செல்மா லோவிசா லேகர்லாவ்

செல்மா லோவிசா லேகர்லாவ் (நவம்பர் 20, 1858 – மார்ச் 16, 1940) சுவிடனைச் சேர்ந்த ஆசிரியர்.

இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. இவரின் சிறந்த படைப்பான நீலின் அற்புத சாகசங்கள் (The Wonderful Adventures of Nils) என்ற புத்தகம் குழந்தைகளுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

செல்மா லோவிசா லேகர்லாவ்
செல்மா லோவிசா லேகர்லாவ் 1909
செல்மா லோவிசா லேகர்லாவ் 1909
பிறப்பு(1858-11-20)20 நவம்பர் 1858
மார்பாக், வார்ம்லாண்ட், சுவீடன்
இறப்பு16 மார்ச்சு 1940(1940-03-16) (அகவை 81)
மார்பாக், வார்ம்லாண்ட், சுவீடன்
தொழில்எழுத்தாளர்
தேசியம்சுவீடன்
குறிப்பிடத்தக்க விருதுகள்நோபல் பரிசு

பிறப்பு

1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் நாள் சுவீடன் உள்ள வார்ம்லாண்ட் நகரில் எரிக் லூயிசே தம்பதிக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தார். இவர் பிறக்கும் போதே இடுப்பில் காயத்துடன் பிறந்தார். சிறுவயதில் இரு கால்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது சிறு வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். 1884ல் அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு அவர்கள் வீடு விற்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பம் வறுமையில் வாழ்ந்தது.

வாழ்கை

செல்மா 1882 முதல் 1885 வரை ஸ்டாக்ஹோமிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பட்டம் பெற்றார் . பின், 1885ல் லாண்ட்ஸ்குரோனாவில் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தர். அதிகக் கல்வியறிவு இல்லாத போதும் சிறுவயதில் அவர் படித்த கதைப் புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தது. அப்பள்ளியில் சிறந்த கதை சொல்லும் ஆசிரியையாக திகழ்ந்தார்.

இலக்கிய பயணம்

அவர் தன் முதல் நாவலைப் பள்ளியில் பணியாற்றிய போது எழுதத் தொடங்கினர். அதனை வெளியிட பிரெட்ரிகா லிம்நெல் என்ற பதிப்பாளர் உதவினார். அதை தொடர்ந்து அவர் எழுதிய முதல் நாவலான 'கோஸ்டா பெர்லிங்க்ஸ் சாகா' இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டது. 1895ல் ஆசிரியைப் பணியை துறந்து எழுத்துப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இத்தாலி நாட்டுக்குச் சென்றவர் அங்கு கிறித்துவர்களுக்கும், சமுக அமைப்பாளர்களுக்கும் இடையே இருந்த பிராச்சனைகளை மையமாக கொண்டு 'கிருத்துவ எதிர்ப்பாளரின் அதிசியங்கள்' என்ற புத்தகத்தை எழுதினார். 1897ல் பாலென் நகருக்குச் சென்றவர் அங்கு வால்போர்க் ஒலேன்டர் என்பவரைச் சந்தித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரைத் தன் உதவியாளராக வைத்துக் கொண்டார்.

விருதுகள் மற்றும் நினைவு

  • 904ம் ஆண்டு [சுவீடன்] இலக்கிய கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 1907ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்.
  • 1909ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
  • சுவிடன் இலக்கிய கழகத்தில் உறுப்பினரானார்.

இறப்பு

1904ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் நாள் மரணமடைந்தார். அவர் வாழ்ந்த வார்ம்லாண்ட் இல்லம், இன்று அவருடைய நினைவிடமாக உள்ளது.

உசாத்துணை

Tags:

செல்மா லோவிசா லேகர்லாவ் பிறப்புசெல்மா லோவிசா லேகர்லாவ் வாழ்கைசெல்மா லோவிசா லேகர்லாவ் இலக்கிய பயணம்செல்மா லோவிசா லேகர்லாவ் விருதுகள் மற்றும் நினைவுசெல்மா லோவிசா லேகர்லாவ் இறப்புசெல்மா லோவிசா லேகர்லாவ் உசாத்துணைசெல்மா லோவிசா லேகர்லாவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால கங்காதர திலகர்வல்லினம் மிகும் இடங்கள்கருமுட்டை வெளிப்பாடுபுதிய ஏழு உலக அதிசயங்கள்யுகம்அரிப்புத் தோலழற்சிஆக்‌ஷன்இரண்டாம் உலகப் போர்குதிரைதமிழ்த்தாய் வாழ்த்துபிளாக் தண்டர் (பூங்கா)குறுந்தொகைவளையாபதிதிருத்தணி முருகன் கோயில்பிரேமலுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அறுபது ஆண்டுகள்திருப்பதிநிலாடி. என். ஏ.மாசாணியம்மன் கோயில்தமிழர் விளையாட்டுகள்குறிஞ்சி (திணை)அறுசுவைபைரவர்பெயர்ச்சொல்கலிங்கத்துப்பரணிமுருகன்சிவாஜி (பேரரசர்)சூளாமணிபாரத ஸ்டேட் வங்கிதில்லி சுல்தானகம்மரகத நாணயம் (திரைப்படம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பி. காளியம்மாள்திருக்குறள் பகுப்புக்கள்நீர் பாதுகாப்புதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அன்னி பெசண்ட்உவமையணிசிற்பி பாலசுப்ரமணியம்முதற் பக்கம்அமேசான்.காம்கி. ராஜநாராயணன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கல்லணைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஏப்ரல் 24சமணம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்திய ரிசர்வ் வங்கிஇந்தியாசெஞ்சிக் கோட்டைசேரன் (திரைப்பட இயக்குநர்)பல்லாங்குழிசிவபுராணம்சென்னை சூப்பர் கிங்ஸ்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சித்திரைத் திருவிழாஉயிர்மெய் எழுத்துகள்இந்திய தேசிய காங்கிரசுவளைகாப்புதீரன் சின்னமலைதளபதி (திரைப்படம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)குகேஷ்ஜி. யு. போப்நன்னூல்வினைச்சொல்புங்கைதிருப்பூர் குமரன்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்திருக்குறள்இரா. இளங்குமரன்பட்டினப்பாலைரவிசீனிவாசன் சாய் கிஷோர்இரவீந்திரநாத் தாகூர்சுடலை மாடன்🡆 More