தியாடர் சுலட்ஸ்

தியாடர் வில்லியம் சுலட்ஸ் (Theodore William Ted Schultz) (30 ஏப்ரல் 1902 - 26 பிப்ரவரி 1998) என்பவர் ஒரு அமெரிக்க பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர் மற்றும் சிகாகோ பொருளியல் பள்ளியின் பேராசிரியர், பொருளியல் கோட்பாடுகளை வகுத்து அதை புகழ் பெறச் செய்தவர் என்று பன்முகங்களை கொண்டவர்.

1979 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றப் பிறகு இவர் அமெரிக்காவில் தேசிய அளவில் அறியப்பட்டார்.

தியாடர் சுலட்ஸ்
தியாடர் சுலட்ஸ்
தியாடர் சுலட்ஸ்
பிறப்பு(1902-04-30)ஏப்ரல் 30, 1902
ஆர்லிங்டன்,தெற்கு டகோட்டா, அமெரிக்கா
இறப்பு26 பெப்ரவரி 1998(1998-02-26) (அகவை 95)
இவான்சுடன்,இலினொய், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்
துறைவேளாண்மை பொருளியல்
கல்விமரபுசிகாகோ பொருளியல் பள்ளி
பயின்றகம்
  • தெற்கு டகோட்டா மாநில பல்கலைக்கழகம்
  • விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம்
தாக்கமுள்ளவர்டாக்டர் காலே ஜான்சன்
விருதுகள்பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1979)
ஆய்வுக் கட்டுரைகள்

ஆரம்பகால வாழ்க்கை

தியாடர் சுலட்ஸ் 30 ஏப்ரல் 1902 ஆம் தேதி அன்று பத்து மைல்கள் தொலைவில், வடமேற்கு பாட்ஜர், தெற்கு டகோட்டாவில் ஒரு 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய பண்னையில் பிறந்தார். சுலட்ஸ் எட்டாவது படிக்கும்போது அவரது தந்தை ஹென்றி இவரை கிங்ஸ்பெரி கவுண்டி பள்ளியில் இருந்து நிறுத்த முடிவு செய்தார். ஏனெனில் தனது மூத்த மகனான சுலட்ஸ் மேற்கொண்டு உயர் கல்வி பயின்றால் தனது பண்னை வேலைகளை செய்ய விரும்ப மாட்டார் என்று நினைத்தார். இதன் காரணமாக சுலட்ஸ் முறையான ஒரு உயர் நிலை கல்விப் பெறவில்லை. சுலட்ஸ் பின்னர் தெற்கு டகோட்டாவில் உள்ள ஒரு வேளாண்மை பள்ளியில் மூன்று ஆண்டு படிப்பில் சேர்ந்து படித்தார். இந்தப் பள்ளி, ஒரு வருடத்தில் குளிர்காலத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே நடைபெறும். இதன் பின்னர் இளங்கலை படித்தார். 1928 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1959 ஆம் ஆண்டு கெளரவ முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1927 இல் பட்டம் பெற்றார், பின்னர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக் கழகத்தில் 1930 ஆம் ஆண்டில் பெஞ்சமின் ஹெச். ஹிபர்ட்டின் கீழ் தனது வேளாண் பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பின்வரும் ஆராய்ச்சி கட்டுரைக்காகப் பெற்றார். அவரது கட்டுரையின் தலைப்பு "சீர்-பயிர் தானியங்களுக்கு இடையே உள்ள கட்டண விலை மற்றும் கட்டண விலை ஆய்வுகளின் சில கோட்பாட்டு அம்சங்களின் வளர்ச்சி."

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்காபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருதம் (திணை)குருதி வகைபரணி (இலக்கியம்)அஜித் குமார்செம்மொழிஇந்தியாவில் இட ஒதுக்கீடுஆண் தமிழ்ப் பெயர்கள்கேழ்வரகுஅகழ்வாய்வுநவரத்தினங்கள்கௌதம புத்தர்நாயன்மார் பட்டியல்பாசிசம்கருத்தரிப்புகம்பராமாயணம்பூரான்பொருநராற்றுப்படைநாளந்தா பல்கலைக்கழகம்ஒப்புரவு (அருட்சாதனம்)பூக்கள் பட்டியல்ராம் சரண்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிவெ. இறையன்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அழகர் கோவில்ரயத்துவாரி நிலவரி முறைபுணர்ச்சி (இலக்கணம்)சித்தர்தயாநிதி மாறன்தன்னுடல் தாக்குநோய்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்திய மக்களவைத் தொகுதிகள்சுதேசி இயக்கம்போக்குவரத்துபிரேசில்பிலிருபின்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்நபிஅசிசியின் புனித கிளாராமும்பை இந்தியன்ஸ்திருமுருகாற்றுப்படைபீப்பாய்மரகத நாணயம் (திரைப்படம்)சங்கம் (முச்சங்கம்)பி. காளியம்மாள்ஐஞ்சிறு காப்பியங்கள்திருமலை நாயக்கர் அரண்மனைநற்கருணைபாசிப் பயறுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கலைச்சொல்அஸ்ஸலாமு அலைக்கும்தற்கொலை முறைகள்கூகுள்இலங்கைவேலுப்பிள்ளை பிரபாகரன்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பாரத ரத்னாஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இராவணன்நெசவுத் தொழில்நுட்பம்சார்பெழுத்துவெந்தயம்மாடுமனித மூளைடி. எம். கிருஷ்ணாசென்னைகருணாநிதி குடும்பம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நயன்தாரா69 (பாலியல் நிலை)தொல்காப்பியம்கா. ந. அண்ணாதுரைஆத்திசூடிமீனாட்சிசுந்தரம் பிள்ளைஜவகர்லால் நேருஜி. யு. போப்🡆 More