சிறீ கங்காநகர்

சிறீ கங்காநகர் இந்திய மாநிலமான ராஜஸ்தானின் மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.

இதன் எல்லைகளாக அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள், இந்திய-பாக்கித்தானின் சர்வதேச எல்லை என்பன காணப்படுகின்றன. இது சிறீ கங்கநகர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இந்நகரம் மகாராஜா சிறீ கங்கா சிங் பகதூர் என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது. இது "ராஜஸ்தானின் உணவுக் கூடை" என்றும் “விவசாயிகளின் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

சிறீ கங்காநகர் மாவட்டத்தின் புவியியல் இருப்பிடம் அட்சரேகை 28.4 முதல் 30.6 வரையிலும், தீர்க்கரேகை 72.2 முதல் 75.3 வரையிலும் உள்ளது. சிறீ கங்காநகரின் மொத்த பரப்பளவு 11,154.66 கிமீ² அல்லது 1,115,466 ஹெக்டேர் ஆகும். இது கிழக்கில் அனுமான்காட் மாவட்டத்தால்சூழப்பட்டுள்ளது. (அனுமான்காட் மாவட்டம் 1994 சூலை 12 அன்று செதுக்கப்பட்டது) தெற்கே பிகானேர் மாவட்டமும் , மேற்கில் பாகிஸ்தானின் பஞ்சாபின் பகவல்நகர் மாவட்டமும் , வடக்கே பஞ்சாபும் அமைந்துள்ளன.

காலநிலை

சிறீ கங்காநகரின் கோடைக் கால வெப்பநிலை 50 ° செல்சியஸ் மற்றும் குளிர்கால வெப்பநிலை 0 ° செல்சியஸ் வரை குறைகிறது. சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 200 மிமீ (7.9 அங்குலம்) ஆகும். கோடையில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 50 °C ஆகவும், குளிர்காலத்தில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை -2.8. C ஆகவும் இருக்கும்.

புள்ளிவிபரங்கள்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் மக்கட் தொகை 1,969,520 ஆகும். இது இந்தியாவின் 640 மாவட்டங்களில் 235 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு (460 / சதுர மைல்) 179 மக்கட் தொகை அடர்த்தி உள்ளது.

2001-2011 தசாப்தத்தில் அதன் மக்கட் தொகை வளர்ச்சி விகிதம் 10.06% ஆகும். கங்காநகர் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 947 பெண்களின் பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது.  மக்கள் தொகையில் 52.99% ஆண்களும், பெண்கள் 47.01% பேரும் உள்ளனர். கங்கநகர் சராசரி கல்வியறிவு விகிதம் 74.25% வீதமாகும். இது தேசிய சராசரியான 73.8% வீதத்தை ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 84.33% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 71.37% வீதமாகவும் காணப்படுகின்றது.

கங்காநகரில் 13% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள். மக்கட் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இந்து , சமண மற்றும் சீக்கியர்கள் ஆவார்கள். பஞ்சாப் மாநிலத்திற்கு அருகாமையில் இருப்பதால் இந்த நகரம் பஞ்சாபி கலாச்சாரத்தின் செல்வாக்கைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

கும்பல் கால்வாயைக் கொண்டுவந்த மகாராஜா கங்கா சிங்கின் முயற்சியால் பாலைவன நிலம் பசுமை நகரமாக மாற்றப்பட்டது. இது பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் அதிகப்படியான நீரை இப்பகுதிக்கு கொண்டு செல்கிறது. கங்கநகரை "ராஜஸ்தானின் உணவுக் கூடை" என்று அழைக்கப்படும் மாவட்டமாக மாற்றுகிறது.

நகரத்தின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் முக்கிய பயிர்கள் கோதுமை, கடுகு மற்றும் பருத்தி என்பனவாகும்.

ஸ்ரீ கங்கநகர் மாவட்டத்தில் உள்ள தொழில்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. பருத்தி வித்து நீக்கல் மற்றும் அழுத்தும் தொழிற்சாலைகள், கடுகு எண்ணெய் ஆலைகள், கோதுமை மாவு ஆலைகள், ராஜஸ்தான் மாநில கங்காநகர் சர்க்கரை ஆலைகள் (ராயல் ஹெரிடேஜ் மதுபானங்களுக்கு பெயர் பெற்றவை), என்பன காணப்படுகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள் ஸ்ரீ கங்காநகர் நகரத்திலும் அதைச் சுற்றியும் உள்ளன.

சான்றுகள்

Tags:

சிறீ கங்காநகர் அமைவிடம்சிறீ கங்காநகர் காலநிலைசிறீ கங்காநகர் புள்ளிவிபரங்கள்சிறீ கங்காநகர் பொருளாதாரம்சிறீ கங்காநகர் சான்றுகள்சிறீ கங்காநகர்அரியானாஇந்தியாபஞ்சாப் (இந்தியா)ராஜஸ்தான்ஸ்ரீ கங்காநகர் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஷால்கா. ந. அண்ணாதுரைசெக்ஸ் டேப்வேலு நாச்சியார்அப்துல் ரகுமான்ஜன கண மனபூலித்தேவன்விலங்குதமிழச்சி தங்கப்பாண்டியன்கம்பர்கலாநிதி மாறன்யாழ்முதல் மரியாதைவணிகம்பெயர்ச்சொல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கருச்சிதைவுரா. பி. சேதுப்பிள்ளைவேற்றுமைத்தொகைபொருநராற்றுப்படைகள்ளழகர் கோயில், மதுரைபரணர், சங்ககாலம்சித்த மருத்துவம்உடன்கட்டை ஏறல்மாற்கு (நற்செய்தியாளர்)ஆதிமந்திஇந்திரா காந்திஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மங்காத்தா (திரைப்படம்)ஐங்குறுநூறுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்உவமையணிதெருக்கூத்துபகத் பாசில்அகத்தியம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திராவிசு கெட்வைகைகிருட்டிணன்பாரதிதாசன்பெண்களின் உரிமைகள்அகத்திணைகாமராசர்விஜயநகரப் பேரரசுதேவநேயப் பாவாணர்திருவோணம் (பஞ்சாங்கம்)ரஜினி முருகன்இந்திய தேசிய சின்னங்கள்சைவத் திருமணச் சடங்குதாஜ் மகால்தமிழ் மன்னர்களின் பட்டியல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சங்கம் (முச்சங்கம்)பரிபாடல்கருப்பை நார்த்திசுக் கட்டிநல்லெண்ணெய்ஜோக்கர்முல்லை (திணை)ஏப்ரல் 26சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஆசிரியப்பாபரதநாட்டியம்தொலைக்காட்சிசச்சின் (திரைப்படம்)மார்க்கோனிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கார்லசு புச்திமோன்சாத்துகுடிதமிழ் நீதி நூல்கள்ஜெயகாந்தன்நாயன்மார் பட்டியல்செயங்கொண்டார்இரட்டைமலை சீனிவாசன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கம்பராமாயணம்ஏலாதிபதிற்றுப்பத்துஆய்வு🡆 More