நூல் சீராக்கின் ஞானம்

சீராக்கின் ஞானம் (Book of Sirach) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்.

இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழாத் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

நூல் சீராக்கின் ஞானம்
சீராவின் மகனான ஏசு (பென் சீரா). ஓவியர்: இளைய யேர்க் ப்ராய். ஆண்டு: 1545-1549. காப்பிடம்: செருமனி.

பெயர்

சீராக்கின் ஞானம் என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் Sophía Seirách (Σοφία Σειράχ) எனவும் இலத்தீனில் Siracides (Liber Iesu Filii Sirach, அல்லது Ecclesiasticus) என்றும் பெயர் பெற்றுள்ளது. எபிரேயத்தில் இந்நூல் Hokhmah Ben Sira (חכמת בן סירא = சீராக்கின் ஞானம்) என்று அமையும். இது ஏழு இணைத் திருமுறை விவிலிய நூல்களுள் ஒன்று ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. இந்நூலின் மூல பாடம் (செப்துவசிந்தா) என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது.

உள்ளடக்கம்

செலூக்கியர் ஆட்சியின்போது கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டுமுறை முதலியன யூதர்கள்மீது திணிக்கப்பட்டன. யூதர் பலரும் இவற்றை விரும்பி ஏற்கத் தொடங்கினர். இக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180) சீராக்கின் மகனும் எருசலேமில் வாழ்ந்த மறைநூலறிஞருமான ஏசு, தம்மவரை யூத மறையில் உறுதிப்படுத்தி ஊக்குவிக்க எண்ணினார்.

உண்மையான ஞானம் இசுரயேலில்தான் உள்ளது; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்தான் அது அடங்கும் என்பதை வலியுறுத்தி இந்நூலை எழுதினார். எனவே இந்நூல் எபிரேயத்தில் "சீராவின் மகனான ஏசுவின் ஞானம்" அல்லது "பென் சீரா" என வழங்குகிறது.

எபிரேய மொழியில் எழுதப்பெற்ற இந்நூலை, பாலசுத்தீனத்துக்கு வெளியே கிரேக்கச் சூழலில் வாழ்ந்த யூதர்களின் நலன் கருதி, ஏசுவின் பேரன் (ஏறத்தாழ கி.மு. 132) கிரேக்கத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஒரு முன்னுரையும் வரைந்தார். தொடக்கத் திருச்சபையில் "திருப்பாடல்கள்" நூலுக்கு அடுத்தபடி இந்நூல் திருவழிபாட்டிலும் மறைக்கல்வியிலும் மிகுதியாகப் பயன்பட்ட காரணத்தால், இது "சபை நூல்" (Ecclesiasticus) என்றும் பெயர் பெற்றது.

இந்நூலின் எபிரேய பாடம் முழுதும் தொலைந்துவிட, இதன் மொழிபெயர்ப்பான கிரேக்க பாடமே நமக்கு மூல பாடமாகப் பயன்பட்டுவருகிறது. எனினும், எபிரேய பாடத்தின் பெரும் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக இன்று நமக்குக் கிடைத்துள்ளதால், கிரேக்க பாடத்தை நன்கு புரிந்துகொள்ள இது பெரிதும் துணை புரிகிறது.

ஞானம் பற்றிய கருத்துக் குவியலைக் கொண்ட முதல் பகுதி, அன்றாட வாழ்வில் ஞானத்தைக் கடைப்பிடிக்கும் முறை பற்றிப் பேசுகிறது. இரண்டாவது பகுதி இசுரயேலின் மீட்பு வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களைப் புகழ்வதோடு, அவர்களைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறது.

நூலிலிருந்து சில பகுதிகள்

சீராக்கின் ஞானம் 1:1-4
"ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகின்றது;
அது என்றும் அவரோடு இருக்கின்றது.
கடல் மணலையோ மழைத் துளியையோ
முடிவில்லாக் காலத்தையோ
யாரே கணக்கிடுவர்?
வான்வெளியின் உயரத்தையோ
நிலவுலகின் அகலத்தையோ
ஆழ்கடலையோ ஞானத்தையோ
யாரே தேடிக் காண்பர்?
எல்லாவற்றுக்கும் முன்னர்
ஞானமே உண்டாக்கப்பட்டது;
கூர்மதி கொண்ட அறிவுத்திறன்
என்றென்றும் உள்ளது."

சீராக்கின் ஞானம் 4:1-5
"குழந்தாய்,
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;
கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.
பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே;
வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே...
உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து
உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே;
உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே."

சீராக்கின் ஞானம் 6:5-16
"இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்;
பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.
அனைவரோடும் நட்புடன் பழகு;
ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.
ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே.
தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு;
அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
பகைவர்களாக மாறும் நண்பர்களும் உண்டு;
அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி,
உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்...
நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்."

உட்பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை (1-14 வசனங்கள்) 103
2. ஞானம் வழங்கும் நன்னெறி 1:1 - 43:33 103 - 173
3. மூதாதையர் புகழ்ச்சி 44:1 - 50:29 173 - 185
4. பிற்சேர்க்கை 51:1-30 186 - 187

ஆதாரங்கள்

Tags:

நூல் சீராக்கின் ஞானம் பெயர்நூல் சீராக்கின் ஞானம் உள்ளடக்கம்நூல் சீராக்கின் ஞானம் நூலிலிருந்து சில பகுதிகள்நூல் சீராக்கின் ஞானம் உட்பிரிவுகள்நூல் சீராக்கின் ஞானம் ஆதாரங்கள்நூல் சீராக்கின் ஞானம்இணைத் திருமுறை நூல்கள்கத்தோலிக்க திருச்சபைபழைய ஏற்பாடுவிவிலிய இறை ஏவுதல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலம்பகம் (இலக்கியம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நெல்லியாளம்முடக்கு வாதம்செயற்கை நுண்ணறிவுகொடைக்கானல்வெ. இராமலிங்கம் பிள்ளைநவதானியம்நீக்ரோசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மருத்துவம்தமிழர் நெசவுக்கலைதிருநங்கைராசாத்தி அம்மாள்ஹர்திக் பாண்டியாரவிச்சந்திரன் அசுவின்உன்னாலே உன்னாலேசிதம்பரம் மக்களவைத் தொகுதிதேவாரம்ம. கோ. இராமச்சந்திரன்மோசேநாலாயிர திவ்வியப் பிரபந்தம்காதல் (திரைப்படம்)இட்லர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வீரமாமுனிவர்சுற்றுச்சூழல் பாதுகாப்புவேளாண்மைநெசவுத் தொழில்நுட்பம்சங்க இலக்கியம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பயண அலைக் குழல்ரோபோ சங்கர்கூகுள்உத்தரகோசமங்கைவிஜய் ஆண்டனிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்யூதர்களின் வரலாறுதனுசு (சோதிடம்)அக்கி அம்மைஇந்து சமயம்காமராசர்சுடலை மாடன்நாலடியார்மரியாள் (இயேசுவின் தாய்)யாவரும் நலம்வல்லினம் மிகும் இடங்கள்நஞ்சுக்கொடி தகர்வுகருத்தரிப்புமாமல்லபுரம்மண்ணீரல்ஆற்றுப்படைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மேற்குத் தொடர்ச்சி மலைஎஸ். ஜெகத்ரட்சகன்டார்வினியவாதம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்வினோஜ் பி. செல்வம்நவரத்தினங்கள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்வாணிதாசன்அபூபக்கர்அறுபடைவீடுகள்குருவிசயகாந்துகருப்பசாமிபந்தலூர் வட்டம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கிராம ஊராட்சிமார்பகப் புற்றுநோய்ராதிகா சரத்குமார்சினைப்பை நோய்க்குறிதமிழ் மன்னர்களின் பட்டியல்வாய்மொழி இலக்கியம்நானும் ரௌடி தான் (திரைப்படம்)எயிட்சு🡆 More