சேற்று பூனைப்பருந்து

சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier - Circus aeruginosus) ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier) வகையாகும்.

சேற்று பூனைப்பருந்து
சேற்று பூனைப்பருந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
Neornithes
உள்வகுப்பு:
Neognathae
பெருவரிசை:
Neoaves
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Circus
இனம்:
C. aeruginosus
இருசொற் பெயரீடு
Circus aeruginosus
(லின்னேயஸ், 1758)
சேற்று பூனைப்பருந்து
Dark green: present all year
Light green: nesting only
Blue: wintering only
சேற்று பூனைப்பருந்து
Circus aeruginosus

சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம். இவை நடு, வட ஐரோப்பாவில் இனப்பெருக்கும் செய்கின்றன. குளிர் காலத்தில் ஆப்பிரிக்காவுக்கும் இந்திய துணைக்கண்டத்துக்கும் வலசை வருகின்றன. இவை நீர்நிலைகளை ஒட்டிய காட்டுப் பகுதியில் தங்கிச் செல்கின்றன.

உடல் தோற்றம்

  • 48 cm முதல் 58 cm வரை நீளமுள்ளது.
  • ஆண்: பறக்கும்போது இறக்கையின் உட்புறப் பகுதி செம்பழுப்பாகவும் அதன் நுனி கருப்பாகவும் இருக்கும்; அவற்றிற்கு இடைப்பட்ட பகுதி சாம்பல் நிறமாக இருக்கும். இறக்கையின் வெளிப்புறப் பகுதி கரும்பழுப்பாகவும் காணப்படும்.
  • பெண்: முழுவதும் கரும்பழுப்பாகக் காணப்படும்; உச்சந்தலையும் இறக்கையின் மேல்முனையும் வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும்.
  • முதிர்வடையாத பருந்து: முழுவதும் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும். பெண் பருந்துக்குரிய அடையாளமான வெளிர் மஞ்சள் தலை/இறக்கை இருக்காது.
  • பொது: பார்வையாளரை நோக்கிப் பறந்து வரும்போது இறக்கை 'V' வடிவத்திலிருக்கும்.

கள இயல்புகள்

சேற்று பூனைப்பருந்து 
  • தரையிலோ புதரிலோ குட்டையான கம்பங்களிலோ நீண்ட நேரம் அமைதியாகக் காத்திருக்கும்; சில மீட்டர் உயரம் பறந்து நகங்களை நீட்டியவாறு தரையிறங்கும்.
  • அனைத்துப் பருந்துகளும் வயல்வெளித் தரையிலேயே சேர்ந்து அடைந்து ஓய்வெடுக்கும்.
  • வாத்து, உள்ளான் உள்ளிட்ட சிறு பறவைகளை வேட்டையாடுவோருக்கு நன்கு அறிமுகமான பருந்து இது. அடிபட்ட பறவையை வேடர்கள் வந்து எடுப்பதற்குள் கவர்ந்து சென்று விடும்.

உணவு

சேற்று பூனைப்பருந்து, வழக்கமான பூனைப் பருந்து பாணியில் வேட்டையாடுகிறது. இரையைத் தேடும் போது தட்டையான திறந்த நிலத்தின் மீது தாழ்வாக சறுக்குகிறது. இதன் இறக்கைகள் ஆழமற்ற V- வடிவத்திலும் பெரும்பாலும் தொங்கும் கால்களுடனும் இருக்கும். இது சிறிய பாலூட்டிகள், சிறிய பறவைகள், பூச்சிகள், ஊர்வன மற்றும் தவளைகளை உணவாக உண்ணுகிறது.

கலைச்சொற்கள்

rufous = செம்பழுப்பு; harrier = வேட்டைப்பருந்து; dark brown = கரும்பழுப்பு;

மேற்கோள்கள்

Tags:

சேற்று பூனைப்பருந்து உடல் தோற்றம்சேற்று பூனைப்பருந்து கள இயல்புகள்சேற்று பூனைப்பருந்து உணவுசேற்று பூனைப்பருந்து கலைச்சொற்கள்சேற்று பூனைப்பருந்து மேற்கோள்கள்சேற்று பூனைப்பருந்துஆப்பிரிக்காஇந்திய துணைக்கண்டம்நடு ஐரோப்பாவட ஐரோப்பாவலசைவலசை போதல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராபர்ட்டு கால்டுவெல்எஸ். ஜானகிகம்பராமாயணத்தின் அமைப்புசேரன் செங்குட்டுவன்இயற்கைவரலாறுகாயத்ரி மந்திரம்பஞ்சாங்கம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்குகேஷ்யானையின் தமிழ்ப்பெயர்கள்தொழினுட்பம்விஷால்கார்லசு புச்திமோன்ஹாட் ஸ்டார்தொகாநிலைத்தொடர்நயன்தாராசுரைக்காய்இலங்கையின் வரலாறுநரேந்திர மோதிகுலசேகர ஆழ்வார்காடழிப்புதமிழ்ப் புத்தாண்டுசோழர்எட்டுத்தொகைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மாநிலங்களவைதங்கம்நாடகம்நீரிழிவு நோய்இட்லர்அம்மனின் பெயர்களின் பட்டியல்தாஜ் மகால்இந்தியன் (1996 திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)நான்மணிக்கடிகைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இராமலிங்க அடிகள்வேற்றுமையுருபுபொன்னகரம் (சிறுகதை)முகம்மது நபிவால்மீகிதிருவிளையாடல் புராணம்ஜவகர்லால் நேருஇந்திய அரசுபுறாஉரிப்பொருள் (இலக்கணம்)பர்வத மலைமுல்லைப்பாட்டுமதுரைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழக வரலாறுபோக்குவரத்துநாயக்கர்கருப்பைதிருத்தணி முருகன் கோயில்கில்லி (திரைப்படம்)முத்தரையர்நம்மாழ்வார் (ஆழ்வார்)கல்லணைசுந்தரமூர்த்தி நாயனார்கிராம நத்தம் (நிலம்)ஆதவன் தீட்சண்யாகடல்அஸ்ஸலாமு அலைக்கும்நவரத்தினங்கள்கரகாட்டம்மேற்குத் தொடர்ச்சி மலைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கருப்பை நார்த்திசுக் கட்டிவட்டாட்சியர்காதல் கோட்டைஏற்காடுசிவபுராணம்மதுரைக் காஞ்சிபியர்🡆 More