எடி மர்பி: அமெரிக்க நடிகர்

எட்வர்ட் ரீகன் எடி மர்பி (Eddie Murphy, பிறப்பு ஏப்ரல் 3, 1961) என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார்.

பாக்ஸ் ஆபிசில் வெளியாகும் படங்களில் அமெரிக்காவில் 4 வது மிக உயர்ந்த வசூல் செய்யும் நடிகராக கருதப்படுகிறார். 1980 ல் இருந்து 1984 "சாட்டர்டே நைட் லைவ்" என்னும் தொலைக்காட்சி தொடரில் நகைச்சுவையாளராக பணியாற்றி உள்ளார். காமெடி சென்ட்ரல் வெளியிட்ட சிறந்த 100 நகைச்சுவையாளர்களில் இவர் 10ஆம் இடத்தில் உள்ளார்.

எடி மர்பி
201௦ல் மர்பி திர்பெக்கா திரைப்பட திருவிழாவில்
201௦ல் மர்பி திர்பெக்கா திரைப்பட திருவிழாவில்
இயற்பெயர் எட்வர்ட் ரீகன் மர்பி
பிறப்பு ஏப்ரல் 3, 1961 (1961-04-03) (அகவை 63)
புரூக்ளின், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
Medium திரைப்படங்கள், தொலைக்காட்சி, நகைச்சுவை, இசை, புத்தகங்கள்
தேசியம் அமெரிக்கர்
நடிப்புக் காலம் 1980–தற்காலம்
தலைப்பு(கள்) பரவலர் பண்பாடு, மாந்த பாலுணர்வியல்
செல்வாக்கு செலுத்தியோர் ராபின் வில்லியம்ஸ்

48 மணி நேரங்கள், பிவெர்லி ஹில்ஸ் காப் சீரிச், டிரேடிங் பிளேசிஸ் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். 2007 ஆம் ஆண்டில் ட்ரீம் கேர்ள்ஸ் திரைப்படத்தில் பாடகராக நடித்த இவரின் கதாப்பத்திரத்திற்கு சிறந்த ஆண் துணைக் கதாப்பாத்திரத்திற்கான அகாதமி விருது பெற்றார்.

மர்பி நடிகராக மட்டும் அல்லாது பின்னணி குரல் கொடுப்பவராகவும் பணிபுரிந்துள்ளார்.குறிப்பாக தெ பி ஜேஸ், ட்ரீம் ஒர்க் நிறுவனத்தின் ஸ்ரெக் தொடரில் டாங்கி, வால்ட் டிஸ்னியின் 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த முலன் திரைப்படத்தில் சீன டிராகன் முசு போன்ற கதாப்பாத்திரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். 2014 ஆம் ஆண்டின்படி இவரின் திரைப்படங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் $3.8 பில்லியன் வசூலையும் உலக அளவில் $6.6 பில்லியன் வசூலையும் பெற்றது. 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிக வசூலைப் பெற்ற நடிகரானார்.

ஜான் எஃப். கென்னடி நிகழ்த்துக் கலை மையம் இவருக்கு அமெரிக்காவின் சிறந்த நகைச்சுவையாளருக்கான மார்க் ட்வைன் விருது வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

எட்வர்ட் ரீகன் மர்பி ஏப்ரல் 3, 1961 இல் புரூக்ளின், நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரின் தந்தை சார்லஸ் எட்வர்ட் மர்பி போக்குவரத்து காவல் அதிகாரி, நடிகர் மற்றும் நகைச்சுவையாளரும் ஆவார். தாய்லிலியன் (லேனி) தொலைபேசி இயக்குநர் ஆவார்.

மர்பிக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை 1969 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.

எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது எனது தாயும் தந்தையும் திருமண முறிவு பெற்றனர். எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது எனது தந்தை இறந்துவிட்டார். எனவே அவர்களைப் பற்றிய நினைவுகள் எனக்குத் தெளிவாக ஞாபகம் இல்லை. ஒரு பெண் எனது தந்தையை குத்தினார். எனக்கு நீ கிடைக்கவில்லை எனில் யாருக்கும் கிடைக்கக் கூடாது எனும் மனநிலையால் இது ஏற்பட்டது.ஒரு நாள் ஒருவர் என்னிடம் உனது தந்தைக்கு நடந்த சம்பவத்தினால் தான் நீயும் எந்தப் பெண்களின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய் எனக் கூறினார். இவ்வாறு மர்பி கூறினார்.

இவருக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தாய் லிலியனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் மர்பியும் அவரது மூத்த சகோதரர் சார்லியும் ஒரு ஆண்டு வளர்ப்புப் பிள்ளைகளாக வளர்ந்தனர். இந்த ஒரு வருடகலத்தில் தான் தனது நகைச்சுவை உணர்வு அதிகரித்ததாக நேர்காணலின் போது மர்பி கூறினார். பின் நியூயார்க் நகரத்தில் உள்ள ரூஸ்வெல்ட் எனும் சிறு கிராமத்தில் மர்பியும் அவரது மூத்த சகோதரரும் அவரது தாய் லிலியன் மற்றும் மாற்றாந் தந்தையான வெர்னான் லின்சினுடன் வாழ்ந்து வந்தனர்.வெர்னான் லின்ச் குளிர்களி தொழிற்சாலை முகவராக பணிபுரிந்தார்.

இவர் பில் காஸ்பி மற்றும் ரிச்சர்டு பிரையர் ஆகியோரால் ஊக்கமடைந்தார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எடி மர்பி

Tags:

1961அமெரிக்க ஐக்கிய நாடுஎழுத்தாளர்ஏப்ரல் 3தயாரிப்பாளர் (திரைப்படம்)நகைச்சுவைநடிகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவாசகம்மோகன்தாசு கரம்சந்த் காந்திகருச்சிதைவுவிந்துமலைபடுகடாம்திருப்பாவைபத்துப்பாட்டுஜெயம் ரவிஆதம் (இசுலாம்)முகம்மது இசுமாயில்கொச்சி கப்பல் கட்டும் தளம்சிறுகதைஇமாம் ஷாஃபிஈநீதிக் கட்சிஇராவணன்இந்திய ரூபாய்அண்டர் தி டோம்ஹஜ்நெல்தமிழ்ப் புத்தாண்டுமார்ச்சு 27திருப்பதிஅழகர் கோவில்ஆப்பிள்விஜயநகரப் பேரரசுஇந்திய தேசியக் கொடிசுயமரியாதை இயக்கம்மொழிஇலங்கைதேசிக விநாயகம் பிள்ளைஅரிப்புத் தோலழற்சிஓவியக் கலைநாயன்மார் பட்டியல்சோழிய வெள்ளாளர்சிறுநீரகம்பெ. சுந்தரம் பிள்ளைவிநாயகர் அகவல்ஜவகர்லால் நேருநபிகருத்தரிப்புஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்பல்லவர்முகலாயப் பேரரசுமேற்கு வங்காளம்பெரியம்மைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்தியாம. கோ. இராமச்சந்திரன்தனுஷ் (நடிகர்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வல்லம்பர்சிலேடைசுடலை மாடன்கபடிசட் யிபிடிசிவாஜி கணேசன்பௌத்தம்தாஜ் மகால்நாய்புறாமருத்துவம்அக்பர்காதல் மன்னன் (திரைப்படம்)கீழடி அகழாய்வு மையம்ஹூதுஅரைவாழ்வுக் காலம்யோகம் (பஞ்சாங்கம்)திருமணம்ஐந்து எஸ்தெருக்கூத்துமேகாலயாஐங்குறுநூறுதமிழர் நிலத்திணைகள்யாவரும் நலம்ஈ. வெ. இராமசாமிஆதி திராவிடர்நந்தி திருமண விழாதமிழ்நாடு அமைச்சரவை🡆 More