இலக்கணம் காலம்

காலம் என்பது இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும்.

இந்த முக்காலப் பாகுபாடு எல்லா மொழிகளிலும் உண்டு. எல்லா மொழிகளிலும் வினைச்சொற்கள் காலம் காட்டுவனவாக அமைந்துள்ளன.

கால விளக்கம்

இலக்கணத்தில் காலம் என்பது, ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகிறது என்பதைக் காட்டும் இலக்கணக் கூறு ஆகும். ஒரு செயல் பேசப்படும் நேரத்துக்கு முன்னரா, அதே நேரத்திலா அல்லது பின்னரா என்பதைக் குறித்துக் காட்டுவதே காலம். தமிழ் இலக்கணத்தில் காலம், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பது இறந்தகாலம், அந்நேரத்தில் நடந்துகொண்டு இருப்பவற்றைக் குறிப்பது நிகழ்காலம், பின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது எதிர்காலம். தமிழில் வினை சார்ந்த சொற்கள் காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்றுக் காலத்தைக் காட்டுகின்றன. காலத்தைக் காட்டும் இடைச்சொற்களைத் தொல்காப்பியர் காலக்கிளவி எனக் குறிப்பிடுகிறார். காலத்தைக் காட்டும் சொற்களாகிய காலை, இரண்டு-மணி, நேற்று போன்ற சொற்களைக் காலப்பெயர் என்பர்.

தமிழ் இலக்கண நூல்கள் தரும் விளக்கம்

தமிழ்மொழியில் காலம் காட்டும் பாங்கு இரு வகையில் அமையும். வெளிப்படையாகக் காலம் காட்டுதல் ஒருவகை. குறிப்பால் காலம் காட்டுதல் மற்றொரு வகை.

காலங்காட்டும் இடைநிலைகள்

தமிழில் காலம் காட்டுவதற்காகச் சொற்களில் பல்வேறு இடைநிலைகள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, செய்தான், செய்கின்றான், செய்வான் ஆகிய சொற்களில், செய் என்னும் வினையடியுடன் "த்", "கின்று", "வ்" ஆகிய இடைநிலைகள் சேர்ந்து முறையே இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பவற்றைக் காட்டுகின்றன.

  • செய் + த் + ஆன் ----> செய்தான்
  • செய் + கின்று + ஆன் ----> செய்கின்றான்
  • செய் + வ் + ஆன் ----> செய்வான்

மேற்காட்டிய இடைநிலைகள் மட்டுமன்றி மேலும் பல இடைநிலைகளும் தமிழில் காணப்படுகின்றன.

  • இறந்தகாலம் - "த்" (த், ட், ற், த்த்), "ந்த்" (ந்த், ன்ற், ண்ட்), "இன்" (ய், ன்)
  • நிகழ்காலம் - "கின்று", "கிறு"
  • எதிர்காலம் - "வ்", "ப்ப்", "ப்"

வினைத்தொகை

மூன்று காலத்தையும் காட்டும் தொகைச்சொல்லை தமிழில் வினைத்தொகை என்பர். இதனைத் தொல்காப்பியம் காலம் கரந்த பெயரெச்சம் எனக் குறிப்பிடுகிறது.

வினைமுற்றுக்களில் மட்டுமன்றி வினையாலணையும் பெயர், பெயரெச்சம், தொழிற்பெயர்கள், நிபந்தனை எச்சம், பெயரடை போன்றவற்றிலும் காலங்காட்டும் இடைநிலைகள் வருகின்றன.

அடிக்குறிப்பு

Tags:

இலக்கணம் காலம் கால விளக்கம்இலக்கணம் காலம் தமிழ் இலக்கண நூல்கள் தரும் விளக்கம்இலக்கணம் காலம் காலங்காட்டும் இடைநிலைகள்இலக்கணம் காலம் வினைத்தொகைஇலக்கணம் காலம் அடிக்குறிப்புஇலக்கணம் காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாலி (கவிஞர்)அண்ணாமலை குப்புசாமிம. கோ. இராமச்சந்திரன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இராபர்ட்டு கால்டுவெல்வேர்க்குருஇயற்கைபுங்கைமூலிகைகள் பட்டியல்கண்ணதாசன்மார்கழி நோன்புதிருநங்கைவாட்சப்காதல் தேசம்பிள்ளைத்தமிழ்சீறாப் புராணம்முன்னின்பம்கள்ளுவினோஜ் பி. செல்வம்இயற்கை வளம்மு. வரதராசன்விராட் கோலிஎஸ். ஜானகிநீக்ரோஐங்குறுநூறுபிரேமம் (திரைப்படம்)இந்தியன் (1996 திரைப்படம்)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)வன்னியர்கர்மாபிட்டி தியாகராயர்அக்கினி நட்சத்திரம்ஆனந்தம் (திரைப்படம்)பாசிசம்முதல் மரியாதைபரணி (இலக்கியம்)சூரரைப் போற்று (திரைப்படம்)செக் மொழிதாவரம்நீதிக் கட்சிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சிறுதானியம்மத கஜ ராஜாசனீஸ்வரன்இலங்கைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)காளமேகம்சுந்தர காண்டம்வணிகம்வினைச்சொல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபெயர்ச்சொல்இந்திய நாடாளுமன்றம்இரண்டாம் உலகம் (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைஐம்பூதங்கள்மூலம் (நோய்)அட்சய திருதியைஎண்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கட்டுரைநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)செப்புதமிழ்த் தேசியம்தமிழ்ஒளிதிருவருட்பாபொது ஊழிபஞ்சாப் கிங்ஸ்நாம் தமிழர் கட்சிவெப்பநிலைநெருப்புகினோவாஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நாளந்தா பல்கலைக்கழகம்நம்ம வீட்டு பிள்ளைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்🡆 More