தோஸ்த் நடவடிக்கை

தோஸ்த் நடவடிக்கை (Operation Dost), துருக்கி-சிரியா நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட இந்திய அரசு மேற்கொண்ட மீட்புப் பணிகளைக் குறிக்கிறது.6 பிப்ரவரி 2023 அன்று துருக்கி நாட்டின் காசியான்டெப் நகரத்திற்கு மேற்கே 34 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் கொண்டிருந்தது.

சொற்பிறப்பு

தோஸ்த் என்பதற்கு இந்தி மொழி மற்றும் துருக்கிய மொழியில் நண்பன் எனப்பொருளாகும்.

தோஸ்த் நடவடிக்கைகள்

தோஸ்த் நடவடிக்கை 
இந்திய வான்படை வானூர்தியில் நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் கருவிகளுடன் துருக்கிக்குச் சென்ற இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படைகள்

6 பிப்ரவரி 2023 அன்று காலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வருத்தம் தெரிவித்ததுடன், துருக்கி மற்றும் சிரியாவுடன் இந்தியாவின் ஒற்றுமையை தெரிவித்தார். அதே நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சரவைக் குழு, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வானூர்தி அமைச்சகம் மற்றும் சுகாரதார அமைச்சகங்களுடன் கலந்து பேசினார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட 12 மணி நேரத்தில் இந்திய இராணுவம் நிவாரணப் பொருட்களுடன், மீட்புக் குழுக்கள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு செல்வதற்கு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.

துருக்கியில் மீட்பு நடவடிக்கைகள்

தோஸ்த் நடவடிக்கை 
துருக்கியின் காசியான்டெப் நகரத்தில் கட்டிட இடுபாடுகளிடையே இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படைகளின் மீட்புப் பணிகள்

துருக்கி நிலநடுக்கத்தின் போது உதவிட வந்த நாடுகளில் முதலாவாக உதவிக்கரம் நீட்டியது இந்தியா என துருக்கி குறிப்பிட்டுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட 6 பிப்ரவரி 2023 அன்று மாலையே இந்திய மீட்புக் குழுவினர், நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட அடானா நகரத்திற்கு இந்திய வான்படையின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்தி மூலம், நிவாரணப் பொருட்கள், மோப்ப நாய்களுடன் 47 மீட்புப் படையினர் சென்றடைந்தனர்.

தோஸ்த் நடவடிக்கை 
இந்திய வான் படை மூலம் இராணுவ மருத்துவக் குழுவினரை வானிலிருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இறக்கி விடும் காட்சி, நாள் 7 பிப்ரவரி 2023

நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துப் பொருட்கள், உணவு மற்றும் பிற உதவிகளை ஆளில்லாத வானூர்திகள் மூலம் வழங்கினர்.தேசியப் போரிட மீட்புப் படையினர் கட்டிட இடுபாடுகளை அகற்றும் கருவிகளை கருவிகளைக் கொண்டு, கட்டிட இடுபாடுகளில் சிக்கிய மக்களை வெளியே கொண்டு வந்தனர்.

7 பிப்ரவரி 2023 அன்று இந்திய வான் படை நிவாரணப் பொருட்கள், நகரும் மருத்துவமனை, மீட்புக் குழுவினருடன் மேலும் இரண்டு போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்திகளை துருக்கிக்கு அனுப்பியது.மீட்புக் குழுவினருடன் ஆக்ராவை மையமாகக் கொண்ட இராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை, உடற்பரிசோதனை கருவிகளுடன் அனுப்பப்பட்டனர்.9 பிப்ரவரி 2023 வரை இந்தியா துருக்கிக்கு 6 போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்திகளில் மீட்புப் படையினர் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பியது.

ஏழாதுவ வானூர்தி, மருத்துவ நிவாரணப் பொருட்களுடன் துருக்கியின் அடானா நகரத்தின் வானுர்தி நிலையத்திற்கு 12 பிப்ரவரி 2023 அன்று சென்றடைந்தது.

துருக்கியின் இஸ்கென்தெருன் நகரத்தில் தற்காலிக மருத்துவமனையை நிறுவிய பின்னர், நிவாரண பணிகளை முடித்துக் கொண்டு மருத்துக் குழுவினர் 20 பிப்ரவரி 2023 அன்று இந்தியா திரும்பினர்.

சிரியாவில் மீட்பு நடவடிக்கைகள்

தோஸ்த் நடவடிக்கை 
சிரியாவிற்கான இந்திய தூதர் எஸ். கே. யாதவ் (இடது) மற்றும் சிரியா உள்ளாட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் மௌதாஸ் தௌவாஜி (வலது)

சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக சிரியாவுக்கான மீட்புப் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 8 பிப்ரவரி 2023 அன்று 6 டன் அளவிற்கு அவசர கால மருத்துவ நிவாரணப் பொருட்களுடன் டமாஸ்கஸ் வானூர்தி நிலையத்திற்கு இந்திய வானூர்தி சென்றடைந்தது.

12 பிப்ரவரி 2023 அன்று இந்திய வான் படையின் சரக்கு விமானங்கள் 23 டன் நிவாரணப் பொருட்களுடன் டமாஸ்மஸ் வானூர்தி நிலையத்திற்கு சென்றது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

தோஸ்த் நடவடிக்கை சொற்பிறப்புதோஸ்த் நடவடிக்கை கள்தோஸ்த் நடவடிக்கை இதனையும் காண்கதோஸ்த் நடவடிக்கை மேற்கோள்கள்தோஸ்த் நடவடிக்கை2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்இந்திய அரசுதுருக்கிநிலநடுக்க மையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்மலையாளம்திருட்டுப்பயலே 2அழகிய தமிழ்மகன்ஆதம் (இசுலாம்)பெ. சுந்தரம் பிள்ளைநாயக்கர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பர்வத மலைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சிறுபஞ்சமூலம்ரோகித் சர்மாஆபிரகாம் லிங்கன்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமக்காச்சோளம்கிராம ஊராட்சிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஒப்புரவு (அருட்சாதனம்)வியாழன் (கோள்)சிறுநீரகம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிபாசிப் பயறுவீரப்பன்மு. மேத்தாசிவனின் 108 திருநாமங்கள்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்காரைக்கால் அம்மையார்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)உஹத் யுத்தம்சோழர்தொல்லியல்அருணகிரிநாதர்உன்னாலே உன்னாலேபத்து தலதீபிகா பள்ளிக்கல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்புறப்பொருள் வெண்பாமாலைசப்ஜா விதைபெரியபுராணம்ஹஜ்நோட்டா (இந்தியா)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024மாடுகருக்கலைப்பு2024 இந்தியப் பொதுத் தேர்தல்சாரைப்பாம்புஇராவணன்ரோபோ சங்கர்சுற்றுச்சூழல் மாசுபாடுசுற்றுச்சூழல்சுபாஷ் சந்திர போஸ்உன்னை நினைத்துகர்நாடகப் போர்கள்நன்னூல்ஐம்பெருங் காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பொருநராற்றுப்படைஅ. கணேசமூர்த்திஆண் தமிழ்ப் பெயர்கள்ந. பிச்சமூர்த்தியூடியூப்சிவபெருமானின் பெயர் பட்டியல்வைரமுத்துதட்டம்மைதமிழ்தனுசு (சோதிடம்)காடுவெட்டி குருநிலக்கடலைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கிருட்டிணன்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஹர்திக் பாண்டியாஇந்திய அரசியல் கட்சிகள்சப்தகன்னியர்வாக்குரிமைநந்திக் கலம்பகம்நாடாளுமன்றம்திரு. வி. கலியாணசுந்தரனார்🡆 More