ஈரானிய குர்திஸ்தான்

ஈரானிய குர்திஸ்தான் அல்லது கிழக்கு குர்திஸ்தான் ( குர்திஷ் : Rojhilatê Kurdistanê , ڕۆژھەڵاتی کوردستان‎ ), என்பது ஈராக்கு மற்றும் துருக்கியின் எல்லைப் பகுதியில் குர்துகள் வசிக்கும் வடமேற்கு ஈரானின் சில பகுதிகளைக் குறிப்படப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வமற்ற பெயர் ஆகும்.

இதில் மேற்கு அசர்பைசான் மாகாணம், [குறிப்பு 1] குர்திஸ்தான் மாகாணம் மற்றும் கெர்மான்ஷா மாகாணம் ஆகியவை அடங்கும்.

குர்துகள் பொதுவாக வடமேற்கு ஈரானை அகண்ட குர்திஸ்தானின் நான்கு பகுதிகளில் ஒன்றாக கருதுகின்றனர். இந்த அகண்ட குர்திஸ்தானில் தென்கிழக்கு துருக்கி ( வடக்கு குர்திஸ்தான் ), வடக்கு சிரியா ( மேற்கு குர்திஸ்தான் ) மற்றும் வடக்கு ஈராக் ( தெற்கு குர்திஸ்தான் ) ஆகிய பகுதிகளும் அடங்கும்.

கடைசியாக 2006 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஈரானில் குர்து மக்கள் வசிக்கும் நான்கு மாகாணங்களான - மேற்கு அஜர்பைஜான், கெர்மன்ஷா மாகாணம், குர்திஸ்தான் மாகாணம் மற்றும் இலம் மாகாணம் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகை 6,730,000 ஆகும். இலம் மாகாணத்தின் தெற்குப் பகுதிகளில் லர்ஸின் இடைப்பள்ளத்தில் வாழ்கின்றனர்.

ஈரானிய குர்துகள் ஈரானின் மொத்த மக்கள் தொகையில் 7-10% ஆவர். ஈரானிய குர்துகளில் பெரும்பான்மையானவர்கள் சியா இசுலாமியர்கள் என்று ஒரு பக்க சான்றுகள் குறிப்பிடுகின்றன, மற்றொரு பக்கம் ஈரானிய குர்துகள் பெரும்பாலும் சுன்னி இசுலாமியர்கள் என்றும் குறிப்பிடுகின்றன. ஷியா குர்துகள் ஃபெய்லி என்று அழைக்கப்படுகிறார்கள். குர்து ஜாஃப் பழங்குடியினர் இலம் மாகாணம் மற்றும் குர்திஸ்தான் மற்றும் ஹமதன் மாகாணங்களின் சில பகுதிகளிலும் இதைத் தவிர, அவர்கள் கெர்மன்ஷா மற்றும் கெனேகினைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். வடகிழக்கு ஈரானில் உள்ள கோரசன் மாகாணத்தின் குர்துகளும் ஷியா இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள். ஈரானியப் புரட்சியின் போது, முக்கிய குர்திஷ் அரசியல் கட்சிகள் ஷியா குர்துகளை உள்வாங்குவதில் தோல்வியுற்றன, அந்தக் காலத்தில் சுயாட்சி கோரிக்கையில் அக்கறை இருக்கவில்லை. எவ்வாறாயினும், 1990 களில் இருந்து குர்திஷ் தேசிய உணர்வு ஷியா குர்திஷ் பகுதியின் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களிடம் நுழைந்துள்ளது. இதற்கு காரணங்களில் ஒன்றாக வடக்கே குர்துகளை வன்முறையில் மூலமாக அடக்கும் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த சீற்றம் காரணமாக அமைந்த‍து.

வரலாறு

குர்திஷ் அரச வம்சங்கள்

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, இரண்டு குர்திஷ் வம்சங்கள் இந்த பிராந்தியத்தை ஆண்டன. அவை ஹசன்வேஹிட்ஸ் (959-1015) மற்றும் அயாரிட்ஸ் (990–1117) (கெர்மன்சா, தினாவார், இலம் மற்றும் கானாகின் ஆகிய பகுதிகளில்) ஆகியவை ஆகும்.  1174 முதல் 1254 முடிய லெவண்ட் பகுதியை குர்து இன அய்யூப்பிய வம்சத்தின் சலாகுத்தீன் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் 80 ஆண்டுகள் லெவண்ட் பிரதேசத்தை ஆண்டனர். 14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட அர்தலான் அரசு, சர்தியாவா (கரடாக்), கானாகின், கிர்குக், கிஃப்ரி மற்றும் ஹவ்ராமன் ஆகிய பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. ஷராசூரில் அரசின் தலைநகரம் இன்றைய ஈராக்கிய குர்திஸ்தானின் ஷராசூரில் முதன்முதலில் இருந்தது, ஆனால் பின்னர் சின்னேவுக்கு (சனந்தாஜ்) (இன்றைய ஈரான்) மாற்றப்பட்டது.   கஜார் மன்னர் நாசர்-அல்-தின் ஷாவின் (1848-1896) ஆட்சி 1867 இல் முடியும் வரை அர்தலன் வம்சம் இப்பகுதியை தொடர்ந்து ஆட்சி செய்தது.

ஈரானுக்குள் செயல்படும் குர்திஷ் போராளிக் குழு

குர்திஸ்தான் தளையற்ற வாழ்க்கை கட்சி அல்லது பி.ஜே.கே. அமைப்பு குறித்து 2009 பிப்ரவரி 4 அன்று அமெரிக்காவின்   பயங்கரவாத மற்றும் நிதி புலனாய்வுக்கான கருவூல துணை செயலாளர் ஸ்டூவர்ட் லெவி குறிப்பிடும்போது, "இன்றைய நடவடிக்கையுடன், குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி உடனான பிஜேக்கின் (குர்திஸ்தானின் தளையற்ற வாழ்க்கை கட்சி) பயங்கரவாத உறவுகளை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம், மேலும் துருக்கி தன் குடிமக்களை இவர்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அதன் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்." என்றார்.

குறிப்புகள்

குறிப்புகள்

Tags:

ஈரானிய குர்திஸ்தான் வரலாறுஈரானிய குர்திஸ்தான் குறிப்புகள்ஈரானிய குர்திஸ்தான் குறிப்புகள்ஈரானிய குர்திஸ்தான்ஈராக்குஈரான்குர்து மக்கள்குறுதித்தான் மாகாணம் (ஈரான்)கெர்மான்ஷா மாகாணம்சொரானி மொழிதுருக்கிமேற்கு அசர்பைசான் மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூப்புனித நீராட்டு விழாபாரதிய ஜனதா கட்சிஔரங்கசீப்அயோத்தி இராமர் கோயில்சுக்கிரீவன்தங்கராசு நடராசன்மலையகம் (இலங்கை)நரேந்திர மோதிநந்திக் கலம்பகம்புதிய ஏழு உலக அதிசயங்கள்சுடலை மாடன்கருப்பசாமிஇசைவாரன் பபெட்முடியரசன்முரசொலி மாறன்உலக மனித உரிமைகள் சாற்றுரைஎட்டுத்தொகைஇன்னா நாற்பதுஸ்ரீஇந்தியாவில் இட ஒதுக்கீடுபூராடம் (பஞ்சாங்கம்)ரத்னம் (திரைப்படம்)செம்மொழிதாயுமானவர்சூல்பை நீர்க்கட்டிஅண்ணாமலையார் கோயில்தமிழ்நாட்டின் நகராட்சிகள்முக்கூடல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அழகர் கோவில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகருப்பைஎழுத்து (இலக்கணம்)ஹாட் ஸ்டார்அயோத்தி தாசர்சிங்கப்பூர்கூத்தாண்டவர் திருவிழாகடல்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்காதல் கொண்டேன்கிரியாட்டினைன்பெரியாழ்வார்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிரிசாவிஜய் (நடிகர்)பிரியா பவானி சங்கர்நந்தியாவட்டைகுறியீடுபல்லவர்தசாவதாரம் (இந்து சமயம்)ஐக்கிய நாடுகள் அவைமலைபடுகடாம்விரை வீக்கம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கும்பகோணம்தளபதி (திரைப்படம்)எதற்கும் துணிந்தவன்குற்றாலக் குறவஞ்சிபக்கவாதம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருட்டுப்பயலே 2ஆண்டு வட்டம் அட்டவணைபெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பழந்தமிழ் இசைஅன்னி பெசண்ட்புதுமைப்பித்தன்மாடுஆறுமுக நாவலர்திருமூலர்காப்பியம்சென்னை சூப்பர் கிங்ஸ்குறவஞ்சிபுதுச்சேரிமனோன்மணீயம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழ்அணி இலக்கணம்🡆 More