கிம் பூம்

கிம் சாங் பூம் (ஆங்கில மொழி: Kim Sang-bum, 김상범) (பிறப்பு: ஜூலை 7, 1989) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், வடிவழகர் மற்றும் பாடகர் ஆவார்.

இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் (2009), டேல் ஆஃப் தி நைன் டெயில்டில் (2020) லா இசுகூல் (2021), கோஸ்ட் டாக்டர் (2022) மற்றும் டேல் ஆஃப் த நைன் டெயில்ட் 1938 (2023) போன்ற தொடரிகளில் நடித்துள்ளார்.

கிம் பூம்
கிம் பூம்
பிறப்புகிம் சாங் பூம்
சூலை 7, 1989 (1989-07-07) (அகவை 34)
சியோல்
தென் கொரியா
தேசியம்தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-இன்று வரை
உயரம்1.81 m (5 அடி 11 அங்)
வலைத்தளம்
kingkongent.com/star/kbum/

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

கிம் சாங் பூம் என்பவர் ஜூலை 7, 1989 இல், தென் கொரியாவின் சியோலில் பிறந்தார். இவர் சுங்-ஆங் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் பயின்றார்.

தொழில்

கிம் "சர்வைவல் ஸ்டார் ஆடிஷனில்" சேர்ந்தார், மேலும் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் 6வது இடத்தைப் பிடித்தார். இருப்பினும், அவர் 20 வயதிற்குட்பட்டவர் என்பதால், அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சி இவருக்கு பல வாய்ப்புகளைத் கொடுத்தது, மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களில் பல பாத்திரங்களில் நடிக்க வழிவகுத்தது. இவர் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஹை கிக்! என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவரது முதல் ஒலித்தட்டு ஆல்பமான 'ஹோம்டவுனை' ஜூன் 20, 2012 அன்று வெளியானது. அத்துடன் இவரது முதல் தனி இசை நிகழ்ச்சியான 'கிம் பீம் ஜப்பான் லைவ் 2012', டோக்கியோவின் ஷினகாவா பிரின்ஸ் விடுதியில் நிகழ்ந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் பிப்ரவரி 2012 இல், ஜெரிபிசி தொலைக்காட்சியில் நாடகமான படம் படம் என்ற தொடரில் அவரது பாத்திரத்திற்காக பயிற்சியின் பின்னர் அவர் அனுபவித்த வியத்தகு எடை இழப்பு காரணமாக அவர் முதுமை மூட்டழற்சி வலியால் அவதிப்படுவதாக கிம்ஸின் நிறுவனம் அறிவித்தது.

கிம் சக நடிகர்களான லீ மின் ஹோ மற்றும் யுங் இல்-வூ ஆகியோருடன் நெருங்கிய நண்பர் ஆவார்.

உறவுமுறை

இவர் நவம்பர் 1, 2013 அன்று, 'காடஸ் ஆஃப் ஃபயர்' என்ற தொடரில் இவருடன் நடித்த சக நடிகையான மூன் கியூன்-யங்குடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. பின்னர் மே 15, 2014 அன்று, அவர்கள் தங்கள் 7 மாத நீண்ட உறவை முறித்துக் கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. இரு நடிகர்களின் நிறுவங்களும் செய்தியை உறுதிப்படுத்தின: "அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு பிரிந்துவிட்டனர், ஆனால் நல்ல நண்பர்களாகவும் ஆதரவான சக ஊழியர்களாகவும் இருக்க முடிவு செய்துள்ளனர்".

இவர் மார்ச் 29, 2018 அன்று, நடிகை ஓ இயோன்-சியோவுடன் கிம் உறவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், சில மாத டேட்டிங்கிற்குப் பிறகு அவர்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கிம் பூம் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விகிம் பூம் தொழில்கிம் பூம் தனிப்பட்ட வாழ்க்கைகிம் பூம் மேற்கோள்கள்கிம் பூம் வெளி இணைப்புகள்கிம் பூம்ஆங்கில மொழிதென் கொரியாநடிகர்பாடுதல்பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்வடிவழகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அயோத்தி இராமர் கோயில்ஆசியாநற்கருணை ஆராதனைவிஜய் ஆண்டனிஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தொல்காப்பியம்மதராசபட்டினம் (திரைப்படம்)வட்டாட்சியர்சுடலை மாடன்மூவேந்தர்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபால்வினை நோய்கள்முடக்கு வாதம்இலவங்கப்பட்டைராதிகா சரத்குமார்நவக்கிரகம்மகாபாரதம்விந்துசின்னம்மைஅபுல் கலாம் ஆசாத்ம. கோ. இராமச்சந்திரன்பூலித்தேவன்தங்கம்மு. கருணாநிதிசிவம் துபேபாஸ்காவெந்து தணிந்தது காடுதமிழ்நாடு அமைச்சரவைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிவிளையாட்டுமீனா (நடிகை)பூக்கள் பட்டியல்முருகன்திருப்பூர் மக்களவைத் தொகுதிதமிழச்சி தங்கப்பாண்டியன்வேதாத்திரி மகரிசிகாதல் கொண்டேன்ரயத்துவாரி நிலவரி முறைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்யானைகர்ணன் (மகாபாரதம்)சிந்துவெளி நாகரிகம்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்நருடோஐஞ்சிறு காப்பியங்கள்கேபிபாராஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2தமிழ் இலக்கணம்கொல்லி மலைசிலிக்கான் கார்பைடுஅருணகிரிநாதர்கோயம்புத்தூர்பரிவர்த்தனை (திரைப்படம்)கண்ணப்ப நாயனார்பறையர்ஐரோப்பாதஞ்சைப் பெருவுடையார் கோயில்வடிவேலு (நடிகர்)நபிசைவத் திருமுறைகள்விண்ணைத்தாண்டி வருவாயாபி. காளியம்மாள்இராமர்திருமந்திரம்ஆண்டு வட்டம் அட்டவணைமங்கோலியாஉட்கட்டமைப்புசிதம்பரம் நடராசர் கோயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஆழ்வார்கள்மட்பாண்டம்தேம்பாவணிஆனைக்கொய்யாநெல்லியாளம்விஜயநகரப் பேரரசுஇசுலாமிய நாட்காட்டி🡆 More