சூரிய மைய வட்டணை

சூரிய மைய வட்டணை (Heliocentric orbit) என்பது சூரிய குடும்பத்தின் ஈர்ப்புமையத்தைச் சுற்றியுள்ள ஒரு வட்டணையாகும், இது பொதுவாக சூரியனின் மேற்பரப்பிற்குள் அல்லது மிக அருகில் அமைந்துள்ளது.

சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கலும், வால்வெள்ளிகளும் சிறுகோள்களும் சூரியனும் அத்தகைய வட்டணையில் உள்ளன, பல செயற்கை ஆய்வுப்பொருட்களும் சிதிலங்களின் துண்டுகளும் உள்ளன. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் நிலவுகள் சூரிய மைய வட்டணையில் இல்லை, ஏனெனில் அவை அந்தந்தக் கோள்களைச் சுற்றி வருகின்றன (நிலா சூரியனைச் சுற்றி குவிந்த வட்டணையைக் கொண்டிருந்தாலும்).

சூரிய மைய வட்டணை
சூரியனுடன் தொடர்புடைய சூரிய குடும்பத்தின் ஈர்ப்புமைய இயக்கம்

சூரிய குடும்பத்தின் ஈர்ப்புமையம், எப்போதும் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் போது, சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற பெரிய பொருட்களான வியாழனும் பிற பெரிய வளிமக் கோள்களும் அந்த நேரத்தில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து, நேரம் செல்ல செல்ல விண்வெளியில் செல்கின்றன. இதேபோன்ற ஆர-விரைவு முறை மூலம் புறவெளிக்கோள்களைக் கண்டறிய முடிகிறது.

ஹீலியோ- முன்னொட்டு கிரேக்க வார்த்தையான "ἥλιος" என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது, இச்சொல் "சூரியன்" எனப்பொருள்படும், மேலும் ஹீலியோஸ், கிரேக்கத் தொன்மங்களில் சூரியக் கடவுள் ஆகும் .

1959 இல் உலூனா 1 என்ற விண்கலம் சூரிய மைய வட்டணையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் விண்கலம் ஆகும். தவறான நேரத்தில் ஏற்பட்ட மேல்-கட்ட எரிப்பு, நிலாவில் அதன் திட்டமிட்ட மொத்தலை தவறவிட்டது.

செவ்வாய் பெயரும் நுழைவு

சூரிய மைய வட்டணை 
செவ்வாய் பெயரும் நுழைவு வரைபடம்.




A = ஓகுமன் பெயர்தல் வட்டணை. பி = இணைப்புத் திட்டம் சி = எதிர்ப்புத் திட்டம்

செவ்வாய் பெயரும் வட்டணை (டிஎம்ஐ) என்பது ஒரு சூரிய மைய வட்டணையாகும், இதில் ஒரு விண்கலத்தை அமைக்க ஒரு உந்துவிசை முறை பயன்படுத்தப்படுகிறது, இது செவ்வாய் பெயரும் வட்டணை என்றும் அழைக்கப்படுகிறது, இது செவ்வாய் வட்டணை வரை விண்கலத்தைக் கொண்டுசெல்லும்.

ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும், குறைந்த ஆற்றல் பெயர்நிலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன, இது கோள்களுக்கு இடையில் சாத்தியமான குறைந்த ஆற்றல் கொண்ட இயக்கத்துக்கு வழிவிடுகிறது. பெயரும் நுழைவுகள் விண்கலத்தை ஓகுமன் பெயர்நிலை வட்டணையில் அல்லது இரு நீள்வட்ட பெயர்நிலை வட்டணையில் வைக்கலாம். செவ்வாய் பெயரும் நுழைவு 2013 இல் நாசா மேவன் வட்டணைக்கலத்தால் ஒற்றை எரிப்பு முறையில் அடைந்தது போல அடைய முடியலாம் அல்லது 2013 இல் இசுரோவின் செவ்வாய் சுற்றுகலன் பயன்படுத்தியது போன்ற தொடர்ச்சியான புவியண்மைப் பலமுறை எரிப்பாலும் படிப்படியாக அடையலாம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

கோள்சிறுகோள்சுற்றுப்பாதைசூரியக் குடும்பம்ஞாயிறு (விண்மீன்)வால்வெள்ளிவிண்வெளிக் கழிவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுந்தர காண்டம்வ. உ. சிதம்பரம்பிள்ளைபுற்றுநோய்கார்லசு புச்திமோன்மெட்பார்மின்வளைகாப்புவிளம்பரம்சாதிகுடமுழுக்குசித்தர்கள் பட்டியல்தொண்டைக் கட்டுஇரத்தப் புற்றுநோய்முல்லை (திணை)பழமுதிர்சோலைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விருத்தாச்சலம்கர்மாதைராய்டு சுரப்புக் குறைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தாஜ் மகால்பயில்வான் ரங்கநாதன்ஐஞ்சிறு காப்பியங்கள்கணினிகொங்கு வேளாளர்அப்துல் ரகுமான்இந்திய விடுதலை இயக்கம்காப்சாஇந்திய தேசிய காங்கிரசுவிநாயக் தாமோதர் சாவர்க்கர்பெண்திருவள்ளுவர் சிலைபெரியபுராணம்தலைவி (திரைப்படம்)பணவீக்கம்நம்ம வீட்டு பிள்ளைஈ. வெ. கி. ச. இளங்கோவன்புறநானூறுலக்ன பொருத்தம்விடுதலை பகுதி 1தமிழ் மாதங்கள்ஆனைக்கொய்யாகரகாட்டம்பிள்ளைத்தமிழ்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்மூவேந்தர்காரைக்கால் அம்மையார்சிலேடைபனைகருமுட்டை வெளிப்பாடுஹதீஸ்இசுரயேலர்அயோத்தி தாசர்மலைபடுகடாம்ஈரோடு மாவட்டம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சுடலை மாடன்கிருட்டிணன்காதல் மன்னன் (திரைப்படம்)கருத்தரிப்புயோகக் கலைஇந்திய தேசியக் கொடி108 வைணவத் திருத்தலங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்புங்கைநெடுஞ்சாலை (திரைப்படம்)முன்னின்பம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முத்துராமலிங்கத் தேவர்இராம நவமிதமிழ் நாடக வரலாறுவேதாத்திரி மகரிசிகயிலை மலைஉ. சகாயம்விபுலாநந்தர்சிங்கப்பூர்பழனி முருகன் கோவில்🡆 More