என். கோபாலசாமி அய்யங்கார்

திவான் பகதூர் என்.

கோபாலசாமி அய்யங்கார் (N. Gopalaswami Ayyangar), (31 மார்ச் 1882 – 10 பிப்ரவரி 1953), இவர் முதலில் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1937 - 1943 ஆண்டுகளில் பணியாற்றியவர்.

என். கோபாலசாமி அய்யங்கார்
என். கோபாலசாமி அய்யங்கார்
இரயில்வேத் துறை அமைச்சர்
பதவியில்
1948 - 1952
பிரதம அமைச்சர், ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
பதவியில்
1937–1943
ஆட்சியாளர்ஹரி சிங்
பின்னவர்கைலாஷ்நாத் அக்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நரசிம்ம கோபாலசாமி அய்யங்கார்

31 மார்ச் 1882
தஞ்சாவூர், சென்னை மாகாணம்
இறப்புபெப்ரவரி 10, 1953(1953-02-10) (அகவை 70)
சென்னை

பின்னர் 562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினரகளில், ந. கோபாலசாமி அய்யங்காரும் ஒருவராவர். கோபாலசாமி அய்யங்கார், அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவோலை குழுவில் பணியாற்றியவர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, கோபாலசாமி அய்யங்கார், இந்திய இரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் அமைச்சராக 1948 - 1952 ஆண்டுகளில் பணியாற்றியவர்.

கல்வி மற்றும் வாழ்க்கை

தஞ்சாவூரில் பிறந்த கோபாலசாமி அய்யங்கார், பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் சட்டக் கல்வியை சென்னையில் முடித்தவர். 1904ல் சிறிது காலம் சென்னை பச்சையப்பா கல்லூரியில் உதவிப்பேரராசிரியராக பணிபுரிந்தார்.

பணிகள்

1905ல் சென்னை மாகாண குடிமைப் பணியில் 1905 முதல் 1919 முடிய துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார். 1920 மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற பின், 1921ல் உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பதிவாளராக ஏழாண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் குண்டூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஊராட்சி அமைப்புகளை நிறுவினார்.

1932 முதல் 1937 முடிய சென்னை மாகாண பொதுப் பணித் துறை மற்றும் வருவாய் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். இறுதியாக ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1937 முதல் 1943 முடிய பணியாற்றினார். பின்னர் இந்திய அரசியலமப்பு நிர்ணய மன்றத்தின், அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவோலைக் குழுவில் பணியாற்றினார். ஜவகர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1948 முதல் 1952 வரை பணியாற்றினார். பின் 1952 - 1953ல் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். கோபால்சாமி அய்யங்கார் சம்மு காசுமீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 கீழ் சிறப்புத் தகுதிகள் பெற்றுக் கொடுத்தவர் ஆவார்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

என். கோபாலசாமி அய்யங்கார் கல்வி மற்றும் வாழ்க்கைஎன். கோபாலசாமி அய்யங்கார் பணிகள்என். கோபாலசாமி அய்யங்கார் மேற்கோள்கள்என். கோபாலசாமி அய்யங்கார் வெளி இணைப்புகள்என். கோபாலசாமி அய்யங்கார்ஜம்மு காஷ்மீர் இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரசாந்த்ஜிமெயில்இராமலிங்க அடிகள்புறப்பொருள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பாசிப் பயறுசிவபெருமானின் பெயர் பட்டியல்பித்தப்பைசுப்பிரமணிய பாரதிகொடைக்கானல்திருவள்ளுவர்அழகர் கோவில்கொன்றை வேந்தன்உன்னை நினைத்துமழைநீர் சேகரிப்புபத்து தலமஞ்சள் காமாலையூடியூப்சனீஸ்வரன்ஈரோடு தமிழன்பன்பாரிசுய இன்பம்திட்டம் இரண்டுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்திய அரசியல் கட்சிகள்பதிற்றுப்பத்துதிருத்தணி முருகன் கோயில்எங்கேயும் காதல்பௌத்தம்சிங்கம் (திரைப்படம்)கல்லணைசோல்பரி அரசியல் யாப்புகாதல் (திரைப்படம்)சமுத்திரக்கனிதமிழ்நாட்டின் நகராட்சிகள்மரம்கருப்பையாவரும் நலம்குறிஞ்சிப் பாட்டுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பெயரெச்சம்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவெண்குருதியணுமீனா (நடிகை)அண்ணாமலையார் கோயில்கங்கைகொண்ட சோழபுரம்மகேந்திரசிங் தோனிவாகைத் திணைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இன்னா நாற்பதுமுத்தொள்ளாயிரம்இந்திய நாடாளுமன்றம்பள்ளர்கணியன் பூங்குன்றனார்கடையெழு வள்ளல்கள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வன்னியர்சைவ சமயம்வேற்றுமையுருபுபறையர்யுகம்கள்ளர் (இனக் குழுமம்)சுகன்யா (நடிகை)நாயக்கர்திருநாவுக்கரசு நாயனார்பாரதி பாஸ்கர்தமிழர் நெசவுக்கலைவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்விளம்பரம்திரைப்படம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நிதிச் சேவைகள்மலைபடுகடாம்பரிதிமாற் கலைஞர்ஆய்த எழுத்து (திரைப்படம்)🡆 More