தருண் கோகய்: அசாமின் மேனாள் முதலமைச்சர்

தருண் கோகய் ( Tarun Gogoi, அசாமி: তৰুণ গগৈ) (பிறப்பு ஏப்ரல் 1, 1936 - இறப்பு நவம்வர் 23, 2020) இந்திய மாநிலம் அசாமின் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசுத் தலைவரும் ஆவார்.

தருண் கோகய்
তৰুণ গগৈ
தருண் கோகய்: அசாமின் மேனாள் முதலமைச்சர்
அசாம் முதலமைச்சர் (2001 - 2016)
தொகுதிதித்தாபர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 1, 1936 (1936-04-01) (அகவை 88)
ரங்காஜன், ஜோர்ஃகாட்
இறப்பு23 நவம்பர் 2020
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்டோல்லி கோகய்
பிள்ளைகள்ஓர் மகனும் ஓர் மகளும்
வாழிடம்(s)ஜோர்ஃகாட், அசாம்
As of சூன் 18, 2006
மூலம்: அசாம் அரசு தளத்தில்

கோகய் அசாமின் ஜோர்ஃகாட் மாவட்டத்தில் ரங்காஜன் தேயிலைத் தோட்டத்தில் பிறந்தவர்.ஜோர்ஃகாட் அரசுப் பள்ளியில் படித்து ஜே பி கல்லூரியிலிருந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தார்.

அரசியல் வாழ்வு

1971ஆம் ஆண்டு ஜோர்ஃகாட் தொகுதியில் இருந்து ஐந்தாவது மக்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று தில்லி சென்றார். இதே தொகுதியிலிருந்து 1977 (ஆறாவது மக்களவை), மற்றும் 1983 (ஏழாவது மக்களவை) ஆண்டுகளிலும் வென்று மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்தார். 1991ஆம் ஆண்டு நடந்த பத்தாவது மக்களவைத் தேர்தல்களில் காளிபாரி தொகுதியில் போட்டியிட்டு நான்காம் முறையாக வென்றார்.1991-93 காலத்தில் நடுவண் அமைச்சில் உணவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1993 முதல் 1995 வரை உணவு பதனப்படுத்தல் துறையில் தனிப்பொறுப்புடன் இணை அமைச்சராகப் பணியாற்றினார்.

1996-98 காலத்தில் மார்கெரிட்டா சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பேரவையில் பணியாற்றினார்.ஆனால் 1998ஆம் ஆண்டு மீண்டும் பனிரெண்டாவது மக்களவைத் தேர்தலில் காளிபாரித் தொகுதியிலிருந்து இரண்டாம் முறையாகவும் மக்களவைக்கு ஐந்தாம் முறையாகவும் வெற்றி கண்டார். இதே தொகுதியிலிருந்து 1999ஆம் ஆண்டு பதின்மூன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

17 மே, 2001 அன்று அசாமின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2006ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல்களில் வென்று இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பணியாற்றினார். 2011 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்று மீண்டும் மூன்றாம் முறையாக முதலமைச்சராக மே, 2011 முதல் 2016 வரை பணியாற்றினார். 2016 ஆண்டு அசாமில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று சர்பானந்த சோனாவால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு

இவர் கொரோனா வைரசுத் தொற்றின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு உள்ளுறுப்புகள் செயலிழப்பு காரணமாக கௌகாத்தி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் 23 நவம்பர் 2020 அன்று மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

Tags:

அசாமிய மொழிஅசாம்இந்திய தேசிய காங்கிரசுஇந்தியாமுதலமைச்சர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பீப்பாய்ஜோதிமணிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தயாநிதி மாறன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்புதுச்சேரிமரணதண்டனைபரிதிமாற் கலைஞர்சிவனின் 108 திருநாமங்கள்ஆண்டு வட்டம் அட்டவணைசங்க காலப் புலவர்கள்தீபிகா பள்ளிக்கல்ஒப்புரவு (அருட்சாதனம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபெயர்ச்சொல்போயர்குற்றாலக் குறவஞ்சிகள்ளர் (இனக் குழுமம்)மரகத நாணயம் (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்ராதாரவிகடையெழு வள்ளல்கள்ராம் சரண்மூவேந்தர்கண்ணதாசன்முடக்கு வாதம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ரயத்துவாரி நிலவரி முறைகொங்கு வேளாளர்ஔவையார்சுக்ராச்சாரியார்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சப்ஜா விதைபெரிய வியாழன்வேதநாயகம் பிள்ளைவிஜயநகரப் பேரரசுதிருநெல்வேலிதிருவோணம் (பஞ்சாங்கம்)கோயம்புத்தூர்மலையாளம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஆய்த எழுத்து (திரைப்படம்)பாசிப் பயறுஇடைச்சொல்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்இந்தியக் குடியரசுத் தலைவர்இயற்பியல்வரலட்சுமி சரத்குமார்திருக்குர்ஆன்நுரையீரல்காடுவெட்டி குருஇந்திய நாடாளுமன்றம்கூகுள்மரவள்ளிதேவேந்திரகுல வேளாளர்சாரைப்பாம்புஐ (திரைப்படம்)பிலிருபின்நீர் மாசுபாடுவிரை வீக்கம்சிறுபஞ்சமூலம்விஜய் (நடிகர்)தொழுகை (இசுலாம்)வி.ஐ.பி (திரைப்படம்)வெள்ளி (கோள்)உஹத் யுத்தம்ஆபிரகாம் லிங்கன்நம்மாழ்வார் (ஆழ்வார்)புதுமைப்பித்தன்இரட்டைக்கிளவிஅசிசியின் புனித கிளாராபோதைப்பொருள்முல்லை (திணை)வட்டார வளர்ச்சி அலுவலகம்சிங்கம் (திரைப்படம்)அளபெடைதிராவிட இயக்கம்நெல்🡆 More