயர் யதி மற்றும் யயாதி. யதி துறவியானார். யயாதி அரசாண்டார்.

தேவ லோக இந்திர பதவி அடைய வேண்டி நகுசன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து முடித்த பின்பு, அவனை தேவ லோகத்திற்கு அழைத்துச் செல்ல பல்லக்குடன் சப்த ரிசிகள் வந்தனர். சப்த ரிசிகள் நகுசனை பல்லக்கில் ஏற்றி தேவலோகம் அழைத்து செல்கையில், நகுசன் முனிவர்களைப் பார்த்து, பல்லக்கை வேகமாக தூக்கிச் சென்றால் உங்கள் கால்கள் வலிக்கும் எனவே மெதுவாக செல்லுங்கள் என்று பணிவாக கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர்கள், நாங்கள் வழக்கமான வேகத்துடன்தான் பல்லக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.

நகுசனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு நின்று கொண்டு இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட காம வேட்கை மிகுதியால், விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில், பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை விரைவுப்படுத்தினான். முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.

சப்தரிசிகளில் குள்ளமான முனிவரான அகத்தியர் தான் பல்லக்கு மெதுவாக செல்லக்காரணம் என்று கருதிய நகுசன், அகத்திய முனிவரைப் பார்த்து சர்ப்ப, சர்ப்ப என்று (சமசுகிருதம் மொழியில் வேகமாக, வேகமாக என்ற பொருளும் உண்டு) என்று கூவிக்கொண்டு தன் கையில் இருந்த குச்சியால் அகத்திய முனிவரை நகுசன் அடித்தான். இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த நகுசனை, பூவுலகத்தில் மலைப்பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசன் பூவுலகில் பல்லாண்டுகள் மலைப்பாம்பாக வாழ்ந்து, தவமிருந்து மீண்டும் மனித உருவமடைந்து பின்னர் சொர்க்க லோகத்தை அடைந்தான்.

மேற்கோள்கள்

இதனையும் காண்க

Tags:

அத்தினாபுரம்குரு நாடுசமக்கிருதம் மொழிபுரூரவன்யயாதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்துதிரு. வி. கலியாணசுந்தரனார்வீரமாமுனிவர்பிரேமலுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)பால கங்காதர திலகர்ரஜினி முருகன்நாயன்மார்ஆகு பெயர்விருத்தாச்சலம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்புறப்பொருள்கன்னியாகுமரி மாவட்டம்காமராசர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ஹரி (இயக்குநர்)பிரியா பவானி சங்கர்கன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கடவுள்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்இடமகல் கருப்பை அகப்படலம்நெடுநல்வாடைசிங்கம் (திரைப்படம்)தமிழக வரலாறுகட்டுரைநாலடியார்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பெரியண்ணாகாரைக்கால் அம்மையார்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தைப்பொங்கல்ஜி. யு. போப்கருப்பசாமிவாகைத் திணைஜோதிகாதொல்காப்பியம்உவமையணிதிரைப்படம்ஏலகிரி மலைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)ரயத்துவாரி நிலவரி முறைவிளையாட்டுசிறுபஞ்சமூலம்இயேசு காவியம்கஞ்சாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்அன்புமணி ராமதாஸ்திருநாவுக்கரசு நாயனார்பெரியாழ்வார்வெட்சித் திணைநரேந்திர மோதிகருமுட்டை வெளிப்பாடுநீர்ப்பறவை (திரைப்படம்)பிரேமம் (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைர. பிரக்ஞானந்தாகுப்தப் பேரரசுகருட புராணம்தினமலர்சட் யிபிடிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சினைப்பை நோய்க்குறிமுலாம் பழம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வீரப்பன்வினைச்சொல்தாவரம்கிராம ஊராட்சிபரிவர்த்தனை (திரைப்படம்)மூலிகைகள் பட்டியல்அறுபது ஆண்டுகள்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இயற்கை வளம்ஆய கலைகள் அறுபத்து நான்குஒன்றியப் பகுதி (இந்தியா)🡆 More