கிராமிய நகராட்சி மன்றம்: நேபாள

கிராமிய நகராட்சி மன்றம், (Gaunpalika or gaupalika (நேபாளி: गाउँपालिका) (Rural municipality), நேபாளத்தில் 1 சூன் 2017 முதல் புதிதாக துவக்கப்பட்ட கீழ்மட்ட உள்ளாட்சி நிர்வாக அமைப்பாகும்.

கிராமிய நகராட்சி மன்றம்: நோக்கம், வரலாறு, அமைப்பு
நேபாள கிராமிய நகராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம்

ஏற்கனவே 1990 ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டிருந்த கிராம வளர்ச்சிக் குழுக்களை 10 மார்ச் 2017ல் கலைத்து விட்டு, அதற்கு பதிலாக, நேபாள கூட்டமைப்பு விவகாரங்கள் மற்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்கான அமைச்சகம், 1 சூன் 2017 முதல் கிராமிய நகராட்சி மன்றங்களைத் துவக்கியது.

தற்சமயம் நேபாளத்தில் செயல்படும் 744 உள்ளாட்சி அமைப்புகளில், கிராமப்புறங்களில் 481 கிராமிய நகராட்சி மன்றங்களும், நகரபுறங்களில் மாநகராட்சி, துணை-மாநகராட்சிகள், நகராட்சிகள் என 243 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளது.

நோக்கம்

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த கிராம வளர்ச்சிக் குழுக்கள் போன்றே கிராமிய நகராட்சி மன்றங்கள் செயல்படும். கூடுதல் பொறுப்பாக கேளிக்கை வரி, வீட்டு வரி, தொழில் மற்றும்வணிக நிறுவனங்கள் நடத்துவதற்கான வரி போன்ற வரிகளை நேரடியாக வசூலித்துக் கொள்ளும் உரிமை கிராமிய நகராட்சி மன்றங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் கிராமிய நகராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வரலாறு

1990க்கு முன்னர் கிராமப் பஞ்சாயத்து எனச் செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்புகளை, கிராம வளர்ச்சி குழ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

10 மார்ச் 2017 அன்று கிராம வளர்ச்சி குழுக்கள் கலைக்கப்பட்டு,கூடுதல் அதிகாரங்களுடன் 1 சூன் 2017 முதல் கிராமிய நகராட்சி மன்றங்கள் துவக்கப்பட்டது.

அமைப்பு

கிராமிய நகராட்சி மன்றத்திற்கு ஒரு தலைவர் இருப்பர். 10 மார்ச் 2017ல் நேபாள அரசு 744 தலைவர்களை நியமித்தது.

கிராமிய நகராட்சி மன்றங்களின் ஆண்டு வருவாய், குறைந்தது 10 இலட்சம் நேபாள ரூபாய் கொண்டிருக்கும். கிராமிய நகராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கிராமிய நகராட்சி மன்றத் தேர்தல்கள்

7 நேபாள மாநிலங்களில் உள்ள 481 கிராமிய நகராட்சிகளின் தலைவர், வார்டு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

கிராமிய நகராட்சி மன்றம் நோக்கம்கிராமிய நகராட்சி மன்றம் வரலாறுகிராமிய நகராட்சி மன்றம் அமைப்புகிராமிய நகராட்சி மன்றம் கிராமிய நகராட்சி மன்றத் தேர்தல்கள்கிராமிய நகராட்சி மன்றம் இதனையும் காண்ககிராமிய நகராட்சி மன்றம் மேற்கோள்கள்கிராமிய நகராட்சி மன்றம்நேபாளம்நேபாளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மு. க. ஸ்டாலின்முத்தரையர்சிவம் துபேஸ்டார் (திரைப்படம்)தசாவதாரம் (இந்து சமயம்)வ. வே. சுப்பிரமணியம்சீவகன்புனித யோசேப்புகொடைக்கானல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முதுமொழிக்காஞ்சி (நூல்)பிரேமலுபுற்றுநோய்பனிக்குட நீர்இந்தியன் பிரீமியர் லீக்அழகர் கிள்ளை விடு தூதுமுலாம் பழம்மூதுரைஎட்டுத்தொகை தொகுப்புமெய்க்கீர்த்திசிறுபஞ்சமூலம்நாலடியார்நெய்தல் (திணை)புதுமைப்பித்தன்ஜவகர்லால் நேருகணினிவெந்து தணிந்தது காடுஆங்கிலம்விக்ரம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)மகேந்திரசிங் தோனிமு. மேத்தாகாடுவெட்டி குருஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கிராம ஊராட்சிஏப்ரல் 30திருவோணம் (பஞ்சாங்கம்)நெல்லிபெயர்ச்சொல்விஷால்அம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்மலக்குகள்சினைப்பை நோய்க்குறிவிளையாட்டுசின்னம்மைபண்பாடுபிரபு (நடிகர்)பியர்குருதி வகைஆப்பிள்வட்டாட்சியர்யானையின் தமிழ்ப்பெயர்கள்அன்னம்சங்க காலப் புலவர்கள்வெப்பநிலைகபிலர் (சங்ககாலம்)சஞ்சு சாம்சன்நெசவுத் தொழில்நுட்பம்குறிஞ்சிப் பாட்டுகொன்றை வேந்தன்உரிச்சொல்உலா (இலக்கியம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வைசாகம்ஔவையார்அங்குலம்மெய்ப்பொருள் நாயனார்குருதிச்சோகைசெயற்கை நுண்ணறிவுதிருவிழாமருது பாண்டியர்வியாழன் (கோள்)ஆந்திரப் பிரதேசம்தொல்காப்பியப் பூங்காஅழகிய தமிழ்மகன்தேம்பாவணி🡆 More