குமணன்

குமணன் சங்ககால மன்னர்.

முதிரம் இவர் நாடு. இவர் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவரைப் பாடியுள்ளனர். இவர் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர். இவரது தம்பி இளங்குமணன்.

யானைப்பரிசில்

குமணன் அரசனாக விளங்கியபோது பெருஞ்சித்திரனார் தன் வறுமை நிலையைக் கூறிக் குமணனிடம் தான் யானைமீது செல்லும் வகையில் பரிசில் தருமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே கொடுத்தான். தன் இல்லம் திரும்பும் வழியில் இளவெளிமான் நாட்டுக்கு வந்து தன் பெருமிதம் தோன்றத் தன் யானையை அவனது காவல்மரத்தில் கட்டிவிட்டு, அவனிடமே சென்று தன் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

வாள் தந்தனன்

குமணனை அவன் தம்பி இளங்குமணன் நாடுகடத்திவிட்டான். குமணன் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தான். குமணனிடம் பரிசில் பெறச் சென்ற புலவர் பெருந்தலைச்சாத்தனார் நிலைமையைத் தெரிந்துகொண்டு காட்டிற்குச் சென்று குமணனைப் பாடினார். புலவருக்குத் தரக் குமணனுக்குத் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை. குமணன் தன் வாளைப் புலவர்க்குக் கொடுத்தான். குமணன் தலையைக் கொண்டுவருவோருக்குத் தக்க பரிசில் வழங்கப்படும் என்று இளங்குமணன் அறிவித்திருந்தான். குமணன் தன் வாளைப் புலவருக்குக் கொடுத்தது, தன் தலையையே வெட்டியெடுத்து எடுத்துச் செல்வதற்காகவே. குமணன் தந்த வாளே தனக்குப் போதும் என்று வாளைமட்டும் எடுத்துக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டி நிகழ்ந்ததைக் கூறினார். இளங்குமணன் புலவர்க்குப் பரிசில் நல்கியிருக்கலாம். அதைக்கொண்டு புலவர் தன் வறுமையைப் போக்கிக்கொண்டிருக்க வேண்டும்.

சான்றடைவு

புறநானூறு தரும் பாடல் வாரியான செய்திகள்

  • குமணன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்.
  • குமணன் மேம்பட்ட குடியில் பிறந்தவர்.
  • நண்பர் சூழ முதிரமலைப் பகுதியில் வாழ்ந்தவர்.
  • மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு மகளிர் மகிழ்வு தர வாழ்ந்து வந்தான். முரசு முழங்கும் அவன் வளமனைக்கு வரும் அவரது குடிமக்கள் பெருஞ்செல்வம் பெற்று மகிழ்ந்தனர். இவரது வாள்-படை மிகவும் பெரியது.
  • இவர் வழங்கும் கொடையானது கொடையைப் பெற்றவர் பிறருக்கெல்லாம் வழங்கி மகிழும் அளவுக்கு மிகுதியாக இருந்தது.
  • அவ்வப்போது பசுமையான கோலை வளைத்துச் செய்துகொண்ட யாழை மீட்டிப் பாடும் வயிரியரின் வறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவர்.
  • பாடுவோருக்கெல்லாம் யானைகளைப் பரிசிலாக வழங்கி மகிழ்ந்தவர் இவர். இவரைப் பெருந்தலைச் சாத்தனார் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்த காலத்தில் பாடினார். அவர் தன் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய்த் தன் தம்பியிடம் கொடுத்து அதன் விலையாக அவன் தரும் பரிசிலைப் பெற்றுக்கொள்ளும்படி வாளைப் புலவருக்கு வழங்கினார்.

சிவாலயம்

குமணன் என்பவர் பழனிமலைத் தொடரினை ஆண்டு வந்த அரசனாவார். இவர் முதிரம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார். இவர் குறுநில மன்னர். கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தலையேழு வள்ளல்களில் ஒருவர் என்பதும் செய்தியாகும். பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே குமணமங்கலம் என்று ஊர் இவரது பெயரில் அழைக்கப்படுகிறது. கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயில் என்பதை இவர் உருவாக்கினார். மன்னர் காசிக்கு சென்று காசி விசுவநாதரை தரிசித்து வந்தார். தன்னுடைய மக்களுக்கும் காசிக்கு சென்று வழிபட முடியாது என்பதால் அங்கிருந்து சிவலிங்கத்தினை பெற்று தன்னுடைய ஊரிலேயே காசிவிசுவநாதருக்கு கோயில் அமைத்தார். அம்மன்னருடைய பெயரே ஊரின் பெயரானது.

இவற்றையும் காண்க

வெளிப் பார்வை

கொங்கு மண்டல சதகம் பாடல் 41

அடிக்குறிப்பு

Tags:

குமணன் யானைப்பரிசில்குமணன் வாள் தந்தனன்குமணன் சான்றடைவுகுமணன் சிவாலயம்குமணன் இவற்றையும் காண்ககுமணன் வெளிப் பார்வைகுமணன் அடிக்குறிப்புகுமணன்இளங்குமணன்கடையெழு வள்ளல்கள்பெருஞ்சித்திரனார்பெருந்தலைச்சாத்தனார்முதிரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பனைஜெ. ஜெயலலிதாபெரியபுராணம்மனித உரிமைபுங்கைதலைவி (திரைப்படம்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்ஆயுள் தண்டனைஅரச மரம்திராவிட இயக்கம்ஜே பேபிபதிற்றுப்பத்துஇதயம்ஏலகிரி மலைதிருமலை நாயக்கர்தங்கராசு நடராசன்திருமூலர்ஆளுமைகுலசேகர ஆழ்வார்பறவைக் காய்ச்சல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வைர நெஞ்சம்ஆய்த எழுத்துமஞ்சும்மல் பாய்ஸ்செயங்கொண்டார்தேவாரம்பூக்கள் பட்டியல்பூப்புனித நீராட்டு விழாஆய்வுதனிப்பாடல் திரட்டுசங்க இலக்கியம்ஒன்றியப் பகுதி (இந்தியா)108 வைணவத் திருத்தலங்கள்கழுகுநிதிச் சேவைகள்சிறுபஞ்சமூலம்வேளாண்மைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)மகரம்கள்ளர் (இனக் குழுமம்)தங்கம்ஆகு பெயர்சித்தர்புறப்பொருள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பெருஞ்சீரகம்புலிஇராமர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சப்தகன்னியர்ஔவையார்மத கஜ ராஜாதேம்பாவணிபாரத ரத்னாகருக்காலம்முடக்கு வாதம்கொடைக்கானல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்வினைச்சொல்வளைகாப்புகுற்றியலுகரம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)பரணி (இலக்கியம்)புதுச்சேரிதமிழர் நிலத்திணைகள்தமிழ்நிதி ஆயோக்மாற்கு (நற்செய்தியாளர்)சுற்றுலாஅக்கினி நட்சத்திரம்திருநெல்வேலிதமிழர் கட்டிடக்கலைஇயற்கைகருக்கலைப்புஇட்லர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அவிட்டம் (பஞ்சாங்கம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்🡆 More