கடற்குடுவை

Urochordata Lankester 1877

கடற்குடுவைகள்
(Tunicates)
புதைப்படிவ காலம்:கேம்பிரியக் காலம், நிலை-3–அண்மையது
PreЄ
Pg
N
[tentative]
கடற்குடுவை
பொன்வாய்க் குழற்குஞ்சம் (Polycarpa aurata)
உயிரியல் வகைப்பாடு
வகுப்புகளும் இன்னும் வகைப்படுத்தப்படாத பேரினங்களும்
  • Ascidiacea
  • Thaliacea
  • Larvacea
  • Yarnemia?
  • Shankouclava
வேறு பெயர்கள்

கடற்குடுவை அல்லது தியூனிக்காட்டா (tunicate) என்னும் உயிரினம் முதுகெலும்பில்லா ஓர் கடல்வாழ் உயிரி. இதனை முதுகுநாணித் தொகுதியில் தியுனிக்காட்டா (Tunicata) என்னும் துணைத்தொகுதியில் வைத்துக் கருதுகின்றார்கள். இந்தக் துணைத்தொகுதியை ஒருகாலத்தில் வால் எனப் பொருள்படும் கிரேக்கச்சொல்லாகிய ஔரா (οὐρά (ourá, “tail”)) என்பதோடு முதுகுநாணி (chorda) என்னும் சொல்லையும் சேர்த்து ஊரோக்கோர்டாட்டா (Urochordata) என அழைத்தனர். இன்றும் சிலநேரங்களில் இச்சொல்லால் அழைக்கப்படுவதுமுண்டு. முதுகுநாணிகளிலேயே கடற்குடுவைகள் மட்டுமே மயோமேர் (Myomere) என்று அழைக்கப்படும் குறுக்கும் நெடுக்குமாக அமைந்த (zig-zagging W- or V-shaped) தசைநார்கள் பிரிப்பை இழந்தவை (செதிள் பிளவுகள் ஒரு விலக்காக இருக்கலாம்) சில கடற்குடிவைகள் தனியாக வாழ்கின்றன, ஆனால் மற்றவை சூழ்ந்து குமுகமாக வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன. இவை குடுவை போன்ற பையில் நீர்நிரப்பி இரு குழாய் போன்ற அமைப்புகள் வழியாக நீரை உள்ளிழித்து வெளியேற்றுகின்றன. இவ்வகையில் நீரிலிருந்து தன் உணவை வடிகட்டிப்பெறுகின்றன. பெரும்பாலான கடற்குடுவைகள் பாறைகள் அல்லது கடற்தரை ஆகியவற்றில் நிலையாக ஒட்டிக்கொண்டு உயிர்வாழ்கின்றன. கடற்குடுவைகளில் உள்ள பல இனங்களைக் கடற்குமிழிப்பூ (sea tulips) கடற்கல்லீரல் ( sea livers), கடற்குழாய்க்குஞ்சம் (sea squirt) என அழைப்பர்.

இந்தக் கடற்குடுவை யினத்தின் தொல்லெச்சப் பதிவுகள் முற்காலக் கேம்பிரியக் காலத்திலேயே கிடைக்கின்றன. தோற்றமும் முழுப்பருவ வளர்ச்சியடைந்த வடிவமும் மிகவும் எளிய உடையதாயினும், புழுப்பருவத்தில் (larva) முதுகெலும்பு உயிருடலம் போன்ற முதுகுநாண் கொண்டிருப்பதைக் கண்டுரைத்துள்ளனர். கடற்குடுவையின் புறவங்கூடு போன்று அமைந்துள்ள பகுதி, புடவை போன்ற ஆடையைச் சுற்றிக்கட்டியிருப்பதுபோல் இருப்பதால் தியூனிக்கு (tunic தியூனிக்கு என்பது உரோமானியர் தம் உடலைப் போர்த்தியவாறு அணிந்த துணியாடை) என்னும் பெயரடிப்படையில் தியூனிக்கேட்டு (tunicate) என ஆங்கிலத்தில் பெயர் பெற்றது. இந்தப் புறவங்கூடு போன்ற பகுதி கார்போஐதரேட்டுகளாலும் புரதப்பொருள்களாலும் அமைந்தது.

உயிரினவகைப்பாடு

ஏறத்தாழ 2,150 கடற்குடுவை இனங்கள் உலகத்தின் கடல்களிலே காணப்படுகின்றன. பெரும்பாலானாவை ஆழங்குறைந்த இடத்தில் வாழ்கின்றன. மிகவும் அதிகமாகக் காணப்படும் ஒரு குழுவாகிய ஆசிடியன் (ascidians) என்பதில் 100 இனங்களுக்கும் குறைவானவையே 200 மீட்டருக்கும் கூடுதலான ஆழத்தில் வாழ்கின்றன. சில கடற்குடுவைகள் தனியே வாழ்வன. இவை கடற்தரையில் ஒட்டிக்கொண்டு வாழ்பவை. ஆனால் மற்றவை குழுவாகக் கூட்டமாக வாழ்பவை. பெரும்பாலானாவை பாறை, பவளப்பாறை, கிளிஞ்சல் கடற்களையினம் (seaweed) கப்பல் முதலான கலங்களில் அடிப்பகுதி ஆகிய இடங்களில் ஒட்டிக்கொண்டிருப்பவை. இவை பலவும் பல நிறங்களிலும் ஒளிகசிவுடையது போன்ற நிறங்களிலும் காணப்படுகின்றன. பலவும் விதைகள், கொடிமுந்திரி அல்லது திராட்சைப் பழங்கள், சுரைக்காய் வடிவங்கள்,உருளைகள் போன்ற பல்வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் பியூரா தடித்தோல் (Pyura pachydermatina) என்னும் ஒன்று நெடுங்காம்புடைய கடற்குமிழ்ப்பூ (தியூலிப்பு, tulip) ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

கடற்குடுவைகளை (தருணிக்காட்டா, Tunicata) முதன்முதலாக இழான் பாப்டிசிட்டே இலமார்க்கு (Jean-Baptiste Lamarck) என்னும் உயிரினவறிஞர் 1816 இல் அடையாளப்படுத்தினார். 1881 இல் பிரான்சிசு மைத்துலாந்து பால்ஃபோர் (Francis Maitland Balfour) என்பார் இன்னொரு பெயராகிய ஊரோகோர்டா ("Urochorda") என்பதை மற்ற முதுகுநாணிகளுடன் உள்ள தொடர்பைக் கொண்டு வழங்கினார்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளியிணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈ. வெ. கி. ச. இளங்கோவன்பிச்சைக்காரன் (திரைப்படம்)மூலம் (நோய்)கார்த்திக் ராஜாதிருக்குறள்கொன்றை வேந்தன்திருமந்திரம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சட்டவியல்ஜன கண மனடங் சியாவுபிங்காச நோய்நீர்நூஹ்தேவேந்திரகுல வேளாளர்கூகுள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்குதிரைஅறுசுவைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சங்கத்தமிழன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசிவன்பக்தி இலக்கியம்நான்மணிக்கடிகைநெய்தல் (திணை)கரிகால் சோழன்குலசேகர ஆழ்வார்தமிழ்ப் புத்தாண்டுதனுஷ்கோடிசிவனின் 108 திருநாமங்கள்குடிப்பழக்கம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்உலக நாடக அரங்க நாள்பதுருப் போர்இந்திய உச்ச நீதிமன்றம்பெ. சுந்தரம் பிள்ளைஈரோடு மாவட்டம்இந்தியத் துணைக்கண்டம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)பாரிதொடர்பாடல்பட்டினத்தார் (புலவர்)வாரிசுகல்பனா சாவ்லாபரிபாடல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விநாயக் தாமோதர் சாவர்க்கர்காளமேகம்பச்சைக்கிளி முத்துச்சரம்பொன்னியின் செல்வன்எல். இராஜாபால் (இலக்கணம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தொலைக்காட்சிகல்லணைமதுரகவி ஆழ்வார்மார்ச்சு 27களவழி நாற்பதுதாவரம்சூரியக் குடும்பம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வாதுமைக் கொட்டைதமிழர் கலைகள்உயிர்ச்சத்து டிசப்ஜா விதைபத்துப்பாட்டுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மிருதன் (திரைப்படம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கட்டற்ற மென்பொருள்தமிழ் ராக்கர்ஸ்முதலாம் கர்நாடகப் போர்மருத்துவம்இயேசுபுலிஒற்றைத் தலைவலி🡆 More