எமினெம்

எமினெம் மற்றும் ஸ்லிம் ஷேடி ( ஆங்கிலத்தில் EMINEM மற்றும் Slim Shady ) என்றழைக்கப்படும் மார்ஷல் ப்ரூஸ் மாதர்ஸ் III அமெரிக்காவின் மிகப்பிரபலமான ராப் இசைக்கலைஞர், பாடலாசிரியர், பாடல் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்.

தமது தனிப்பட்ட பாடல்கள் மட்டும் இல்லாமல் D12, Bad Meets Evil, Royce da 5'9" ஆகிய இசைக்குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். உலகில் அதிக பாடல்கள் விற்பனை செய்த இசைக்கலைஞர்களுள் ஒருவர் இவர். இவருடைய பாடல்கள் எட்டு கோடியே அறுபது இலட்சம் பிரதிகளைத் தாண்டி அகில உலகம் முழுவதும் விற்பனையாகியிருக்கின்றன. இதன் காரணமாக 2000த்தின் தொடக்கங்களில் இவர் விற்பனையின் அடிப்படையில் இவர் மிகப்பிரபலமான இசைக்கலைஞராக அறியப்பட்டார். ரோலிங் ஸ்டோன் போன்ற பல பத்திரிக்கைகள் இவரை மிகச்சிறந்த இசைக்கலைஞர்களுள் ஒருவராக அறிவித்துள்ளன. மேலும் ராப் இசைக்கலைஞர் வரிசையில் இவருக்குத்தான் இப்பொழுது முதலிடம்.[சான்று தேவை] ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை இவரை ஹிப் ஹாப்பின் ராஜா என்று பாராட்டியது. எமினெம் என்பது மார்ஷல் மாதர்ஸின் சுருக்கமான எம் அண்ட் எம் இன் கலப்பே ஆகும்.

எமினெம்
எமினெம்
எமினெம்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஅக்டோபர் 17, 1972 (1972-10-17) (அகவை 51) செயிண்ட் ஜோசப், மிசோரி, ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்டிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஹிப் ஹொப்
தொழில்(கள்)ராப்பர், தயாரிப்பாளர், நடிகர்
இசைத்துறையில்1996 – இன்று வரை

1996இல் இன்ஃபினிட் ஆல்பம் வெளிவந்த பிறகு 1999இல் த ஸ்லிம் ஷேடி LP மூலம் பிரதான பிரபலத்தன்மை அடைந்தார். த ஸ்லிம் ஷேடி LPக்காக சிறந்த ராப் இசை ஆல்பத்திற்கான கிராமிவிருதைப் பெற்றார். இவரது அடுத்த இரண்டு ஆல்பங்களான த மார்ஷல் மாதர்ஸ் LP மற்றும் த எமினெம் ஷோ இவருக்கு கிராமிவிருதை பெற்றுதந்தது. இதனால் முதல் முறையாகத் தொடர்ந்து மூன்று முறை சிறந்த ராப் LP-க்காக கிராமி விருது வென்ற பெருமையை எமினெம் பெற்றார். இதை தொடர்ந்து 2004இல் ஆன்கோர் வெளிவந்தது. 2005இன் இசைப்பயணத்திற்குப்பிறகு இவர் மிகுந்த இடைவெளி எடுத்துக்கொண்டார். மே 15 2009இல் இவரின் ரிலாப்ஸ் ஆல்பம் வெளியானது. இது அந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த இவரது முதல் இசை ஆல்பமாகும். 2010இல் இவரது ஐந்தாவது ஸ்டூடியோ ஆல்பமான ரெகவரி வெளிவந்து உலகளாவிய வெற்றி பெற்று 2010இன் சிறந்த விற்பனையான ஆல்பமாக வந்தது. ரிலாப்ஸ், ரெகவரி ஆகிய இவ்விரண்டும் கிராமி வென்றது. எமினெம் தம் வாழ்வில் இதுவரை 13 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். உலகில் அதிக ராப் இசை ஆல்பம் விற்ற இவரது எட்டாவது ஆல்பமான த மார்ஷல் மாதர்ஸ் LP 2 நவம்பர் 15 2013இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிங் மாதர்ஸ் (King Mathers) என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

ஷேடி ரெகர்ட்ஸ் எனப்படும் இசைப்பதிவு, Shade 45 எனும் வானொலி தடம் ஆகியவற்றைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். 8 மைல் எனப்படும் ஹாலிவுட் படம் மூலமாக சினிமாத்துறையிலும் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself)என்னும் பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார். இவ்விருதை வென்ற முதல் ராப் இசைக்கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை மற்றும் தொழில்

எமினெம் மார்ஷல் புரூஸ் மாதர்ஸ் ஜூனியர் (பிறப்பு: சி. 1951) மற்றும் டெபோரா ஆர் "டெப்பி" நெல்சன் (1955 இல் பிறந்தவர்)ஆகிய பெற்றோருக்கு அக்டோபர் 17, 1972 அன்று மார்ஷல் புரூஸ் மூன்றாம் மாதர்ஸாக செயின்ட் ஜோசப், மிசோரியில், பிறந்தார். எமினெம் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்காட்டிஷ், மற்றும் சுவிஸ் வம்சாவளியை சேர்ந்தவர். 14 வயதில், அவர் உயர் பள்ளி நண்பர் மைக் ரூபியுடன் இணைந்து பாடத் தொடங்கினார். அவர்கள் இருவரும் "மனிக்ஸ்" மற்றும் "எம் & எம்," ஆகிய பெயர்களை ஏற்றுக்கொண்டனர். இதுவே பின்னர் எமினெம் என மாறியது.

அறக்கட்டளை

எமினெம் குறைபாடுடைய இளைஞர்களுக்கு உதவ, மார்ஷல் மாதர்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் தனது சொந்த அறப்பணி மன்றத்தை நிறுவினார். இது அடிக்கடி நார்மன் யட்டூமா என்ற டெட்ராய்ட் வழக்கறிஞர் நிறுவிய தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யும்.

விளம்பர படங்களில்

எமினெம் சூப்பர் பவுல் XLV போது ஒளிபரப்பப்பட்ட இரண்டு விளம்பரங்களில் இடம்பெற்றார். முதல் விளம்பரம் லிப்டன் பிரிஸ்க் ஐஸ் தேயிலைக்கானது. ஒரு களிமண் அனிமேசன் உருவமாக அவர் இதில் இடம்பெற்றார். அடுத்தது சூப்பர் பவுல் வரலாற்றில் மிக நீண்ட (இரண்டு நிமிடம்) விளம்பரமாக இருந்தது. அது டெட்ராய்ட்டில் அவர் பயணம் செய்து பாக்ஸ் தியேட்டரில் ' ' இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் ' ' பாடல் பின்னனியில் பாடிக்கொண்டிருக்க மேடையில் ஏறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுருந்தது.

குடும்ப வாழ்க்கை

எமினெம் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குறியதாய் இருந்து வருகிறது. அவர் உயர்நிலை பள்ளியில் சந்தித்த கிம்பர்லி அன்னே "கிம்" ஸ்காட்டை, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். எமினெம் 15 வயதில் முதலில் கிம்மை சந்தித்த போது அவருக்கு 13 வயது. அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக இருந்து வருகின்றனர். அவர்கள் மகள் ஹேலி, 1995 டிசம்பர் 25 ம் தேதி பிறந்தார். இந்த ஜோடி 1999 ல் திருமணம் செய்து கொண்டனர். 2000ல் கிம் இரண்டாவது முறையாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தண்டனை பெற்ற பிறகு விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அவர் 2001 ஆம் ஆண்டு கிம்மை விவாகரத்து செய்தார். அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மறுமணம் புரிந்து கொண்டனர். ஆனால் அவர் மீண்டும் ஏப்ரல் 2006 இல் விவாகரத்து தாக்கல் செய்ததோடு அவர்கள் இரண்டாவது திருமணம் முடிவுக்கு வந்தது.

படைப்புகள்

ஆல்பம்கள்

  • 1996: இன்ஃபினிட்
  • 1997: த ஸ்லிம் ஷேடி EP
  • 1999: த ஸ்லிம் ஷேடி LP
  • 2000: த மார்ஷல் மாதர்ஸ் LP
  • 2002: த எமினெம் ஷோ
  • 2004: ஆன்கோர்
  • 2008: ஐந்தாம் ஆல்பம் (இதுபரை பெயர் இல்லை)

நடித்த திரைப்படங்கள்

  • ட ஹிப் ஹாப் விச் (2000), அவர்தாமே
  • த வாஷ் (2001), கிரிஸ்
  • 8 மைல் (2002), ஜிம்மி "பி. ராபிட்" ஸ்மித் ஜூனியர்
  • ஹேவ் கன் வில் டிராவல் (2008), பாலடின்

மேற்கோள்கள்

Tags:

எமினெம் வாழ்க்கை மற்றும் தொழில்எமினெம் அறக்கட்டளைஎமினெம் விளம்பர படங்களில்எமினெம் குடும்ப வாழ்க்கைஎமினெம் படைப்புகள்எமினெம் மேற்கோள்கள்எமினெம்விக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மூகாம்பிகை கோயில்ஒத்துழையாமை இயக்கம்பெண்களின் உரிமைகள்மருது பாண்டியர்தமிழ் இலக்கியம்பீப்பாய்தசாவதாரம் (இந்து சமயம்)இரட்சணிய யாத்திரிகம்கேரளம்மயக்கம் என்னசின்னம்மைமதுரைக்காஞ்சிஏப்ரல் 25சங்க இலக்கியம்தைப்பொங்கல்திருநங்கைசேரர்இலவங்கப்பட்டைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்வெப்பநிலைகொங்கு வேளாளர்சூரியக் குடும்பம்சினைப்பை நோய்க்குறிஇந்தியத் தேர்தல் ஆணையம்தமிழில் சிற்றிலக்கியங்கள்முதற் பக்கம்தளபதி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சித்திரம் பேசுதடி 2தன்வினை / பிறவினை வாக்கியங்கள்தஞ்சாவூர்ஐங்குறுநூறு - மருதம்தேவயானி (நடிகை)கருக்காலம்சிங்கம்மியா காலிஃபாஇந்தியாமுத்துராஜாஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கவிதைதமிழர் பண்பாடுசீவக சிந்தாமணிதிருவிளையாடல் புராணம்தமிழ் இணைய மாநாடுகள்பாரத ஸ்டேட் வங்கிபகவத் கீதைஜெயகாந்தன்பரணி (இலக்கியம்)திருமலை நாயக்கர் அரண்மனைஅஸ்ஸலாமு அலைக்கும்தொல்காப்பியம்சுடலை மாடன்தனுசு (சோதிடம்)இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்சிவபுராணம்திருப்பூர் குமரன்மு. மேத்தாஎட்டுத்தொகை தொகுப்புசாகித்திய அகாதமி விருதுஇந்திய மக்களவைத் தொகுதிகள்பொதுவுடைமைசிறுபாணாற்றுப்படைமனித உரிமைதிரைப்படம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஎங்கேயும் காதல்குருதி வகைசித்தர்மீனம்புவிபறவைதமிழக வெற்றிக் கழகம்திருப்பாவைபெருமாள் திருமொழிசிதம்பரம் நடராசர் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்🡆 More