ஜூன்கோ டபெய்

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி (Junko Tabei) 10வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார்.

ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார். படிக்கும் போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார். திருமணத்துக்கு பின்னர் கணவருடன் இணைந்து பல சிகரங்களில் மலையேறும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஜப்பானில் உள்ள புஜி மலை உள்ளிட்ட சில உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். சுவிஸ் ஆல்ப் மலை சிகரங்களில் உள்ள மாட்டர்ஹார்னிலும் மலையேறும் பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார். இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலை காட்சி ஆகியவை இணைந்து ஜப்பானில் உள்ள பெண்கள் மலையேறும் குழுவை எவரஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன. ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்தனர். இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப் பட்டன. 1975ம் ஆண்டின் தொடக்கத்தில் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உள்ளூரை சேர்ந்த 9 பேரை வழிகாட்டிகளாக அழைத்துக்கொண்டனர். 1953ஆம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் இல்லரி, டென்சிங் நோர்கே ஆகியோர் சென்ற வழியில் பெண்கள் குழுவினர் எவரஸ்ட் சிகரத்தை நோக்கி சென்றனர். மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்து விட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபி உள்ளிட்ட பெண்களை மீட்டார். அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975ம் ஆண்டு இதே நாளில் எவரஸட் சிகரத்தை அடைந்தார். இதைதொடர்ந்து மேலும் பல சாதனைகளை செய்தார். இப்போது 61வயதாகும் இவர் வயதுகாரணமாக மலையேறும் சாதனைகளை குறைத்துக்கொண்டார்.

ஜூன்கோ டபெய்

Tags:

எட்மண்ட் இல்லரிடென்சிங் நோர்கே

🔥 Trending searches on Wiki தமிழ்:

கவலை வேண்டாம்தற்குறிப்பேற்ற அணிஅருந்ததியர்இந்திய உச்ச நீதிமன்றம்கற்றது தமிழ்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருவாதிரை (நட்சத்திரம்)கன்னத்தில் முத்தமிட்டால்சே குவேராதமிழக வரலாறுவீணைமுதலாம் உலகப் போர்சிலேடைமனோன்மணீயம்கல்பனா சாவ்லாஅன்னை தெரேசாதிரிகடுகம்சுதேசி இயக்கம்பார்த்திபன் கனவு (புதினம்)தாஜ் மகால்தமிழ்நாடு சட்டப் பேரவைகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்கல்லணைமாலை நேரத்து மயக்கம்கரிசலாங்கண்ணிசெயற்கை அறிவுத்திறன்மரகத நாணயம் (திரைப்படம்)திருமுருகாற்றுப்படையானைசென்னைசெம்மொழிஔவையார்ஹதீஸ்வாழைப்பழம்பெரியாழ்வார்பாண்டியர்அபூபக்கர்பண்டமாற்றுகரகாட்டம்வேலுப்பிள்ளை பிரபாகரன்கிறிஸ்தவம்முதலாம் கர்நாடகப் போர்உரைநடைதிராவிடர்காதல் மன்னன் (திரைப்படம்)ஓவியக் கலைமயங்கொலிச் சொற்கள்வாலி (கவிஞர்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கலித்தொகைமேற்கு வங்காளம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்விவேகானந்தர்குறிஞ்சி (திணை)நஞ்சுக்கொடி தகர்வுஆனைக்கொய்யாதிருவள்ளுவர் ஆண்டுரக்அத்குதுப் நினைவுச்சின்னங்கள்முதற் பக்கம்கற்றாழைசமூகம்வேளாளர்மொழிவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்நாயன்மார்நீர்பராக் ஒபாமாபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்நிதியறிக்கைஆதம் (இசுலாம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்முகம்மது நபியின் இறுதிப் பேருரைபாண்டவர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்விஜய் வர்மாபகத் சிங்🡆 More