இணைத் திருமுறை நூல்கள்

இணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) என்னும் பெயரில் அழைக்கப்படுகின்ற விவிலிய நூல்கள் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகக் கத்தோலிக்க திருச்சபையாலும், மரபுவழித் திருச்சபையாலும் கருதப்படுகின்றன.

இணைத் திருமுறை நூல்கள்
தோபியா தம் தந்தை தோபித்து பார்வைபெறச் செய்கிறார்: (இணைத் திருமுறை விவிலிய நூல் பகுதி). ஓவியர்: அகுஸ்து மால்ஸ்ட்ரோம் (1829-1901). காப்பிடம்: பாரிசு.

இணைத் திருமுறை நூல்கள் யாவை?

கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில், பழைய ஏற்பாட்டின் 39 எபிரேய திருமுறை நூல்களோடு இணைக்கப்பட்டுள்ள தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும், எஸ்தர், தானியேல் நூல்களில் காணப்படும் கிரேக்க இணைப்புகளான எஸ்தர் (கிரேக்கம்), தானியேல் (இணைப்புகள்) ஆகியவை இணைத் திருமுறை நூல்கள் என்று பெயர்பெறுகின்றன. இணைத் திருமுறை நூல்கள் என்று பெயர்பெறுகின்றன. இவை எபிரேய விவிலியத்தில் இடம் பெறவில்லை எனினும், செப்துவசிந்தா (Septuaginta) (எழுபதின்மர் மொழிபெயர்ப்பு) எனப்படும் கிரேக்க விவிலியத்தில் மேற்காணும் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

திரெந்து திருச்சங்கம் இணைத் திருமுறை நூல்களை ஏற்றல்

இந்நூல்களின் இறைஏவுதல் பற்றிக் கிறித்தவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு தொடக்கத்திலிருந்தே நிலவிவந்துள்ளது. திரெந்து (Trent) நகரில் கூடிய திருச்சங்கம் (Council of Trent) இவற்றை இறைஏவுதலால் எழுதப்பட்ட திருநூல்கள் என்று கி.பி. 1546இல் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. இதனால் இவை இணைத் திருமுறை நூல்கள் (Deutero-canonical books) எனப் பெயர் பெறுகின்றன.

சீர்திருத்த சபையினர் திருமுறைப் புற நூல்கள் என்று அழைத்தல்

திருச்சபைச் சீர்திருத்தத்தில் ஈடுபட்ட மார்ட்டின் லூத்தர் இந்நூல்களை விவிலியத்தைச் சேர்ந்த நூல்களாக ஏற்றுக்கொள்ளவில்லை; எனினும் இவை பயனுள்ளவை, படிக்கத் தகுந்தவை என்று ஒப்புக்கொண்டார். 1534இல் தாம் வெளியிட்ட செருமானிய விவிலிய மொழிபெயர்ப்பில் இவற்றைப் பழைய ஏற்பாட்டின் இறுதியில் "திருமுறைப் புற நூல்கள்" (Apocrypha) என்னும் தலைப்பின்கீழ் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வெளிவந்த பல மொழிபெயர்ப்புகளும் இம்முறையையே பின்பற்றின.

கிறித்தவ ஒன்றிப்பு முயற்சிகள்

சீர்திருத்தச் சபைகளின் அமைப்பான விவிலியச் சங்கங்களின் இணையமும் கத்தோலிக்கத் திருச்சபையின் கிறித்தவ ஒன்றிப்புச் செயலகமும் இணைந்து பொது விவிலிய மொழிபெயர்ப்புக்குரிய விதிமுறைகளை 1968இல் வெளியிட்டன. பின் அவ்விதிமுறைகளை 1987இல் திருத்தியமைத்தன. இப்பொழுது வெளிவந்துகொண்டிருக்கும் பொது விவிலிய மொழிபெயர்ப்புகள் எல்லாமே மேற்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அவற்றின்படி இணைத் திருமுறை நூல்களைப் புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு முன்னர் அச்சிடும் வழக்கம் 1995இல் வெளியிடப்பட்ட திருவிவிலியம் (இணைத் திருமுறையுடன்) (பொது மொழிபெயர்ப்பு) என்னும் தமிழ்ப் பெயர்ப்பில் பின்பற்றப்பட்டுள்ளது.

கிரேக்க மூல பாடம்

முனைவர் ஆல்பிரட் ரால்வ்ஸ் (Alfred Rahlfs) என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, 1935இல் செருமானிய விவிலியச் சங்கத்தால் ஸ்டுட்கார்ட் நகரில் வெளியிடப்பட்ட செப்துவசிந்தா கிரேக்கப் பதிப்பு இப்பகுதிக்கு மூலபாடமாய் அமைகிறது.

இணைத் திருமுறை நூல்களின் பயன்

கிறித்து பெருமான் தோன்றுவதற்குச் சற்றே முற்பட்ட யூத வரலாறு, வாழ்க்கை முறை, சிந்தனை, சமயப் பழக்கவழக்கங்கள் முதலியன பற்றிப் பல செய்திகள் இந்நூல்களிலிருந்து கிடைப்பதால், வரலாற்று இயேசுவைப் புரிந்துகொள்ள இவை பெரிதும் துணைபுரிகின்றன. இதனால் பிரிவு மனப்பான்மையை விடுத்துத் திறந்த உள்ளத்தோடு இந்நூல்களைப் படிக்கும் நிலை இன்று உருவாகிவருகிறது.

மேற்கோள்கள்

Tags:

இணைத் திருமுறை நூல்கள் யாவை?இணைத் திருமுறை நூல்கள் திரெந்து திருச்சங்கம் இணைத் திருமுறை நூல்களை ஏற்றல்இணைத் திருமுறை நூல்கள் சீர்திருத்த சபையினர் திருமுறைப் புற நூல்கள் என்று அழைத்தல்இணைத் திருமுறை நூல்கள் கிறித்தவ ஒன்றிப்பு முயற்சிகள்இணைத் திருமுறை நூல்கள் கிரேக்க மூல பாடம்இணைத் திருமுறை நூல்கள் இணைத் திருமுறை நூல்களின் பயன்இணைத் திருமுறை நூல்கள் மேற்கோள்கள்இணைத் திருமுறை நூல்கள்கத்தோலிக்க திருச்சபைபழைய ஏற்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திரிசாஅறுபடைவீடுகள்சச்சின் டெண்டுல்கர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021திருமால்பஞ்சபூதத் தலங்கள்ஆத்திசூடிசச்சின் (திரைப்படம்)புனித ஜார்ஜ் கோட்டைபழமொழி நானூறுகலித்தொகைஇந்திய தேசிய காங்கிரசுதிருநெல்வேலிஇசைஎயிட்சுஆல்நம்மாழ்வார் (ஆழ்வார்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சங்க காலப் புலவர்கள்முத்துலட்சுமி ரெட்டிகொன்றைஆண் தமிழ்ப் பெயர்கள்மரவள்ளிகாயத்ரி மந்திரம்பஞ்சாங்கம்அங்குலம்இதயம்திருவாசகம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஆங்கிலம்பல்லவர்இரைச்சல்விஜய் வர்மாபால் (இலக்கணம்)வியாழன் (கோள்)விருமாண்டிநீர்குடும்பம்ஜன கண மனஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இன்ஸ்ட்டாகிராம்செஞ்சிக் கோட்டைபிள்ளையார்ஆசிரியர்கில்லி (திரைப்படம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்கருத்துகஞ்சாஐக்கிய நாடுகள் அவைதமிழ் மன்னர்களின் பட்டியல்யாதவர்காடுவெட்டி குருமக்களவை (இந்தியா)இளங்கோவடிகள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசின்ன வீடுபட்டா (நில உரிமை)குகேஷ்தமிழர் அளவை முறைகள்பெரியாழ்வார்மதுரை நாயக்கர்விருத்தாச்சலம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு அமைச்சரவைதமிழ்நாட்டின் நகராட்சிகள்நீக்ரோகாசோலைகம்பராமாயணம்தேவயானி (நடிகை)நிதி ஆயோக்வெ. இறையன்புஆய்த எழுத்துதேஜஸ்வி சூர்யாசிறுத்தைகம்பர்புலிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்🡆 More