சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல்

சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் என்பது அயனமண்டலத் தாழமுக்கம், அயனமண்டலப் புயல் என்பவற்றைவிட வீரியம் கூடி சூறாவளியாக மாறும் புவியின் மேற்கு அரைக்கோளத்தில் ஏற்படும் அயனமண்டல சுழல்காற்றுகளைத் தரப்படுத்தும் முறைமையாகும்.

சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல்
தரம் காற்றின் வேகம் Storm surge
mph
(km/h)
அடி
(மீ)
5 ≥156
(≥250)
>18 (>5.5)
4 131–155
(210–249)
13–18
(4.0–5.5)
3 111–130
(178–209)
9–12
(2.7–3.7)
2 96–110
(154–177)
6–8
(1.8–2.4)
1 74–95
(119–153)
4–5
(1.2–1.5)
மேலதிக தரங்கள்
அயனமண்டல
புயல்
39–73
(63–117)
0–3
(0–0.9)
அயனமண்டல
தாழமுக்கம்
0–38
(0–62)
0
(0)

இம்முறைமை சூறாவளிகளை அவற்றின் காற்றின் வேகங்களைக் கொண்டு தரப்படுத்துகிறது. இத்தரப்படுத்தலின் முக்கிய நோக்கம் சூறாவளி தரைத்தட்டினால் ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கு, காற்றினால் ஏற்படும் சேதங்களை முன்னதாகவே அறிந்து கொள்வதாகும். சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறை அத்திலாந்திக் பெருங்கடலிலும், பன்னாட்டு நேரக் கோட்டுக்கு மேற்காக வட பசி்பிக் பெருங்கடலிலும் ஏற்படும் சூறாவளிகளை தரப்படுத்த மாத்திரமே பயனபடுத்தப்படுகிறது. ஏனைய பகுதிகள் தமக்கான சூறாவளி தரப்படுத்தல் முறைகளைக் கொண்டுள்ளன.

தரங்கள்

சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறைமையின் கீழ் சூறாவளிகள் மொத்தம் ஐந்து தரங்களாக பிரிக்கப்படுகின்றன.

தரம் 1

தரம் 1
காற்றின் வேகம் 33–42 m/s 64–82 kt
119–153 km/h 74–95 mph
புயல் வெள்ளம் 1.2–1.5 மீ 4–5 அடி
மைய அமுகம் 980 mbar 28.94 inHg

தரம் 1 புயல்கள் கட்டிடங்களுக்கு பெறிய அளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துவது இல்லை, இருப்பினும் நகரக்கூடிய வீடுகளுக்கும் மரங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். கரையோரங்களில் சிறிய வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்துவதோடு சிறிய துறைமுகங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

தரம் 2

தரம் 2
காற்றின் வேகம் 43–49 m/s 83–95 kt
154–177 km/h 96–110 mph
புயல் வெள்ளம் 1.8–2.4 மீ 6–8 அடி
மைய அமுகம் 965–979 mbar 28.50–28.91 inHg

இத்தரத்திலான புயல்கள் கூரைகள், கதவுகள், யன்னல்கள் போன்ன்றவற்றுக்கு சேதம் விளைவிக்க வல்லவை. தாவரங்கள், நடமாடும் விடுகள், பெயர் பலகைகள், சிறிய துறைமுகங்கள், போன்றவற்றுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படலாம்.

தரம் 3

தரம் 3
காற்றின் வேகம் 50–58 m/s 96–113 kt
178–209 km/h 111–130 mph
புயல் வெள்ளம் 2.7–3.7 மீ 9–12 அடி
மைய அமுகம் 945–964 mbar 27.91–28.47 inHg

இத்தரத்திலான அல்லது இதனைவிட வீரியம் கூடிய சூறாவளிகள் முக்கிய சூறாவளிகள் என அழைக்கப்படுகின்றன. இச்சூறாவளிகள் சிறிய வீடுகளுக்கு அவற்றின் அமைப்பிற்கு் சேதங்களை ஏற்படுத்தக் கூடியவையாகும். நகரும் வீடுகள் பொதுவாக அழிக்கப்படுகின்றன. கரையோரத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சிறிய கட்டிடங்களை அழிக்கும் மேலும் பெரிய கட்டிடங்கள் வெள்ளத்தில் மிதக்கும் பொருட்கள் காரணமாக சேமாகும். தரைத்தோற்றத்தைப் பொறுத்து வெள்ளப்பெருக்கு உள் நோக்கி நகரலாம்.

தரம் 4

தரம் 4
காற்றின் வேகம் 59–69 m/s 114–135 kt
210–249 km/h 131–155 mph
புயல் வெள்ளம் 4.0–5.5 மீ 13–18 அடி
மைய அமுகம் 920–944 mbar 27.17–27.88 inHg

இத்தரத்திலான சூறாவளிகள் தடுப்புச் சுவர்களை சேதமாக்க வல்லவையாகும். மேலும் இவை கூரைகளை முற்றாக அழிக்கக் கூடியவையாகும். கரயோரங்களில் பெரிய மண்ணரிப்பு ஏற்படும். வெள்ளம் தரை நோக்கி நகரலாம்.

இத்தரத்திலான சூறாவளிகள் மக்களடத்தி கூடிய பகுதிகளைத் தாக்கும் போது பாரிய சேதங்கள் ஏற்படுகின்றது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆகக் கூடுதலான உயிர் சேதங்கள் ஏற்படுத்திய சூறாவளி கால்வெஸ்டன், 1900 ஒரு தரம் 4 இலான சூறாவளியாகும்.

தரம் 5

தரம் 5
காற்றின் வேகம் ≥70 m/s ≥136 kt
≥250 km/h ≥156 mph
புயல் வெள்ளம் ≥5.5 மீ ≥19 அடி
மைய அமுகம் <920 mbar <27.17 inHg

இதுவே சபீர் சிம்சன் சூறாவளி தரப்படுத்தலில் உயர்வான தரமாகும். இத்தரத்திலான சூறாவளிகள் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் கூரைகளை முற்றாக சேதமாக்கக் கூடியவையாகும். சில கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படுவதோடு சிறிய கட்டிடங்கள் காற்றில் எடுத்துச் செல்லப்படலாம். வெள்ளப்பெருக்கு கரையோரக் கட்டிடங்களின் கீழ் மாடிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும். பாரிய அளவிலான மக்கள் அகதிகளாக வாய்ப்புண்டு.

இத்தரத்திலான சூறாவளிகள் மிக நாசகாரமானவை.சூறாவளி ஃவீலிக்ஸ் (2007),சூறாவளி டீன் (2007) என்பவை இரண்டு உதாரணங்களாகும்.

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

Tags:

சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் தரங்கள்சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் ஆதாரங்கள்சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் வெளியிணைப்புகள்சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல்அத்திலாந்திக் பெருங்கடல்பசிபிக் பெருங்கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆதலால் காதல் செய்வீர்நீதிக் கட்சிதிருப்போரூர் கந்தசாமி கோயில்அருந்ததியர்புனித வெள்ளிஇலக்கியம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகிரிமியா தன்னாட்சிக் குடியரசுபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகோயில்கலிங்கத்துப்பரணிமீரா சோப்ராஅணி இலக்கணம்நாடாளுமன்ற உறுப்பினர்மீன்அல் அக்சா பள்ளிவாசல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ராதாரவிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)விவிலிய சிலுவைப் பாதைமதுராந்தகம் தொடருந்து நிலையம்ம. கோ. இராமச்சந்திரன்குணங்குடி மஸ்தான் சாகிபுதங்கர் பச்சான்மகேந்திரசிங் தோனிஉயிர்மெய் எழுத்துகள்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்பத்துப்பாட்டுஅகமுடையார்திதி, பஞ்சாங்கம்தி டோர்ஸ்வாணிதாசன்கம்பர்புகாரி (நூல்)சடுகுடுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆ. ராசாவட சென்னை மக்களவைத் தொகுதிசூல்பை நீர்க்கட்டிதமிழக மக்களவைத் தொகுதிகள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நிதி ஆயோக்மலையாளம்திருவிளையாடல் புராணம்வேற்றுமையுருபுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இசுலாமிய நாட்காட்டிஇயேசுகருக்காலம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மாமல்லபுரம்பழனி பாபாமனித மூளைகல்லீரல் இழைநார் வளர்ச்சிமுகம்மது நபிமுதலாம் உலகப் போர்சிலுவைப் பாதைகுருதி வகைகுடும்பம்சு. வெங்கடேசன்வன்னியர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சூர்யா (நடிகர்)கேரளம்இராவண காவியம்மக்களவை (இந்தியா)முல்லைப்பாட்டுசத்குருமூசாஆனைக்கொய்யாமுதுமொழிக்காஞ்சி (நூல்)சுக்ராச்சாரியார்ஆறுமுக நாவலர்மக்களாட்சிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பதினெண்மேற்கணக்குநீரிழிவு நோய்ஆதம் (இசுலாம்)🡆 More