டபிள்யூ. பி. யீட்சு

வில்லியம் பட்லர் யீட்சு அல்லது வில்லியம் பட்லர் யீட்ஸ் (William Butler Yeats, சூன் 13, 1865 – சனவரி 28, 1939) ஒரு ஐரிய கவிஞர் மற்றும் நாடகாசிரியர்.

20ம் நூற்றாண்டு இலக்கியத்தின் பெரும் புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். ஐரிய மற்றும் பிரிட்டானிய இலக்கிய உலகுகளில் முக்கியமானவராக இருந்த யீட்சு அயர்லாந்தின் செனட் (நாடாளுமன்ற மேல்சபை) உறுப்பினராகவும் இருமுறை பணியாற்றியுள்ளார்.

வில்லியம் பட்லர் யீட்சு
வில்லியம் பட்லர் யீட்ஸ்
William Butler Yeats
1891ல் யீட்சு
1891ல் யீட்சு
பிறப்புசூன் 13, 1865
இறப்புசனவரி 28, 1939
தொழில்எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள்நோபல் இலக்கியப் பரிசு
1923

19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளின் ஐரிய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திடவர் இவரே. யீட்சு லேடி கிரகோரி மற்றும் எட்வார்ட் மார்ட்டினுடன் இணைந்து டப்ளினின் புகழ்பெற்ற ஆபி நாடக அரங்கை உருவாக்கினார். அரங்கின் ஆரம்ப காலத்தில் அதன் தலைவராகவும் பணியாற்றினார். 1923ம் ஆண்டு யீட்சுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசினை பெற்ற பிறகு தங்களது மிகச்சிறந்த படைப்புகளைப் படைத்த ஒரு சில படைப்பாளிகளுள் யீட்சும் ஒருவர். டப்ளினில் பிறந்த யீட்சு தனது இளவயதில் கிரேக்க தொன்மவியல் கதைகளையும், நாட்டார் கதைகளையும் விரும்பிப் படித்தார். அவற்றின் தாக்கம் அவரது இலக்கிய வாழ்வின் முதற்கட்டத்தில் படைத்த படைப்புகள் (19ம் நூற்றாண்டின் முடிவு வரை) தெரிகிறது. 1889ம் ஆண்டு அவரது முதல் கவிதைப் படைப்பு வெளியானது. அவரது ஆரம்பகால கவிதைகளில் எட்மண்ட் ஸ்பென்சர் மற்றும் பெர்சி பைஷ் ஷெல்லி ஆகியோரின் தாக்கமும் தெரிகிறது. 20ம் நூற்றாண்டில் யீட்சு தனது இளமைக்கால கடந்தநிலைவாத (transcendentalism) கருத்துகளை விடுத்து, தனது படைப்புகளில் யதார்த்தவாதத்தை பின்பற்றத் தொடங்கினார். யீட்சு தனது வாழ்நாளின் பல்வேறு காலகட்டங்களில் தேசியவாதம், செவ்வியல் தாராண்மையியம், எதிர்வினைப் பழமைவாதம் பெருமாற்ற அழிவுவாதம் போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றினார்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Tags:

20ம் நூற்றாண்டுஅயர்லாந்துஐக்கிய இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிங்கப்பூர்மதுரைநீக்ரோதயாநிதி மாறன்அறுபது ஆண்டுகள்தமிழ் எண் கணித சோதிடம்அரண்மனை (திரைப்படம்)இசுலாத்தின் ஐந்து தூண்கள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமயக்கம் என்னகாடுவெட்டி குருதென் சென்னை மக்களவைத் தொகுதிமுல்லைப்பாட்டுசாகித்திய அகாதமி விருதுதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சிவாஜி கணேசன்குணங்குடி மஸ்தான் சாகிபுஉணவுவல்லினம் மிகும் இடங்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்ருதுராஜ் கெயிக்வாட்பக்கவாதம்தமிழ்ஒளிவெந்தயம்காம சூத்திரம்உன்னை நினைத்துதமிழக வரலாறுஆகு பெயர்சுயமரியாதை இயக்கம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காமராசர்வேற்றுமையுருபுநிலக்கடலைசூரைந. பிச்சமூர்த்திசிவம் துபேஇரச்சின் இரவீந்திராசின்னம்மைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துபிரான்சிஸ்கன் சபைமூவேந்தர்வீரப்பன்நுரையீரல் அழற்சிதற்குறிப்பேற்ற அணிஆதம் (இசுலாம்)இந்திய நிதி ஆணையம்விரை வீக்கம்இந்திய தேசிய காங்கிரசுமக்காச்சோளம்இராமர்மருது பாண்டியர்மாணிக்கவாசகர்எல். முருகன்சைவ சமயம்இந்திய நாடாளுமன்றம்லியோமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசூல்பை நீர்க்கட்டிஅக்பர்மக்களாட்சிகாச நோய்கர்நாடகப் போர்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபரதநாட்டியம்ஹோலிசேலம் மக்களவைத் தொகுதிகபிலர் (சங்ககாலம்)தமிழர் கலைகள்உமறுப் புலவர்ஆண்டாள்எடப்பாடி க. பழனிசாமிவி.ஐ.பி (திரைப்படம்)குப்தப் பேரரசுஇந்தியாவில் இட ஒதுக்கீடு🡆 More