தொழிலகப் பொறியியல்

தொழிலகப் பொறியியல் (Industrial engineering, இப்போது பெரும்பாலும் அதற்குப் பதிலாக தொழிலக & அமைப்பியல் பொறியியல் அல்லது தொழிலக & இயக்க பொறியியல் என்றழைக்கப்படுகிறது) என்பது கடினமான செயல்முறைகள் அல்லது அமைப்புகளை தொகுக்கும் பொறியியலின் ஒரு பிரிவாகும்.

அது மக்கள், பணம், அறிவு, தகவல், சாதனம், ஆற்றல், பொருட்கள் மற்றும் அல்லது செயல்முறையாக்கத்தின் வளர்ச்சி, மேம்பாடு, நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகளின் மதிப்பீடுகளுக்குத் தொடர்புடையது. அது புதிய உற்பத்தி மூலப்படிமங்களை, மேலும் திறனுடனும் கூடுதல் செயலூக்கத்துடனும் வடிவமைப்பதுடனும் தொடர்புகொண்டிருக்கிறது. பொறியியல் பகுப்பாய்வு மற்றும் தொகுத்தல், அத்துடன் கணித, பௌதிக மற்றும் சமுதாய அறிவியல் கொள்கைகள் மற்றும் வழிமுறை அவற்றுடன் அத்தகைய அமைப்புகள் அல்லது செயல்முறைகளிலிருந்து பெறவிருக்கும் முடிவுகளை வரையறுக்கவும், முன்னுணரவும் மற்றும் மதிப்பிடுவதற்கான பொறியியல் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளைத் தொழிலகப் பொறியியல் ஏற்றுக்கொள்கிறது. செய்பணி நிர்வாகம் போன்ற குறிப்பிட்ட வர்த்தகம் சார்ந்த பிரிவுகளில் அதன் அடிப்படை கருத்துப் படிவம் குறிப்பிட்ட அளவுக்கு ஒன்றன்மேல் மற்றொன்று படிகின்றது, ஆனால் பொறியியல் பகுதி பரந்துவிரிந்த கணித வல்லமை மற்றும் அளவையியல் வழிமுறைகளின் பயன்பாட்டின் அதிகரித்த முக்கியத்துவத்தை நோக்கிச் சரிகிறது.

ஈடுபட்டிருக்கும் உப-சிறப்பியல்பு(கள்)களைப் பொறுத்து தொழிலகப் பொறியியல், செய்பணி நிர்வாகம், நிர்வாக அறிவியல், அமைப்பு பொறியியல் அல்லது தயாரிப்பு பொறியியல் எனவும் அறியப்படலாம், இது பெரும்பாலும் பயனரின் அபிப்பிராயம் அல்லது நோக்கத்தைப் பொறுத்திருக்கிறது. வேலைவழங்குன்ர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்ட இப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். உடல்நலப் பராமரிப்பில், தொழிலகப் பொறியியலாளர்கள் பொதுவாக உடல்நல நிர்வாக பொறியியலாளர்கள் அல்லது உடல்நல அமைப்பு பொறியியலாளர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

தொழிலகப் பொறியியலில் இருக்கும் "தொழிலக" என்னும் சொல் ஆரம்பத்தில் தயாரிப்புக்குப் பொருந்திவந்தது, இந்நாளில் அது ஒருவகையில் தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் (மேலே குறிப்பிட்ட அதேமாதிரியான நீட்டிப்புகளுக்கு இட்டுச் செல்லும்). ஒரு செயல்முறை, அமைவு அல்லது நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தொகுப்பதற்கான எந்தவொரு வழிமுறை அல்லது அளவையில் அணுகுமுறையையும் உட்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. உண்மையில், தொழிலகப் பொறியியலாளர்களுக்கான முதன்மையான அமெரிக்க தொழில்நிபுணத்துவ அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியர்ஸ் (IIE) தன்னுடைய பெயரை இன்னும் விரிவானதாக மாற்றம் செய்ய கருதிக்கொண்டிருக்கிறது, (இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் & சிஸ்டம்ஸ் இன்ஜினியர்ஸ் போன்று), இருந்தபோதிலும் உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு தற்போதைக்கு இது தேவையற்றது எனக் கருதப்பட்டது. தொழிலகப் பொறியியலுக்குத் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் உள்ளடங்குபவை நிர்வாக அறிவியல், நிதியாதார பொறியியல், பொறியியல் நிர்வாகம், சப்ளை செயின் நிர்வாகம், செயல்முறை பொறியியல், செய்பணி ஆராய்ச்சி, அமைப்பியல் பொறியியல், பணிச்சூழலியல், செலவு மற்றும் மதிப்பு பொறியியல், தரநிர்ணய பொறியியல், வசதிவாய்ப்பு திட்டமிடல் மற்றும் பொறியியல் வடிவமைப்பு செயல்முறை. பாரம்பரியமாக, தொழிலகப் பொறியியலின் பெரும் பண்புக்கூறாக இருந்தது தொழிற்சாலைகளின் அமைப்புமுறையைத் திட்டமிடுதல், அசெம்ப்ளி லைன்கள் மற்றும் இதர தயாரிப்பு உரு மாதிரிகளை வடிவமைத்தல் என இருந்தது. இப்போது, பெயரளவிலான வளமற்ற தயாரிப்பு அமைப்பியல்களில், தொழிலகப் பொறியியலாளர்கள் நேரம், பணம், பொருட்கள், ஆற்றல் மற்றும் இதர வளஆதாரங்களின் விரயத்தை நீக்குவதற்குப் பணி புரிகிறார்கள்.

தொழிலகப் பொறியியல் எங்கெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் உள்ளடங்குபவை, ஒரு அசெம்ப்ளி பணிமனையை வடிவமைத்தல், பல்வேறு இயக்க தளவாடங்களுக்கான உத்திநோக்கல், ஒரு செயல்திறன் நிபுணராக அறிவுறுத்தல், ஒரு புதிய நிதியாதார படிநிலைத் தீர்வு அல்லது ஒரு வங்கிக்கான கடன் அமைப்பை உருவாக்குதல், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மற்றும் அவசரநிலை அறை இடம் அல்லது பயன்பாட்டை ஒழுங்கமைத்தல், பொருட்கள் அல்லது உற்பத்திப் பொருட்களுக்கான (சப்ளை செய்ன் நிர்வாகம் என்று குறிப்பிடப்படுவது) கடினமான பகிர்ந்தளிப்பு முறைகளைத் திட்டமிடுதல் மற்றும் வங்கி, மருத்துவமனை அல்லது ஒரு தீம் பார்க்கில் வரிசைகளை (அல்லது முறைவரிசைகள்) குறைத்தல். அமைப்பியல் பகுப்பாய்வு, மதிப்பீடு மற்றும் தொகுப்புகளுக்கு விரிவான கணக்கியல் கருவிகள், முன் மாதிரிகள் மற்றும் கணிப்பு முறைகளுடன் தொழிலகப் பொறியியலாளர்கள் குறிப்பிட்ட முறையில் கணினி உருவகப்படுத்துதலை (குறிப்பாக வெவ்வேறான நிகழ்வு உருவகப்படுத்தல்) பயன்படுத்துகிறார்கள்.

பல்கலைக்கழகங்கள்

பல பல்கலைக்கழகங்களில் பிஎஸ், எம்எஸ் மற்றும் பிஎச்டி பாடத்திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றது. "அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகள் 2010" பற்றி யுஎஸ் நியூஸ் அண்ட் வர்ல்ட் ரிப்போர்ட்டின் ஒரு கட்டுரை, தொழிலக அல்லது உற்பத்தியில் இளநிலை பொறியியலை வழங்கும் பள்ளிகளைப் பட்டியலிடுகிறது.

வரலாறு

தொழிலகப் பொறியியல் பாடத்திட்டங்கள் 1800 ஆம் ஆண்டுகளின் இறுதிகளிலேயே ஐரோப்பாவெங்கும், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து மற்றும் ஸ்பெய்ன் போன்ற வளர்ச்சிபெற்ற நாடுகளில், பல்வேறு பல்கலைக்கழகங்களால் கற்பித்து வரப்பட்டிருக்கிறது.. அமெரிக்காவில் முதல் தொழிலகப் பொறியியல் துறை 1908 ஆம் ஆண்டில் [[ஹராலட் மற்றும் இங்கே மார்கெஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் அண்ட் மேனுஃபேக்சரிங் இஞ்சினியரிங்]] துறையாக பென் ஸ்டேட்டில் தொடங்கப்பட்டது.

தொழிலகப் பொறியியலின் முதல் முனைவர் பட்டம் 1930 ஆம் ஆண்டில் கார்னெல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

முதுகலைப் பாடத்திட்டம்

வழக்கமாகக் கிடைக்கப்பெறும் முதுகலைப் பட்டமாக இருப்பது தொழிலகப் பொறியியல்/தொழிலகப் பொறியியல் & நிர்வாகம்/தொழிலகப் பொறியியல் & இயக்கங்கள் ஆராய்ச்சி ஆகியவற்றில் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு. ஐஈ/ஐஈ&எம்/ஐஈ & ஓஆர்/நிர்வாக அறிவியல் ஆகியவற்றில் இருக்கும் எம்எஸ் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியிருப்பவை:

  • செய்பணி ஆராய்ச்சி & உகப்புப் பாடு தொழில்நுட்பங்கள்
  • பொறியியல் பொருளியல்
  • வழங்குதல் சங்கிலி மேலாண்மை & தளவாடங்கள்
  • அமைப்பியல் உருவகப்படுத்துதல் & முதன்மூலக்கொள்கை அமைப்பியல்
  • அமைப்பு இயக்கவாற்றல் & கொள்கை திட்டமிடல்
  • அமைப்பு பகுப்பாய்வு & உத்திகள்
  • தயாரிப்பு அமைப்பியல்/தயாரிப்பு பொறியியல்
  • மனித காரணிகள் பொறியியல் & பணிச்சூழலியல்
  • உற்பத்தி திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு
  • நிர்வாக அறிவியல்கள்
  • கணினி சார்ந்த தயாரிப்புகள்
  • வசதிவாய்ப்புகளின் வடிவமைப்பு & வேலை இடத்து வடிவமைப்பு
  • புள்ளிவிவர செயல்முறை கட்டுப்பாடு அல்லது தரக் கட்டுப்பாடு
  • நேரம் மற்றும் இயக்கம் படிப்பு
  • செய்பணி நிர்வாகம்
  • கூட்டாண்மை திட்டமிடல்
  • உற்பத்தித் திறன் மேம்பாடு
  • மெடிரியல்ஸ் மேனேஜ்மெண்ட்

பட்டமுன் பாடத்திட்டம்

அமெரிக்காவில் கிடைக்கப்பெறும் வழக்கமான பட்டமுன் பட்டப்படிப்பு, இளங்கலை அறிவியல் அல்லது தொழிலகப் பொறியியலில் பி.எஸ். (BSIE). பெரும்பாலான பட்டமுன் பொறியியல் திட்டங்களில், உருமாதிரியான பாடத்திட்டத்தில் உள்ளடங்கியிருப்பவை வேதியியல், பௌதிகம், பொறியியல் வடிவமைப்பு, நுண்கணிதம், நுண்ணெண்சமன்பாடு, புள்ளியியல், பருப்பொருள் அறிவியல், பொறியியல் விசையியல், கணினி அறிவியல், சர்க்யூட்கள் மற்றும் மின்னணு போன்ற பரந்தகன்ற கணித மற்றும் அறிவியல் அடிப்படைகளுடன், பெரும்பாலும் மேலாண்மை, அமைப்பியல் கோட்பாடு, பணிச்சூழலியல்/பாதுகாப்பு, முதன்மூலங்கள், மேம்படுத்தப்பட்ட கணிதம் மற்றும் கணக்கியல் மற்றும் பொருளாதாரம் போன்ற சிறப்புடைமை பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கும்.

ஊதியங்கள் மற்றும் பணிஆட்கள் புள்ளிவிவரம்

2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொறியியலாளர்களின் தோராய எண்ணிக்கை 1.5 மில்லியன். இவர்களில், 201,000 நபர்கள் தொழிலகப் பொறியியலாளர்கள் (13.3%), இதுதான் மூன்றாவது பிரபல பொறியியல் சிறப்பம்சம். சராசரி துவக்க ஊதியங்கள், இளங்கலை பட்டத்திற்கு $55,067, முதுகலை பட்டத்திற்கு $64,759 மற்றும் முனைவர் பட்டத்திற்கு $77,364 ஆக இருக்கிறது. சராசரி ஆண்டு ஊதியத்தில் இது தொழிலகப் பொறியியலை, 15 பொறியியல் இளங்கலை பட்டங்களில் ஏழாவது இடத்திலும், பத்து முதுகலை பட்டங்களில் மூன்றாவது இடத்திலும், ஏழு முனைவர் பட்டங்களில் மூன்றாவது இடத்திலும் வைத்திருக்கிறது. அமெரிக்க பணிஆட்களில் தொழிலகப் பொறியியலாளர்களின் இடைநிலை ஆண்டு வருமானம் $68,620.

நிறுவனத்தில் ஒருசில வருடங்களுக்குள்ளேயே தொழிலகப் பொறியியலாளர்கள் தொழில்நுட்ப மேற்பார்வை அல்லது பொறியியல் நிர்வாகப் பதவிகளுக்கான வலுமிக்க போட்டியாளர்களாக ஆகிவிடுவார்கள், ஏனெனில் அவர்களின் பணி பெரும்பாலான இதர பொறியியல் பிரிவுகளைக் காட்டிலும் பெரும்பாலும் நிர்வாகம் தொடர்புடையதாக இருக்கிறது. [சான்று தேவை]

மேலும் காண்க

  • பொறியியல் கல்விக்கான அமெரிக்க சமூகம்
  • தரநிர்ணயத்திற்கான அமெரிக்க சமூகம்
  • பொறியியல் நிர்வாகம்
  • பணிச்சூழலியல்
  • இன்ஃபார்ம்ஸ்
  • தொழிலகப் பொறியியலுக்கான இந்திய கல்விநிறுவனம்
  • தொழிலகப் பொறியியலாளர்கள் கல்விநிறுவனம்
  • மின்சார பொறியியலாளர்கள் கல்விநிறுவனம்
  • தொழிலகப் பொறியியலாளர்கள் பட்டியல்
  • உற்பத்தி தலைப்புகளின் பட்டியல்
  • தொழிலகப் பொறியியல் பிரிவைக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல்
  • நிர்வாக அறிவுரைநாடல்
  • நிர்வாகப் பொறியியல் (உடல்நலன்)
  • நிர்வாக அறிவியல்
  • வழிமுறை பொறியியல்
  • ஊட்ட அமைப்பியல்
  • செய்பணி நிர்வாகம்
  • செய்பணி ஆய்வியல்
  • ஒட்டுமொத்த சாதன விளைபயன்
  • இயந்திரத் தொகுதி அமைத்தல் கல்வி
  • தரக் காப்புறுதி
  • நேர்மாறான பொறியியல்
  • விற்பனை நிகழ்முறை பொறியியல்
  • புள்ளிவிவர செயல்முறை கட்டுப்பாடு
  • சப்ளை செயின்
  • முறைமை இயக்கவியல்
  • அமைப்பியல் பொறியியல்
  • மதிப்பீட்டு பொறியியல்
  • வாஷிங்க்டன் உடன்பாடு

மேற்குறிப்புகள்

Tags:

தொழிலகப் பொறியியல் பல்கலைக்கழகங்கள்தொழிலகப் பொறியியல் ஊதியங்கள் மற்றும் பணிஆட்கள் புள்ளிவிவரம்தொழிலகப் பொறியியல் மேலும் காண்கதொழிலகப் பொறியியல் மேற்குறிப்புகள்தொழிலகப் பொறியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உப்புச் சத்தியாகிரகம்தன்னுடல் தாக்குநோய்மலைபடுகடாம்உத்தரகோசமங்கைசிறுநீரகம்தேவேந்திரகுல வேளாளர்நாடாளுமன்றம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்விருதுநகர் மக்களவைத் தொகுதிபூரான்உவமைத்தொகைபால்வினை நோய்கள்பெ. சுந்தரம் பிள்ளைபழனி பாபாந. பிச்சமூர்த்திநிணநீர்க்கணுதிருத்தணி முருகன் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஒற்றைத் தலைவலிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பக்தி இலக்கியம்அளபெடைமாடுசெங்குந்தர்பீப்பாய்ஜன கண மனஆங்கிலம்தமிழச்சி தங்கப்பாண்டியன்சேரர்தமிழக மக்களவைத் தொகுதிகள்பட்டினப் பாலைநாம் தமிழர் கட்சிபதுருப் போர்அமேசான்.காம்பண்ணாரி மாரியம்மன் கோயில்அன்புமணி ராமதாஸ்கொல்லி மலைஅரிப்புத் தோலழற்சிஆய கலைகள் அறுபத்து நான்குதிருமந்திரம்மதராசபட்டினம் (திரைப்படம்)அரவிந்த் கெஜ்ரிவால்பிரீதி (யோகம்)லியோனல் மெசிகாளமேகம்தருமபுரி மக்களவைத் தொகுதிஇயோசிநாடிபெண்ணியம்கட்டபொம்மன்மார்ச்சு 27தேர்தல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019வரலாறுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அகழ்வாய்வுசேக்கிழார்வீரமாமுனிவர்கண்ணகிஅகோரிகள்தாயுமானவர்குற்றாலக் குறவஞ்சிதமிழ் இலக்கணம்கூகுள் நிலப்படங்கள்தொல்காப்பியம்புரோஜெஸ்டிரோன்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிமெட்ரோனிடசோல்கரிகால் சோழன்108 வைணவத் திருத்தலங்கள்மதீச பத்திரனகள்ளர் (இனக் குழுமம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இயேசுவின் இறுதி இராவுணவுபெரியாழ்வார்சித்தர்கண்ணதாசன்பத்து தலபெரிய வியாழன்🡆 More