எட்வின் ஹபிள்

எட்வின் பாவெல் ஹபிள் எனும் முழுப்பெயர் கொண்ட எட்வின் ஹபிள் (Edwin Hubble, நவம்பர் 20, 1889 – செப்டெம்பர் 28, 1953) ஒரு புகழ் பெற்ற வானியலாளர் ஆவார்.

இவரது தந்தையார் மிசோரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு காப்புறுதித் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் இல்லினோய்சில் உள்ள வீட்டனுக்கு இடம் பெயர்ந்தது. எட்வின் ஹபிள் இளமைக் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இவர் கல்வித் திறமையிலும் பார்க்க விளையாட்டுத் திறமைக்காகவே பெயர் பெற்றிருந்தார்.

எட்வின் ஹபிள்
பிறப்புஎட்வின் பாவெல் ஹபிள்

(1889-11-20)நவம்பர் 20, 1889
மார்சுபீல்டு, மிசோரி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 28, 1953(1953-09-28) (அகவை 63)
சான் மரீனோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வாழிடம்அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
மவுன்ட் வில்சன் பார்வையரங்கம்
கல்வி கற்ற இடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஹபிள் தொடர்
பின்பற்றுவோர்ஆலன் சான்டேஜ்
விருதுகள்நியூகோம்ப் பரிசு 1924
புரூஸ் பதக்கம் 1938
பிராங்கிளின் பதக்கம் 1939
ராயல் வானியல் குழுவின் தங்க பதக்கம் 1940
லீஜியன் ஆஃப் மெரிட் 1946
கையொப்பம்
எட்வின் ஹபிள்

இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், கணிதம், வானியல் என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் நியூ அல்பனியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும், கூடைப்பந்துப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் கெண்ட்டகியில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் இராணுவ சேவையில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துறைக்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார். இவர் எழுதிய ஹபிள் விதி அண்டம் விரிந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகிறது.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து எட்வின் ஹபிள் நினைவாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை ஏப்ரல் 24, 1990இல் அனுப்பியது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

காப்புறுதிகுடும்பம்மிசோரிவானியலாளர்விளையாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அமலாக்க இயக்குனரகம்சென்னை சூப்பர் கிங்ஸ்கள்ளுபனைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சங்க இலக்கியம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்பாரதிய ஜனதா கட்சிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)பிரேமம் (திரைப்படம்)தெலுங்கு மொழிகாரைக்கால் அம்மையார்சிலம்பம்ஆனைக்கொய்யாசெயங்கொண்டார்பதிற்றுப்பத்துநாயன்மார்ரெட் (2002 திரைப்படம்)எயிட்சுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்விந்துகபிலர் (சங்ககாலம்)விபுலாநந்தர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மழைகருத்தரிப்புஇரட்டைக்கிளவிவிஜயநகரப் பேரரசுஇந்திய அரசியலமைப்புஅம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ் இலக்கியம்குலசேகர ஆழ்வார்கண்ணகிசோழர்புதுச்சேரிவாட்சப்காடுவெட்டி குருஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பூனைமருதமலை முருகன் கோயில்சீறாப் புராணம்பால் (இலக்கணம்)படையப்பாசூரரைப் போற்று (திரைப்படம்)மாதம்பட்டி ரங்கராஜ்நயன்தாராமுகலாயப் பேரரசுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஅண்ணாமலையார் கோயில்கபிலர்வெ. இறையன்புஇன்ஸ்ட்டாகிராம்சூரியக் குடும்பம்சினேகாஜெ. ஜெயலலிதாசீரகம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கார்லசு புச்திமோன்ஆறுமுக நாவலர்விநாயகர் அகவல்திரவ நைட்ரஜன்தெருக்கூத்துமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஎலுமிச்சைபௌத்தம்தமிழ்த் தேசியம்இயேசுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019உடுமலை நாராயணகவிகாசோலைஆண் தமிழ்ப் பெயர்கள்ஜே பேபிபொது ஊழிபுதினம் (இலக்கியம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்🡆 More