துணைவினை

துணைவினை (Auxillary verb) என்பது, இன்னொரு வினையுடன் சேர்ந்து வருகின்ற நிலையில், தன் பொருளை இழந்து சேர்ந்துவரும் வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும்.

இவ்வாறான பொருள் இலக்கணப் பொருள் எனப்படும். துணைவினையோடு சேர்ந்துவரும் வினை தலைமை வினை எனவும், இரண்டினதும் சேர்க்கையால் உருவாகும் வினை கூட்டுவினை எனவும் பெயர் பெறும். உலகின் பல மொழிகளில் துணைவினைகள் ஒரு இலக்கணக் கூறாகக் காணப்படுகின்றன.

தமிழில் துணைவினைகள்

தமிழில் இரு என்பது தனியே வரும்போது இருத்தல் பொருளைத் தருவது. அதே வேளை போ, வா, செய், படு போன்ற வினைகளுடன் சேர்ந்து, போயிருந்தான், வந்திருந்தான், செய்திருந்தான், படுத்திருந்தான் போன்றவாறு வரும்போது இரு தனது வழமையான பொருளை இழந்து. போ, வா, செய், படு போன்ற வினைகளால் குறிக்கப்படும் செயற்பாடுகளின் தன்மையைத் தெளிவாகக் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம்.

தமிழில் துணைவினை, தலைமை வினைக்குப் பின்னர் வருகின்றது. தலைமை வினைகள் எப்போதும், போய், வந்து, செய்து, படுத்து போன்ற வினையெச்ச வடிவிலேயே அமைகின்றன. துணைவினை, படுத்திரு, செய்துவிடு என்பவற்றில் வருவதுபோல் ஏவல்வினையாக அல்லது போயிருந்தான், வந்துவிட்டான் என்பவற்றில் உள்ளதுபோல் போல் முற்றுவினை வடிவத்தில் அமைகின்றது.

தமிழில் வினைகளுக்குப் புதிய பொருள்களைக் கொடுப்பதற்குத் துணைவினைகள் உதவுகின்றன. கீழே அட்டவணையில் தந்துள்ளவை சில எடுத்துக்காட்டுகள்.

துணைவினை எடுத்துக்காட்டு பொருள்
அருள் பொறுத்தருள் செயல் புரிபவருக்கு உயர்வு கொடுத்தல்
கொள் எடுத்துக்கொள் வினையைத் தற்சுட்டாக்குதல்
போ வரப்போகிறான் நிகழவிருப்பதைக் குறிப்பது
வா செய்துவருகிறேன் வழக்கமாக நிகழ்வதைக் காட்டுவது
விடு போய்விட்டான் செயல் முடிந்த நிலையைக் காட்டுவது

தமிழ்மொழி வரலாற்றில் துணைவினைகள்

சங்ககாலத்திலும் துணைவினைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. எனினும், இவை அரிதாகவே காணப்படுகின்றன. விடு, கொள், இரு, படு, செய், பண்ணு, வேண்டு, வேண்டா, , அருள் போன்ற துணைவினைகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இடைக்காலத்தில் மாட்டு, ஒழி, வை, ஆக்கு, கூடு போன்ற துணைவினைகள் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்ததைக் காண முடிகிறது. தற்காலத்தில் தமிழ் மொழி பல்வேறு வடிவங்களில் பயன்பட்டு வருவதாலும், புதிய கருத்தாக்கங்களை வெளிப்படுத்துவதற்கான சொற்தேவைகள் அதிகரித்ததனாலும், ஏராளமான புதிய துணைவினைகள் உருவாகிப் பயன்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

Tags:

வினைச்சொல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பராமாயணத்தின் அமைப்புதமிழ்த்தாய் வாழ்த்துநாயன்மார்சிவனின் தமிழ்ப் பெயர்கள்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்சித்திரைத் திருவிழாஉயிர்மெய் எழுத்துகள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சுந்தர காண்டம்கண்டம்கள்ளழகர் கோயில், மதுரைவெ. இறையன்புசிறுநீர்ப்பாதைத் தொற்றுஆளுமைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தமிழர் கட்டிடக்கலைநீ வருவாய் எனபரிபாடல்ஊராட்சி ஒன்றியம்பெண் தமிழ்ப் பெயர்கள்நாயன்மார் பட்டியல்திராவிட மொழிக் குடும்பம்சிவாஜி (பேரரசர்)மத கஜ ராஜாதெருக்கூத்துபெரும்பாணாற்றுப்படையானைமுகம்மது நபிபொது ஊழிவளைகாப்புசென்னை சூப்பர் கிங்ஸ்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஆசிரியப்பாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்குடும்ப அட்டைகருச்சிதைவுதமிழ்விடு தூதுதண்டியலங்காரம்கேழ்வரகுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஆசாரக்கோவைவாணிதாசன்திருவண்ணாமலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விருத்தாச்சலம்மதீச பத்திரனஉரைநடைதமிழச்சி தங்கப்பாண்டியன்வாட்சப்பி. காளியம்மாள்நவரத்தினங்கள்அக்கிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திருமங்கையாழ்வார்புணர்ச்சி (இலக்கணம்)தொலைபேசிசூல்பை நீர்க்கட்டிபுவியிடங்காட்டிகன்னி (சோதிடம்)காச நோய்முதலாம் உலகப் போர்உடுமலைப்பேட்டைவே. செந்தில்பாலாஜிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நீர்நிலைதமிழ்ந. பிச்சமூர்த்திஉள்ளீடு/வெளியீடுமதராசபட்டினம் (திரைப்படம்)சிறுதானியம்பெருஞ்சீரகம்கருத்தரிப்புசைவ சமயம்கூலி (1995 திரைப்படம்)🡆 More