கிரோனா

கிரோனா (Girona) என்பது எசுப்பானியாவில் கட்டலோனியாவில் காணப்படுகின்ற ஒரு நகரமாகும்.

இந்த நகரம் டெர், ஒன்யார், கல்லிகண்ட்ஸ் மற்றும் கோயல் நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி இங்கு 100,266 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் இதே பெயரில் உள்ள மாகாணத்தின் தலைநகரமாகும். கிரோனா பார்சிலோனாவிலிருந்து 99 கிமீ (62 மைல்) வடகிழக்கில் அமைந்துள்ள கட்டலோனியாவின் முக்கிய நகரம் ஆகும்.

காலநிலை

கிரோனா கோப்பனின் காலநிலை வகைப்பாட்டில் ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையை (சி.எஃப்.ஏ) கொண்டுள்ளது. குளிர்ந்த குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைகாலங்களைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை −2 °C (28 °F) க்கு கீழே குறையும். கோடையில், அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக 27–34 °C (81–93 °F) ஆகும். ஆண்டு முழுவதும் மழை சமமாக பரவினாலும், வசந்த காலத்தில் (ஏப்ரல்-மே) மற்றும் இலையுதிர்காலத்தில் (செப்டம்பர்-நவம்பர்) மழை மிகவும் பொதுவானது. சூலை வறண்ட மாதம் ஆகும். குறிப்பாக கோடையில் இடியுடன் கூடிய மழை மிகவும் பொதுவானது.

சுற்றுலாத் தலங்கள்

கிரோனா சுற்றுலாப் பயணிகளுக்கும், பார்சிலோனா நாள் பயணிகளிற்கும் பிரபலமான இடமாகும். பார்சிலோனா சாண்ட்ஸிலிருந்து கிரோனாவிற்கு நாற்பது நிமிடங்களில் விரைவுத் தொடருந்தில் பயணிக்கலாம். பழைய நகரமானது ஒன்யார் நதியின் கிழக்கே கபுச்சின்ஸின் மலையில் அமையப்பெற்றுள்ளது. அதே நேரத்தில் நவீன பகுதி மேற்கில் சமவெளிகளில் அமைந்துள்ளது.

பேராலயம்

தற்போதுள்ள இடத்தில் நிற்கும் பண்டைய பேராலயம், முஸ்லிம்களால் மசூதியாக பயன்படுத்தப்பட்டது. மேலும் அவர்களின் இறுதி வெளியேற்றத்திற்குப் பிறகு முற்றிலும் மறுவடிவமைக்கப்பட்டது.

பழைய கோட்டைகள்

பழைய கோட்டைகள் மற்றொரு பிரபலமான பார்வையாளர்களை கவரக் கூடிய தலங்களாகும். வரலாற்று ரீதியாக நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக படையெடுப்பாளர்களிடமிருந்து கிரோனாவை பாதுகாப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பழைய நகரத்தின் நகரச் சுவர் கிமு 1 ஆம் நூற்றாண்டில் ரோமானிய காலத்தில் கட்டப்பட்ட ஒரு முக்கியமான இராணுவ கட்டுமானமாகும்.

சாண்ட் பெரே டி கல்லிகண்ட்ஸ்

சாண்ட் பெரே டி கல்லிகன்ட்ஸின் பெனடிக்டைன் தேவாலயம் ஆரம்பகால உரோமானிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அக்காலத்தில் இருந்தே புனித டேனியலின் மடாலயம் உள்ளது .

விளையாட்டு

தொழில்முறை ஈருருளி ஓட்டுதல் இங்கு பிரபலமானதாகும். ஈருருளி ஓட்டுநர்கள் பயிற்சிகளை நகரத்திற்கு வெளியே மேற்கொள்கிறார்கள். இது சிறந்த பயிற்சி நிலப்பரப்பை வழங்குகிறது.

கால்பந்து விளையாட்டும் பிரபலமானது. கிரோனா எப்சி எனப்படும் உள்ளூர் கால்பந்து கழகம் காணப்படுகின்றது.

இந்த நகரத்தில் எசுப்பானியாவின் மிக முக்கியமான அணியான ரோலர் ஹாக்கி அணி உள்ளது.

போக்குவரத்து

பேருந்துகள்

நகரத்தில் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் விரிவான நகர்ப்புற பேருந்து சேவை உள்ளது. கிரோனா மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களுக்கான நீண்ட தூர பேருந்து சேவைகளும் உண்டு.

தொடருந்து

கிரோனாவின் பழைய நகரிற்கு மேற்கே புதிய தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பார்சிலோனாவிலிருந்து போர்ட்பூ மற்றும் பிரெஞ்சு எல்லைக்கு வழக்கமான தொடருந்துகள் சேவையில் உள்ளன. பாரிஸ், மார்சேய், துலூஸ் மற்றும் பிகியூரெஸ் முதல் பார்சிலோனா வரை கிரோனா ஒரு முக்கியமான நிறுத்துமிடம் ஆகும்.

விமான நிலையம்

நகரத்தின் விமான நிலையமான கிரோனா-கோஸ்டா பிராவா நகர மையத்திற்கு தெற்கே 10 கிலோமீற்றர் (6 மைல்) தொலைவில் உள்ளது.

சான்றுகள்

Tags:

கிரோனா காலநிலைகிரோனா சுற்றுலாத் தலங்கள்கிரோனா விளையாட்டுகிரோனா போக்குவரத்துகிரோனா சான்றுகள்கிரோனாஎசுப்பானியாபார்செலோனா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இட்லர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பகிர்வுதமிழர் கப்பற்கலைபூலித்தேவன்இந்து சமயம்நாடார்உடுமலை நாராயணகவிநீர்நாடகம்பூக்கள் பட்டியல்கூகுள்தன்யா இரவிச்சந்திரன்சிவாஜி கணேசன்கருப்பைவிண்ணைத்தாண்டி வருவாயாகோயில்யாழ்சங்க காலப் புலவர்கள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தேவாங்குஆளுமைதிருப்பதிதெருக்கூத்துஇந்தியன் பிரீமியர் லீக்செப்புஅங்குலம்இல்லுமினாட்டிவே. செந்தில்பாலாஜிசதுரங்க விதிமுறைகள்நீ வருவாய் எனவைர நெஞ்சம்ர. பிரக்ஞானந்தாதிருவரங்கக் கலம்பகம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கன்னி (சோதிடம்)இளங்கோவடிகள்அக்கிஹரி (இயக்குநர்)பாரத ரத்னாசேமிப்புஇசைமானிடவியல்அத்தி (தாவரம்)சென்னை சூப்பர் கிங்ஸ்புதுக்கவிதைமகேந்திரசிங் தோனிதமிழ்த்தாய் வாழ்த்துபால் (இலக்கணம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)பொன்னுக்கு வீங்கிதமிழக வெற்றிக் கழகம்கருப்பசாமிஉலா (இலக்கியம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்யானைஎங்கேயும் காதல்கேரளம்சாகித்திய அகாதமி விருதுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்நிணநீர்க்கணுமழைதமிழ் விக்கிப்பீடியாஅழகர் கோவில்தமிழிசை சௌந்தரராஜன்காதல் கொண்டேன்சைவத் திருமணச் சடங்குஇமயமலைஇந்தியாவில் இட ஒதுக்கீடுகர்மாமுலாம் பழம்தொலைக்காட்சிவெண்பாஇயேசு காவியம்பெ. சுந்தரம் பிள்ளைசுற்றுச்சூழல் பாதுகாப்புவிவேகானந்தர்முல்லைப் பெரியாறு அணைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்🡆 More