கி. பி. அரவிந்தன்

கி.

பி. அரவிந்தன் (17 செப்டம்பர் 1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

கி. பி. அரவிந்தன்
பிறப்புகிறிஸ்தோபர் பிரான்சிஸ்
(1953-09-17)செப்டம்பர் 17, 1953
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புமார்ச்சு 8, 2015(2015-03-08) (அகவை 61)
பாரிசு, பிரான்சு
இருப்பிடம்பாரிசு
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர், அரசியல் செயற்பாட்டாளர்
பெற்றோர்பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி
வாழ்க்கைத்
துணை
சுமத்திரி
பிள்ளைகள்அங்கதன், மானினி

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவைச் சேர்ந்த பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.

நூல்கள்

  • இனி ஒரு வைகறை (1991) - கவிதை - பொன்னி வெளியீடு
  • கனவின் மீதி (1999) - கவிதை - பொன்னி வெளியீடு
  • பாரிஸ் கதைகள் (2004) - சிறுகதை - அப்பால் தமிழ் வெளியீடு
  • முகம் கொள் (1992) - கவிதை - கீதாஞ்சலி வெளியீடு
  • மிச்சமென்ன சொல்லுங்கப்பா - ஒளி வெளியீடு

மறைவு

கி. பி. அரவிந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார். 1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

தளத்தில்
கி. பி. அரவிந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.

Tags:

கி. பி. அரவிந்தன் நூல்கள்கி. பி. அரவிந்தன் மறைவுகி. பி. அரவிந்தன் மேற்கோள்கள்கி. பி. அரவிந்தன் வெளி இணைப்புக்கள்கி. பி. அரவிந்தன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தருமபுரி மக்களவைத் தொகுதிபால்வினை நோய்கள்மாநிலங்களவைஇரசினிகாந்துசுடலை மாடன்தமிழ் மாதங்கள்வாட்சப்திருவாரூர் தியாகராஜர் கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முத்தரையர்கர்மாபோதி தருமன்இயேசுநாட்டார் பாடல்திருவிளையாடல் புராணம்எஸ். ஜானகிவிசயகாந்துஅபூபக்கர்நபிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பசுமைப் புரட்சிஆண் தமிழ்ப் பெயர்கள்நற்கருணை ஆராதனைஅரவிந்த் கெஜ்ரிவால்ரவிச்சந்திரன் அசுவின்பங்குச்சந்தைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசெக் மொழிராதாரவிசட் யிபிடிஅன்புமணி ராமதாஸ்உஹத் யுத்தம்ஜவகர்லால் நேருபுணர்ச்சி (இலக்கணம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தைப்பொங்கல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தேர்தல் நடத்தை நெறிகள்இடைச்சொல்பஞ்சபூதத் தலங்கள்கோயில்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கெத்சமனிதிருமூலர்வாதுமைக் கொட்டைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தெலுங்கு மொழிவிவிலிய சிலுவைப் பாதை2022 உலகக்கோப்பை காற்பந்துசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பாட்டாளி மக்கள் கட்சிதிதி, பஞ்சாங்கம்திருத்தணி முருகன் கோயில்இடலை எண்ணெய்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பொறியியல்இசுலாம்திருநெல்வேலிசுலைமான் நபிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கிறிஸ்தவச் சிலுவைசிவாஜி கணேசன்கினி எலிவயாகராசப்ஜா விதைகுருதமிழ்நாட்டின் மாவட்டங்கள்முல்லைப்பாட்டுஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஹிஜ்ரத்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தமிழர் நிலத்திணைகள்பசுபதி பாண்டியன்சுப்பிரமணிய பாரதிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)🡆 More